in ,

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் (அத்தியாயம் 17) – ரேவதி பாலாஜி

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

பகுதி 1    பகுதி 2    பகுதி 3    பகுதி 4    பகுதி 5    பகுதி 6    பகுதி 7    பகுதி 8

பகுதி 9   பகுதி 10   பகுதி 11  பகுதி 12   பகுதி 13  பகுதி 14   பகுதி 15  பகுதி 16

“ஜூலை 11”

“நம்ம குழந்தை ஜூலை 11 என் கைல வரப்போகுதா”

“ஆமா ஆதி.. முதல் ஸ்கேன்லயும் இதே தேதி தான் போட்ருக்காங்க.. என்னோட பீரியட் வெச்சு கணக்கு போட்றாங்க.. இப்போ பதிமூணு வாரம் ஆச்சு.. அதுக்கேத்த வளர்ச்சி குழந்தைக்கும் இருக்குன்னு சொன்னாங்க”

“நீ ஜூலைன்னு சொன்னல்ல அப்போவே.. நான் ஏதோ பத்து மாசம்னு கணக்கு வெச்சு சொல்றாங்க நினைச்சேன்”

“முழுசா ஒன்பது மாசம் தான் கணக்கு வரும். பத்து மாசம் பொறந்ததும் எப்போ வேணாலும் பேபி பொறந்துடும்”

“ஓ..”

“வாரம் தான் டாக்டர்ஸ் பாக்கறாங்க.. எத்தனை வீக்ஸ் ஆச்சுன்னு.. முப்பத்தி எட்டு வாரத்துக்கு மேல எப்போ வேணா குழந்தை பொறக்கும்.. நாப்பது வாரம் சராசரியா.. நாப்பத்தி இரண்டு வாரம் தான் அதிகபட்சம் வெயிட் பண்ணுவாங்க டெலிவரி பண்ண”

“புரிஞ்ச மாதிரியும் இருக்கு.. கொஞ்சம் புரியாத மாதிரியும் இருக்கு கவி”

“எனக்கே அந்த அளவுக்கு தெரியாது ஆதி.. நானே கொஞ்சம் கொஞ்சமா தெரிஞ்சிக்கிட்டேன்.. நம்ல இனிமே எப்போ டேட்ன்னு கேப்பாங்க.. அப்போ நீ சொல்லு ஜூலை பதினொன்னு”

“ஜூன் ஜூலை மாதத்தில் ரோஜா பூவின் வாசத்தில்…” ஆதி உரக்கப் பாடத் தொடங்கினார்.

“ஆதி.. மெல்ல.. மெல்ல பாடு.. சொல்லப் போனா அந்த பாட்டு மாதிரி தான்.. ஜூன் கடைசில பொறக்கலாம்.. இல்ல ஜூலை முதல் வாரம் நமக்கு பொறக்கும்னு தோணுது”

“ஜூன்ல பொறந்தா சந்தோசம்.. என் பிறந்தநாளும் நம்ம குழந்தை பிறந்தநாளும் ஒரே மாசம்”

“நீங்க ரெண்டு பேரும் ஒரு டீமா..”

“ஆமா.. “

“நானும் காத்திருக்கேன்.. இன்னிக்கு தான் ஜனவரி இரண்டு.. இன்னும் ஆறு மாசம் இருக்கு”

“எனக்கும் குழந்தையோட முகம் பாக்கணும் போல இருக்கு கவி”

“கவியினியாள்.. உள்ள வரலாம்”

செவியிலியர் அழைத்ததும் உள்ளே சென்று அமர்ந்தேன். கையில் என்னுடைய ஸ்கேன் அறிக்கையுடன் இருந்தார் மருத்துவர்.

“கூட யார் வந்துருக்கா” எடுத்ததும் இதை தான் கேட்டார் மருத்துவர்.

“ஹஸ்பண்ட்”

“கூட்டிட்டு வந்துடுங்க”

ஒரே நிமிடத்தில் ஆதியுடன் உள்ளே சென்றேன்.

“ஸ்கேன் ரிப்போர்ட் நல்லாருக்கு.. எல்லாமே நார்மலா இருக்கு.. பழைய ரிப்போர்ட் முதல் ஸ்கேனும் பார்த்தேன். நல்லாருக்கு எல்லாமே” மருத்துவர் கூறக் கூற இருவரின் முகமும் மலர்ந்தது.

அவரைப் பார்க்க என் அம்மாவின் வயதைப் போல் தெரிந்தது. இளம்பச்சை நிறத்தில் புடவை கட்டியிருந்தார். பார்க்க மிகவும் எளிமையாக தெரிந்தது. ஆனால் அதன் மினுமினுப்பு கட்டியிருக்கும் நேர்த்தியைப் பார்க்கும் பொழுது விலை உயர்ந்த புடவையாய்த் தான் தெரிந்தது.

ஸ்கேன் பார்க்கும் இடம் வெளியில் இருப்பதால் ஒரு சின்ன அறையில் இரண்டு இருக்கையோடு மட்டும் இருந்த அறையில் தான் நானும் ஆதியும் இருந்தோம்.

“ஆனா வெயிட் தான் ஏறவே இல்லை”

“ஆமா மேம்.. வாமிட் இருக்கு.. சாப்பிடவே பிடிக்கல”

“நாலாவது மாசம் பொறந்துடுச்சி.. இனிமே குறையும்.. நல்லா சாப்பிடுங்க.. அதுக்காக இனிப்பு நிறைய சேர்த்துக்காதிங்க.. நிறைய பேருக்கு இந்த டைம்ல டையபெட்டிக் வந்துரும்.. நீங்க குளுகோஸ் டெஸ்ட் பாத்துட்டீங்களா”

“சுகர் டெஸ்ட் ஸ்டார்டிங்ல பாத்தாங்க மேம்.. குளுக்கோஸ் டெஸ்ட் எதும் பாக்கல”

“பத்து நாள் கழிச்சி வாங்க.. குளுகோஸ் குடிக்கச் சொல்லி எடுப்பாங்க.. அது பாக்கணும்.. அப்புறம் லாஸ்ட் த்ரீ மன்ந்த்ஸ் சுகர் பாக்கணும்.. நெக்ஸ்ட் விசிட்ல பாக்கலாம்.. தைராய்டு ரிப்போர்ட் இல்லை… அதும் எடுக்கலயா”

“சேலம்ல எடுத்தோம் மேம்.. ரிப்போர்ட் இன்னும் வாங்கல.. நார்மல்னு போன்ல சொன்னாங்க”

“ரிப்போர்ட் வாங்கிடுங்க.. நெஸ்ட் என்ன ப்ளான்.. ஈரோட்டுலயே பாக்கிற மாதிரியா”

“இங்க தான் ஒர்க் மேம்.. இப்போதைக்கு இங்க தான் காமிக்கணும்”

“அந்தந்த மாசத்துக்கு ஸ்கேன் செக்கப் எங்க இருக்கீங்களோ அங்க பாத்துருங்க.. மிஸ் பண்ணிடாதீங்க”

“ஓகே மேம்”

“மாலதி அக்கா சொன்னாங்க.. உங்க அத்தைக்கு ரொம்ப பழக்கம்னு”

“சந்தோசம் மேம்”

“அடிக்கடி ட்ராவெல் பண்ண வேணாம்.. பேபிக்கு சேப்டி இல்லை.. இன்னும் வெயிட் ஏறணும்”

“மாசத்துக்கு ஒரு முறை போவோம்.. முடிஞ்ச அளவுக்கு குறச்சிக்றோம்”

“பிளட் மட்டும் இப்போ எடுப்பாங்க.. மரபணு சோதனைக்கு குடுக்க.. குழந்தைக்கு ஏதாவது டௌன் சின்ரோம் இருக்கான்னு பாக்க.. சொந்தத்துல கல்யாணம் பண்ணவங்க அப்புறம் ரிஸ்க் இருக்க பேரன்ட் தான் செக் பண்ணனும். இப்போ எல்லாருக்கும் பன்றாங்க.. ஒரு சேப்டிக்கு. நீங்க பயப்பட வேணாம், எல்லாம் நல்லாருக்கும்… என். டி ஸ்கேன் ரிப்போர்ட் காட்டிட்டு பிளட் குடுத்துட்டு போங்க.. பத்து நாள் ஆகும். சென்னை அனுப்பி தான் பாக்கணும்.. சுகர் டெஸ்ட்க்கு வரும்போது வாங்கிக்கலாம்..”

கடைசி வரை நல்ல சிரித்த முகத்தோடு சாந்தமாகப் பேசினார். உறவினர் என்ற முறையில் அப்படி பேசினாரா அல்லது அவர் இயல்பே அப்படித்தானா என்பதை அவர் பேச்சில் எங்கும் கண்டுபிடிக்க முடியவில்லை.

அவரிடம் இருந்து விடைபெற்றுவிட்டு இரத்த பரிசோதனை கொடுக்கச் சென்றோம். எப்பொழுதும் போல் ஊசி வைத்து நரம்பில் எடுக்கப் போகிறார்கள் என்று நினைத்திருந்த எனக்கு அவர்கள் செய்தது விந்தையாக இருந்தது.

குண்டூசியை போல் ஒன்றை எடுத்து விரலில் குத்தி இரத்தம் வந்ததும் ஒரு பேப்பரில் கைரேகை வைப்பது போல் இரத்தத்தால் மூன்று இடத்தில் வைத்தனர். பின் என்னுடைய கையெழுத்தை வாங்கிக்கொண்டு தபால் அனுப்பத் தயார் செய்தனர்.

பேப்பரில் இருக்கும் இரத்தத்தை வைத்து சோதனையா!

சென்னைக்கு அனுப்பி அறிக்கை வந்ததும் அழைப்பதாகக் கூறினார்கள்.

என் அத்தையை அலைபேசியில் அழைத்து நடந்ததை கூறினோம். மருத்துவர் முகம் மலர பேசியது அத்தைக்கும் சந்தோசமாக இருந்தது. பின் இரத்த பரிசோதனை முறையை சொன்னேன்.

“எப்படியெல்லாம் இந்த காலத்துல டெஸ்ட் எடுக்குறாங்க.. மாசமா இருக்குற புள்ளைக்கு இன்னும் என்னென்ன பாப்பாங்களோ” அவரும் ஆச்சர்யமாய் கூறினார்.

என் அம்மாவிடம் பேச வேண்டும் போல் இருந்தது. அவரையும் அழைத்தேன்.

“சொல்லு கவியினி”

“என்ன அமுதினி நீ போன் எடுக்குற.. அம்மா எங்க”

“பாப்பா எப்படி இருக்கா.. ஸ்கேன் பண்ண போணும் சொன்ன”

“நல்லாருக்கா.. எல்லாம் நார்மல்.. அம்மா எங்க?”

“அம்மாக்கு ஸ்கேன் எடுக்க ஹாஸ்பிடல் வந்துருக்கோம்.. அம்மா உள்ள இருக்காங்கடி”

“என்னடி சொல்ற.. அம்மாக்கு எதுக்கு ஸ்கேன்” அதிர்ந்து நின்றேன்.

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    கரை தொடாத அலைகள் 💗 (நாவல் – அலை 39) – தி.வள்ளி, திருநெல்வேலி 

    கண்களில் மின்னிடும் மின்னல் (மின்னல் 15) – ஜெயலக்ஷ்மி