நீங்களும் உங்கள் ரெசிபியை, சஹானா இணைய இதழில் பகிர விரும்பினால், editor@sahanamag.com என்ற மின்னஞ்சலில் பகிரலாம்
ரெசிப்பிக்கு போகும் முன் சிறு குறிப்பு
வீட்டுப் பக்கத்தில் நாக்பூரை சேர்ந்த ஒரு நண்பி இருக்கிறார். அவரின் அம்மாவிடமிருந்து சில வட இந்திய சமையல் குறிப்புகள் கற்றுக் கொண்டிருந்தேன். ஒருநாள் வாக் போய் விட்டு திரும்புகையில் அவங்க வீட்டுக்குப் போனோம், டீயுடன் இந்த ஷக்கர்பாராவைத் தந்தாங்க. எனக்கோ ஒரே இன்ப அதிர்ச்சி!! 🙂
எப்படி செய்யணும் என்று கேட்டுக் கொண்டு வந்தேன். மறுநாள், நான் செய்ததை சாம்பிள் கொண்டு போய் அவங்களுக்கு கொடுக்க, அவங்களுக்கு ஒரே இன்ப அதிர்ச்சி!
முதல்நாள் மாலை ரெசிப்பி கேட்டுக் கொண்டு அடுத்த நாள் மதியம் ஷக்கர்பாராவைக் கொடுத்தா… எப்படியிருக்கும்?! 😊
சரி, இனி ரெசிப்பிக்கு போலாம் வாங்க
ஷக்கர்பாரா என்று பெயர் கொண்ட இந்த இனிப்புவகை, மகாராஷ்ட்ரா மற்றும் குஜராத்தில் மிகவும் பிரபலமான ஒன்று என்று Wikipedia சொல்கிறது! 🙂
மக்கள் தீபாவளி சமயத்தில் ஷக்கர்பாராவை வீடுகளில் செய்கிறார்கள், மற்ற நாட்களில் கடைகளில் வாங்கி ருசிக்கிறார்களாம்
தேவையான பொருட்கள்
(எந்த கப் எடுத்தாலும் எல்லாப் பொருட்களையும் அதிலேயே அளக்கவும்)
பால் – 1 கப்
சர்க்கரை – 1 கப்
நெய் – 3/4 கப்
மைதா – 4 கப்
எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை
- பால்-சர்க்கரை-நெய் மூன்றையும் ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாக கலக்கவும்
- இதனுடன் மைதாவை சிறிது சிறிதாகச் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசையவும், கீழே உள்ள படத்தில் உள்ளது போல்
- பிசைந்த மாவை காற்று புகாமல், ஒரு பாத்திரத்தில் அரைமணி நேரம் மூடி வைக்கவும்
- மிதமான சூட்டில் எண்ணெய்யை சூடாக்கவும்
- பிசைந்த மாவை பெரிய உருண்டைகளாக்கி, தடிமனான சப்பாத்தியாக தேய்க்கவும்.
- கத்தி (அ) பிஸ்ஸா கட்டர் கொண்டு சிறு சதுரங்களாக நறுக்கவும்.
- நறுக்கிய துண்டுகளை எண்ணெயில் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்
- கீழே படத்தில் இடதுபுறம் இருப்பது கொஞ்சம் மெல்லியதாக நறுக்கியது, வலப்புறம் இருப்பது கொஞ்சம் தடிமனாக நறுக்கியது. இரண்டில் எது நன்றாக இருக்கும் என பார்க்கலாம்னு இப்படி டெஸ்ட் செஞ்சேன்! ஆனா பாருங்க, ரெண்டுமே சூப்பரா தான் இருந்துது! என்ஜாய் தி ரெசிபி
மகி அருண் பற்றி:-
இந்த ரெசிபிக்கு சொந்தக்காரர், கோவையில் பிறந்து, தற்போது கலிபோர்னியாவில் வசிக்கும் எனது தோழி மகி அருண். அறிமுகமான சிறிது நாட்களிலேயே, ஊர் பாசத்தில் நெருங்கிய நட்பானோம், பத்து வருட நட்பு எங்களுடையது
பெயர் சொன்னதுமே, உங்களில் சிலருக்கு யாரெனெ தெரிந்திருக்கும் என நினைக்கிறன். ஏனெனில், மகி அருண், 2010 முதல் இணையத்தில் தனது சமையல் திறமையை, பலருக்கும் பயனுள்ள வகையில் பகிர்ந்து வருகிறார்
அது மட்டுமின்றி, கிட்சன் கார்டனிலும் மிகுந்த விருப்பமுள்ளவர். தனது சிறிய தோட்டத்தில் பெரிய மகசூல் பார்த்து, அதை சமைத்து நமக்கு படங்களும் பகிர்வார் 😊
தமிழில் உள்ள அவரது வலைதளத்தின் லிங்க் இதோ – http://mahikitchen.blogspot.com/
ஆங்கில வலைதளத்தின் லிங்க் – http://mahiarunskitchen.blogspot.com/
Thanks a lot for sharing your recipe to Sahana Magazine Mahi 😍💐💖
GIPHY App Key not set. Please check settings