வணக்கம்,
இந்த குறுக்கெழுத்து புதிரை விடுவிக்க முயற்சித்துப் பாருங்கள். மிகவும் கடினம் ஒன்றும் இல்லை. நாம் கேட்ட, பார்த்த, படித்த, கடந்து வந்த விஷயங்களை கொண்டே இது உருவாக்கப்பட்டுள்ளது. பதில்களை கமெண்ட்டில் பதியுங்கள். விடைகள் பின்னர் பகிரப்படும்
வலமிருந்து இடம்
- திருப்பூர் தியாகியின் அடைமொழியில் முதல் இரண்டெழுத்து
- பிரபல க்ரைம் நாவல் எழுத்தாளரின் அடைமொழி, ஒரு ஊரின் பெயர்
- நல்லதொரு ______பல்கலைக் கழகம்
- மும்பையின் முன்னாள் நாமகரணம்
- பத்தமடை என்றாலே இது தான் நினைவுக்கு வரும்
- உத்திரகாண்டை பிறப்பிடமாய் கொண்ட ஒரு நதியின்பெயர்
- இது இல்லாமல் தாளிப்பு சாத்தியமில்லை
- மகாமக ஊர்
- ஒரே மாதிரி, வேறு சொல்
- அனுமனின் வேறு பெயர்
- சமைக்க தேவையான பொருட்கள்
- ஸ்ருதியோடு இதுவும் சேர்ந்தால், கேட்பதற்கு சுகமே
- மந்திரகுமாரி படத்திற்கு பாடல் எழுதிய பிரபலமான புலவரின் பெயர்
- _____யும் தாயும் மகிழ்ந்து குலாவி
இடமிருந்து வலம்
- மழைக் கடவுள்
- இராமாயணத்தில் கூனி, மகாபாரதத்தில் _______
- ஆம், வேறு சொல்
- காணாமல் போனதே
- பழங்கால இசைக் கருவி
- கிருமி நாசினி
- கஞ்சனை இப்படியும் கூறுவர்
- ஆண் வாரிசு
- வயலும் வயல் சார்ந்த இடமும்
மேலிருந்து கீழ்
- இதற்கு ஒன்றே மதியாம்
- சுழற்றி விட்டால் சுற்றும், காற்றாடி அல்ல
- கேரளாவின் பிரபலகடற்கரை
- ராணுவம், வேறு சொல் (கலைந்துள்ளது)
- ஒரு வகை வைரஸ் காய்ச்சல்
- கல்லணையைக் கட்டியவர்
- ஜெயம் ரவி நடித்த ஒரு படம், இவரில்லாத சர்க்கஸ் இல்லை
- பிரமாண்டமான வீடு
- வெயில் காலத்தை ஆங்கிலத்தில் இப்படிச் சொல்வர்
கீழிருந்து மேல்
- நிகழ்வு, வேறு சொல் (கடைசி எழுத்து இல்லை)
- ஆண்டாளின் வேறு பெயர்
- கபடியை இப்படியும் சொல்வர்
- எமனின் வாகனம்
- திருவிளையாடல் புலவர்
- இந்திய விண்கலத்தின் பெயர்
will work after sometime. I am very much interested in this.
Thanks Maami. I too love Tamil crosswords, glad you like it too