in

சிந்தனைச் சிறகுகள் (சிறுகதைத் தொகுப்பு) Book for Sale – எழுத்தாளர் ராஜதிலகம் பாலாஜி

வணக்கம்,

எங்கள் “ஸ்ரீ ரேணுகா பதிப்பகம்” மூலம் வடிவமைக்கப்பட்டு, பெங்களூரு தமிழ் சங்கத்தில் நடந்த உலக சாதனை நிகழ்வில் இந்த நூல் வெளியிடப்பட்டது.

12 சிறுகதைகள் கொண்ட “சிந்தனைச் சிறகுகள்” என்ற இந்த புத்தகம், நிச்சயம் கதைப் பிரியர்கள் விரும்பி வாசிக்க வேண்டிய ஒரு நூல் என்றால் அது மிகையில்லை. ஒவ்வொரு கதையையும் ஒவ்வொரு விதத்தில் அமைத்து, நம் மனதுக்கும் கருத்துக்கும் விருந்து படைத்திருக்கிறார் எழுத்தாளர் ராஜதிலகம் பாலாஜி அவர்கள். 

இந்த புத்தகத்தை வாங்க விரும்பும் வாசகர்கள், கீழே பகிர்ந்துள்ள ஸ்ரீ ரேணுகா பதிப்பகத்தின் QR Code Scan செய்து தொகையை செலுத்தி Screen Shot எடுத்து, 77082 93241 என்ற எண்ணுக்கு உங்கள் முகவரியுடன் பகிருங்கள். விரைவில் புத்தகம் உங்களை வந்து சேரும். If you have any questions, we can be reached at 77082 93241. Thank you

 

இந்த நூலைப் பற்றி சக எழுத்தாளர்கள் பதிவு செய்த கருத்துக்களை வாசிக்கலாம் வாருங்கள்…

எழுத்தாளர் மைதிலி ராமையா

சிரியர் திருமதி.ராஜதிலகம் பாலாஜி அவர்கள், எழுத்தின் மீது கொண்ட காதலுக்கு சற்றும் குறைவின்றி, சமுதாயத்தின் மீதும் அக்கறை கொண்டுள்ளார் என்பது அவரது ஒவ்வொரு கதையின் சாராம்சங்களிலும் பொங்கி வழிகிறது. இவரின் நல்ல சிந்தனைகள் நாடோறும் சென்று சேர வேண்டும். இந்த முதல் பதிப்பு மேலும் மேலும் பல பதிப்புகள் பிறக்க காரணமாக இருந்து, எல்லோரின் இல்லங்களிலும், இளையோரின் கரங்களிலும் இந்நூல் தவழ வேண்டும். நல்ல சிந்தனைகள் பதியனிடப்பட்டு, பார் முழுதும் படர்ந்து பரவி நற்பலன்கள் வளர்ந்து செழிக்க வேண்டும்.

எழுத்தாளர் அ.சித்தம்மாள்

ழுத்தாளர் திருமதி.ராஜதிலகம் பாலாஜி அவர்கள், ஒரு பொறியியல் பட்டதாரி. இப்புத்தகத்தை நீங்கள் வாசிக்கையில், இன்றைய காலக்கட்டத்தில் இவையெல்லாம் இயல்பு தானே என்று நாம் கடக்கும் விஷயங்கள் எத்தனை ஆழம் மிக்கவையாக உள்ளது, சிறிய விஷயம் தானே இதிலென்ன இருக்கிறது என்று நாம் கடக்கும் காட்சிகள் ஒருவரின் வாழ்வில் எவ்வளவு பெரிய விஷயமாக இருக்கிறது என்று உங்களின் உள்ளம் தொட்டு சிந்திக்க தூண்டும் என்பதில் ஐயமில்லை. இப்புத்தகம், உங்களின் எதிர்மறை எண்ணங்களை களைந்து நேர்மறை எண்ணங்களை தூண்டும். கதைகளும் அதில் பொதிந்துள்ள கருத்துக்களும் ஆழமாய் மனதில் பதிந்து அதிலேயே உங்களை நிலைக்கச் செய்யும்.

எழுத்தாளர் அ. கமல்

பொறியியல் முதுகலை பட்டதாரியான திருமதி. ராஜதிலகம் பாலாஜி அவர்களின் சமூகப் பார்வையும் அக்கறையும் ஒவ்வொரு கதையிலும் காண முடிகிறது. ஒரு சிலவற்றில் இவருடைய சமூக ஆதங்கம் நியாயம் கொண்டு நிற்கிறது. அந்த வகையில் இலக்கிய வானில் அழகாக சிறகடித்திருக்கிறது ஆசிரியரின் சிந்தனைகள். நிதர்சனங்களை கற்பனையாகவும், சில கற்பனைகளை நிதர்சனமுமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. ஆசிரியரின் சிந்தனைச் சிறகுகள் மேன்மேலும் விரிந்து இலக்கிய வானில் உயரே பறந்து விருதுகளும், பரிசுகளும் பெற பாராட்டி வாழ்த்துகிறேன்.

நூலாசிரியர் ராஜதிலகம் பாலாஜி அவர்களின் உரை

நான் ஒரு பொறியியல் முதுகலை பட்டதாரி. தாய்மொழி மீது கொண்ட ஆர்வத்தின் காரணமாக, எனது எண்ணங்களை எழுத்துகளாக உருவம் கொடுத்து உயிர்ப்பித்து வருகிறேன். எனது படைப்புகளை வாசிக்கும் வாசகர்களின் மனதில், புது நம்பிக்கையையும் நேர்மறை எண்ணங்களையும் விதைக்க முயற்சி செய்து கொண்டு வருகின்றேன். வாழ்க்கையை சரியான முறையில் வழி நடத்திச் செல்ல தேவையான வழிகாட்டுதல் அடங்கிய ஒரு சிறிய தொகுப்பு தான் இந்த சிந்தனைச் சிறகுகள் புத்தகம். இந்தப் புத்தகத்தை படிப்பவர்களின் மனதில் கண்டிப்பாக பல மாற்றங்களை ஏற்படுத்தி, அவர்களது வாழ்க்கையை மேம்படுத்த உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.

If you have any questions, we can be reached at 77082 93241. Thank you

என்றும் நட்புடன்,

நிறுவனர் – ஸ்ரீ ரேணுகா பதிப்பகம் 
தொடர்பு எண் : 77082 93241
மின்னஞ்சல் : srirenugapathippagam@gmail.com 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    சிப்பிக்குள் முத்து (சிறுகதை) – ✍ ரமணி.ச.

    காக்க! காக்க! ❤ (பகுதி 6) – ✍ விபா விஷா, அமெரிக்கா