சஹானா
கவிதைகள்

உன் ஒற்றை விசாரிப்பில்… (கவிதை) – மு.சிறுகவி மாஜிமா, சென்னை.

உன் ஒற்றை விசாரிப்பில்

உன் மேல் வைத்த

என் அத்தனை பேரன்பும் சரிந்ததேனோ

நான் மறைத்து வைத்த நேசத்திற்குமுன்

வெளிப்படுத்திய உன் அக்கறையில்

மெய்மறந்தேன் அன்பே  …. !!!

____________________________

முடிவு பெறாத உறவே

பயணித்த இனிய காலத்தை மறந்து

மீண்டும் தொடர்கதையாக தொடக்கத்திலே துளிர்கிறேன்

உனை  சேர்ந்த நாள் எண்ணி நாணம் கொண்டேன்

எனை  ஏந்திய அந்நாளை ரசித்திடவே

வாழ்வை உனக்கானது என

மெய்ப்பித்து கொள்வேன் எந்நாளும்…!!!

_______________________________

இதயத்தில் சுமக்கும் உன்னை வெளிப்படுத்த

எனது பேனா துடிக்கிறது.

கிறுக்கல்கள் ஏந்த வெற்று காகிதம் காத்திருக்கிறது

அவற்றுக்கு தெரியாதல்லவா,

உன்னை  வர்ணிக்க வார்த்தை வசப்படவில்லையென

திக்கு முக்காடி நான் வசப்பட்டுக்கொண்டதை

எண்ணி மீள வழியின்றி

உன்னை என்னுள் ரசித்தே

மெல்லக் கரைகிறேன்…. !!!

________________________________

நிஜத்தில் எனை ஆள தயங்கும் நீயே,

கற்பனை எனும் என்னுள்

உனை தாங்கும் ஓர்

சாம்ராஜியத்தையே  ஆள்கிறாய் மாயகமே… !!!

_________________________________

காலங்கள் சென்றபோதும்

நமது பரிமாற்றங்களை

சுவாசித்தே வாழவேண்டும்…!!!

உன் அன்பெனும் கரத்தை பற்றியே

நீடித்து போகவேண்டும்…!!!

வீழும் வாழ்வோ பெரும் வாழ்வோ

நான் உன்னுடனே…. !!!

என் உறவை சங்கமிக்க இனிதே

தயாராகிக்கொள் செல்வமே ….!!!

_________________________________

#ad

மலராய் மெல்ல மலர்ந்தேன்..

நிலவாய் மெல்ல மறைந்தேன்..

பனியாய் மெல்ல கரைந்தேன்..

தீயாய் மெல்ல சிவந்தேன்..

துளிராய் மெல்ல சரிந்தேன்..

மழையாய் மெல்ல நின்றேன்..

கடலாய் மெல்ல அலைந்தேன்..

குளிராய் மெல்ல உணர்ந்தேன்..

சுவடாய் மெல்ல பதிந்தேன்…

 

கள்வனிட்ட காதலில் மெல்ல

வீழ்த்த என் உணர்வும்

துரோகமிட, காதல் எனும்

வாழ்வே செழித்தே மெல்ல

நகர்ந்தோம் ஒன்றுனைந்தே உயிராய்..

 

திருமணமும் புன்னகைத்து

வாழ்வும் வாழ்த்தி

வளமும் சேர்ந்து

கைகள் பற்றி

பிரியாத படருடன்

நுழைந்தோம் அர்த்தத்தில்,

இனிதாய் கலந்தேன் மீண்டும்

உணர்வு பெரிதாய்

சல சலக்க இருந்தும் இதுவே

 காதல்…… !!!

 

உன் வருகை என்னில் தொடர..

உன் பார்வை என்னில் படர…

உன் மகிழ்வு என்னில்  சேர…

உன் ஆசை என்னில்  வளர…

உன் துன்பம் என்னில் அலற…

உன் காதல் என்னில் மலர….

உன்னால் நான் மறந்தேன்…

உன்னால் நானே  இல்லை…

உன்னால் என்றும் வாழ்பவள்..

உன்னால் உன்னில் கலந்தேன்

உன்னில் தேடல் என்றும் என்னில்….

உனக்கானவள் உன் மேல் உயிரானவள்…

 

பெண்ணாய் புகழாரம்

சூட்டிக்கொண்டேன்,

 என்றும் துணையாக

நிலைத்தே நிற்பேன்…. !!

 

இனிதாய் காதலித்து

கரம் பிடித்தாய்,

காத்திருந்து முதுமை

செல்வோம் துணையே….!!

 

காதலித்தே என்னை கடத்தி விட்டாய்     

எனக்கான வாழ்வை திருடிவிட்டாய்

மீண்டும் விடுதலையின்றி

காதலித்தே காலம் கரைத்து விடு

உன் சிந்தனை மர நிழலில்

ஊஞ்சலாய் துயலாடுகிறேன்

என் உயிரே …..!!!

நன்றி

இந்த கவிதையை எழுதிய மு.சிறுகவி மாஜிமா அவர்கள் சென்னையை சேர்ந்தவர். தமிழ் மீது மிகுந்த நேசம் கொண்டவர்

உங்கள் கவிதையை சஹானா இணைய இதழுக்கு பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிங்க சிறுகவி மாஜிமா

என்றும் நட்புடன்,

சஹானா கோவிந்த்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
%d bloggers like this: