2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7 பகுதி 8
கிப்ட்டை அனுவிடம் கொடுத்த ரகு, “என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா அனு?”
“என்ன சார் சொல்றீங்க?”
“இந்த சார் மோர் எல்லாம் வேண்டாம். எனக்கு ஒரு பேர் வெச்சிருக்கியே, அப்படியே கூப்பிடு”
“உங்களுக்கு எப்படி தெரியும்?”
“நீ அன்னிக்கு மாடி ஆபிஸ் பிரியாகிட்ட பேசிட்டிருந்தியே, அப்போ நான் கம்ப்யூட்டர் ரூம்ல கேட்டுட்டு தான் இருந்தேன். “
அவன் கண்களை நேருக்கு நேர் பார்க்கும் திராணியின்றி “அல்லு” என்றாள்.
“ஏன் அப்படி சொன்ன?”
“எனக்கு அல்லு அர்ஜுன் ரொம்ப பிடிக்கும். நீங்களும் அல்லு மாதிரி ஸ்டைலிஷா இருக்கீங்க?”
” அழுதியானு கேட்டேன்”
“பின்னே பிறந்த நான்னு சொல்லியும் ஒரு ஹேப்பி பர்த்டேனு கூட சொல்லாம நீங்க பாட்டுக்கு போனா அழுகை வராதா?”
“உனக்கு இன்னிக்கு பர்த்டேனு முன்னமே தெரியும். போன வாரமே இந்த கிப்ட் வாங்கி வெச்சுட்டேன். பிரிச்சு பாரு”
அழகாக பேக் செய்யப்பட்ட அந்த கிட்டை பிரித்ததும் உள்ளே ரெபிடெக்ஸ் அடிப்படை ஆங்கில இலக்கணம் புத்தகம் இருந்தது. பிரித்து பார்த்தாள். அதில் “ஏக அனேக காதலுடன்” என எழுதிய வாசகங்களுக்கு கீழே ரகு பிரசாத் என கையொப்பம் இடப்பட்டிருந்தது.
தேங்க்ஸ் என்றபடி புது புத்தக வாசனையை நுகர்ந்து பார்த்தாள்.
“நிஜமா உங்களுக்கு என்ன பிடிச்சிருக்கா?”
“பிடிக்காம தான் உன்னையே பார்த்துட்டு இருந்தேனா?”
“உனக்கு க்ரேசி மோகன் நாடகம்னா பிடிக்கும்னு தெரியும். நீ தனியா போகவும் முடியாதுனு பிரியாகிட்ட சொன்ன. உனக்காக தான் ஆபிஸ்ல எல்லாரும் போகலாம்னு நச்சு பண்ணி கூட்டிட்டு போனேன்”
“இப்போ நான் உட்கார்ந்திருக்கிறது என் இடமே இல்லை. குகன் சார் கேபினுக்கு ஆப்போஸிட்ல தான் என் சீட். உன்னை இங்க உட்கார வைக்கலாம்னு முடிவான பின்னாடிதான், என் சீட்டை இங்க மாத்தினேன்”
“அக்கவுண்ட்ஸ் / இன்கம் டேக்ஸ் உனக்கு நல்லா வருது. ஆனா இங்கிலீஷ் கிராமர்ல தப்பு பண்ற. அதுக்காக தான் இந்த புக் வாங்கிட்டு வந்தேன். இதெல்லாம் பிடிக்காமதான் செய்வேனா?”
“அப்போ அந்த சீம்பால் கொண்டு வந்தது கூட எனக்காக தானா?”
“அட! என் மக்கு பொண்டாட்டி, உனக்கு அதுவே இப்பதான் புரியுதா?”
“நான் இன்னும் உங்கள கல்யாணம் பண்ணிக்கிறனே சொல்லல”
“இத தனியா வேற நீ வாய் திறந்து சொல்லணுமா? உன் ரெண்டு முட்டைக் கண்ணே சொல்லுதே ஆயிரம் சம்மதத்தை “
“அப்புறம் ஏன் நீங்க இவ்ளோ நாளா என்ட்ட சிடுசிடுனு இருந்தீங்க? என்னதான் நீங்க கோபமா பேசுனாலும் உங்க கண்ணுல நான் கோபத்தை பார்த்தது இல்லை”
“போன வாரத்துல ஒரு நாள் நான், சண்முகம் சார், குகன் சார் எல்லாம் பேசிட்டு இருந்தோம். அப்போ சண்முகம் சார் தான் சொன்னார்., ‘அந்த புது பிள்ளை உன்னை சைட் அடிக்குது போல ரகு’.
நான் சமாளிக்கிறதுக்குள்ள குகன் சார், ‘அட! நீ வேற சண்முகம், நான் தொண்டை தண்ணி வத்த வத்த செக்ஷன்ஸ் டிக்டேட் பண்ணுவேன், இவன் அந்த புள்ளையவே பார்த்துட்டு இருப்பான். சரி நாமளும் இதெல்லாம் தாண்டிதானே வந்துருக்கோம்னு கண்டுக்காம விட்டு விடுவேன்’
‘டேய் எங்களுக்கு தெரிஞ்சா தப்பில்லை. சுபாஷிணி மேடம்க்கு தெரிஞ்சா அவ்ளோதான். உன்னை உண்டு இல்லைனு பண்ணிடுவாங்க பார்த்துக்க’னு வடிவேல் சார் சொன்னார்.
அதான் அத்தைக்கு தெரிஞ்சா வம்பா போகுமேனு உன்ட்ட அப்படி நடந்துகிட்டேன். பைனல் ரிசல்ட்க்காக காத்துக் கொண்டு இருக்கிறேன். எப்படியும் பாஸாகிடுவேன். பாஸானா தான் வீட்ல இத பத்தி பேச முடியும் அனு. ரிசல்ட்டுக்கு பின்னாடி உன்ட்ட சொல்லலாம்னு இருந்தேன். அதுக்குள்ள நீயே வந்து என் பிறந்த நாள், உனக்கு மட்டும் சாக்லேட்னு கிட்டதட்ட அழுகிற மாதிரி சொன்ன, இன்னிக்கு ஆபிஸ்ல யாரும் இல்லை. எந்த பயமில்லாம பேசலாமேனு இன்னிக்கே சொல்லிட்டேன்”
“மேடம் உங்க அத்தையா ?”
“ஆமாம் அது ஒரு பெரிய கதை. விலாவரியா சொல்றேன்”
“இப்போ போய் உன் வேலையை பாரு யாராவது வர போறாங்க”
இரண்டு வாரங்கள் கழித்து…..
காலையிலேயே ரகு அனைவருக்கும் இனிப்பு கொடுத்துக் கொண்டு இருந்தான். ரகு, ராதா மேடத்திடம் “மேடம் ஸ்வீட் எடுத்துக்குங்க “
“என்ன ரகு விசேஷம்? கல்யாணமா?”
“பைனல்ஸ் ரிசல்ட் வந்துடுச்சி மேடம். நான் பாஸ் பண்ணிட்டேன்”
“கங்கிராட்ஸ் ரகு”
“தேங்க்ஸ் மேடம். நாளைக்கு அண்ணன் பொண்ணுக்கு ஆயுஷ் ஹோமம் பள்ளிபாளையம் ராயர் மடத்தில் பண்றோம். நீங்க வந்திடுங்க என்று ராதா மேடத்திடம் கூறிவிட்டு, அனுவிடம் திரும்பி “நாளைக்கு வண்டி அரேன்ஞ் பண்ணிருக்கேன். மதியம் வண்டில வந்துடுங்க” என்றான்.
ரகு சொல்லியபடி, மதியம் 1 மணிக்கு கார் வந்தது. அனு, ராதா மேடம் மற்றும் மாடி ஆபிஸ் பிரியா மூவரும் ஏறிக் கொள்ள கார் கிளம்பியது. அடுத்த பத்தாவது நிமிடத்தில் கார் பள்ளிபாளையம் ராகவேந்திரர் மடத்து வாசலில் நின்றது.
அந்த இடமே கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. ஒருபுறம் அழகு கொஞ்சும் காவிரி. கர்நாடகத்தில் பெய்த பெரு மழையால் அகண்ட காவிரியாக ஓடியது. நதியை நோக்கி ராயர் மடம் ஒரு புறமும் ஈமக் காரியங்கள் நடக்கும் இடம் ஒரு புறமாகவும் இருந்தது. வடக்கே காசி நகரில் கங்கை நதிக்கரையில் விஸ்வநாதர் ஆலயமும் மயானமும் இருப்பது போல் தெற்கே மஞ்சள் மாநகர் ஈரோட்டில் காவிரி நதிக்கரையில் சோழீஸ்வரர் ஆலயமும் மயானமும் உள்ளது.
மடத்தின் வாசலில் ரகு நின்று கொண்டு இருந்தான். இவர்கள் வந்தவுடன் அனைவரையும் வரவேற்று உள்ளே அழைத்து சென்றான். அனு பிரியாவிற்கு சிக்னல் தர, பிரியா ராதா மேடத்தை பார்த்து, “பாத்ரும் போகணும் கூட வாங்க” என்றாள்.
ரகு அனுவிடம், “வா! வா! உனக்கு ஒரு முக்கியமானவங்களை காண்பிக்கிறேன். முதலில் ராயரை தரிசிச்சுட்டு துளசியும் அக்ஷதையும் வாங்கிட்டு வா அனு!”
மடத்தின் நடுவே ராயரின் பிருந்தாவனம். ராயரை நமஸ்கரித்து விட்டு ரகுவை பார்த்து “போலாமா?” என்றாள்.
மடத்தின் இடதுபுறம் இருந்த பெரிய கூடத்தில் ஆயுஷ் ஹோமம் நடந்து முடிந்து விட்டிருந்தது. ஆங்காங்கே உறவினர்கள் குழுக்களாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அதில் ஒரு வயதான தம்பதியர் முன்னே சென்று, “தாத்தா! இது அனு, அன்னபூரணி. நம்ம ஆபிஸ்லதான் வேலை பார்க்கிறாங்க”
அனு “நமஸ்காரம் தாத்தா” என்றாள்.
“நல்லாரு குழந்தே!”
பக்கத்திலிருந்த அவர் மனைவியிடம் “மீனா! இங்கே வாயேன்! இந்த குழந்தை தான் அன்னபூரணி. உன் பொண்ணு ஆபிஸ்ல வேலை பார்க்கிறாள்”.
“நல்லாருக்கியாம்மா? உன்னை பத்தி காயத்ரி நிறைய சொல்லிருக்கா. நல்ல புத்திசாலியாம் நீ, உன்னை ஒரு நாள் வீட்டுக்கு கூட்டிட்டு வரேனு சொன்னா. ஒரு நாள் வீட்டுக்கு வாம்மா. சாப்டியாமா” என்று பரிவுடன் மீனாட்சி கேட்கவும், அனுவிற்கு அவள் பாட்டி ஞாபகம் வந்தது.
“பாட்டி, நான் அம்மாட்ட கூட்டிட்டு போறேன்”
“சரி ரகு”
“இவங்க யாருனு சொல்லலியே? அவங்க பொண்ணு ஆபிஸ்ல நான் வேலை பார்க்கிறதா சொல்றாங்க. நம்ம மேடம் பேரு காயத்ரியா? நீங்க வேற மேடத்தை அத்தைனு சொல்றீங்க, எனக்கு ஒன்னும் புரில”
“ஆமாம். சுபாஷிணி மேடமோட அப்பா அம்மா தான் இந்த தாத்தா பாட்டி. மேடமோட முழுப் பெயர் சுபாஷித காயத்ரி. வீட்ல காயத்ரி, அஃபிசியல் பேரு சுபாஷிணி . எல்லாத்துக்கும் மேல என் அம்மாவோட வெரி க்ளோஸ் பிரெண்ட்”
அதற்குள் பாத்ரூம் சென்ற ராதா மேடமும் பிரியாவும் திரும்பி வந்தார்கள்.
ராதா மேடம், “அண்ணா குழந்தை எங்கே?” என விசாரித்தார். மூவரும் கொண்டு வந்த கிப்டை குழந்தையிடம் கொடுத்தனர்.
ரகு அங்கிருந்த தன் பெற்றோர் சுதா – மாதவனிடமும் அண்ணன் பத்மநாபனையும் அண்ணி யமுனாவையும் அவர்களுக்கு அறிமுகப்படுத்திய பிறகு சாப்பிட அழைத்து சென்றான்.
இதை எல்லாவற்றையும் ஒரு வித கவலையுடன் கவனித்து கொண்டிருந்தார் ஆடிட்டர் சுபாஷிணி மேடம். மனதிற்குள் ‘முருகா! அப்படி மட்டும் இருந்திடவே கூடாது. இன்னோர் அதிர்ச்சியை என்னால் தாங்கவே முடியாது’ என்று நினைத்தார்.
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings