in

ஸங்ஷேபம் – குறுநாவல் (இறுதிப் பகுதி) – ✍ சத்யா.G.P, சென்னை

ஸங்ஷேபம் (இறுதிப் பகுதி)

ஜூன் 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

ரு மணித்தியாலம் கழிந்தும் கோயிலை விட்டு வெளியே வர மனம் ஒத்துழைக்கவில்லை. தேக உந்துதலில் வெளியே வந்தவன் வண்டியை எடுத்துக் கொண்டு புறப்பட்டான். மெயின் ரோடை எட்டியவன் சிறிது தூரப் பயணம் கடந்த பின் எதிர்சாரியில் இருந்த டீக்கடையை அடையாளம் கண்டு ரோட்டின் மறுபுறம் வந்து வாகனத்தின் ஓட்டத்துக்கு முற்றுப் புள்ளி வைத்து கடைக்குள் சென்றான்.

“அண்ணா ஒரு டீ போடுங்க” 

“கரெக்டா கோயிலுக்குப் போயிட்டீங்களா?”

“ஆமாண்ணா, சுந்தரேஸ்வரர் கோயில். ஈசன் பேரு அது தான்! இறைவி பெயர் சௌந்தராம்பிகை, நல்ல தரிசனம், கோயிலை விட்டு வெளிய வர மனசே இல்லைண்ணா”

“சந்தோஷம் தம்பி”

…கனவோடு தானடி
நீ தோன்றினாய் கண்களால்
உன்னைப் படம் எடுத்தேன்…

காந்தக் குரலோன் ஹரிஹரநின் வசியமும் தெள்ளத் தெளிவான இசை வடிவமும், ரகுவை திக்குமுக்காடச் செய்தது.

“என்ன பாட்டுண்ணே இது? இப்போ தான் முதல் தரம் கேட்கறேன், ஹாரீஸ் ஜெயராஜ் மியூஸிக்கா? என்ன படம்?”

“ஹாரீஸ் மியூஸிக்கான்னு கேட்டீங்க பாருங்க, பக்கா, செம செம, லிங்குசாமி டைரக்ஷன்ல ‘பீமா’ படம், விக்ரம் & திரிஷா” 

“சூப்பரா இருக்குண்ணே”    

பேசி முடித்தவன் கடைக்காரரிடம் விடைபெற்று வண்டியைக் கிளப்பி சற்று வேகமாக ரோட்டைக் க்ராஸ் செய்யும் போது… வேகமாக வந்த லாரி அப்படியே ரகுவோடு சேர்த்து இரு சக்கர வாகனத்தைத் தூக்கி சுழற்றி வீசியது. வாகனம் நிலைகுலைய, வாகனத்தின் மீது இருந்த ரகு கீழே விழ வாகனம் அவன் மீது ஏறி இறங்கித் தள்ள, ரகு ரோடில் உராய்ந்தபடி… சாலை எங்கும் சிவப்பாக லாரி நிற்காமல் குன்றத்தூர் நோக்கி அசுர வேகத்தில் போய் கொண்டிருந்தது.

அறுவை சிகிச்சைக்காக செடேஷன் மருந்து செலுத்தப்பட்டு சுயநினைவு முழுதும் விலகி அறுவை முடிந்து பெட்டில் படுக்க வைக்கப்பட்ட நோயாளிக்கு க்ளுகோஸ் ட்ரிப்ஸ் தேகத்துக்குள் செலுத்தப்பட்டபடி இருக்கும். வேளாவேளைக்கு ஊசி மூலம் மருந்து செலுத்தத் தோதாக கைகளில் செவிலியர்கள் தங்கள் பணிக்காக சிலவற்றை மிச்சம் வைத்திருப்பார்கள். அதற்காகத்தான் ட்ரிப்ஸ் என்று கூட சிலர் நினைக்கலாம்.

படுக்கையில் படுத்துக் கிடக்கும் நோயாளியின் உடலிலிருந்து உயிர் கொஞ்சம் கொஞ்சமாக பிரியும் போது ஏற்படும் நிலை வைஸ் வெர்ஸாவாக செடேஷன் ட்ரக்ஸின் வீர்யக் குறைவால் உண்டாகும். அதாவது உயிர் பிரிய எத்தனிக்கும் போது நினைவு பிசகத் துவங்கும். செடேஷன் நிலை விலகத் துவங்க நினைவு மீளும்.

முழுதாகத் தெளியாமல் சுற்றம் சகலமும் அறியக்கூடிய நிலையில் புத்தி இருந்தாலும் தேக களைப்பு என்னவெல்லாமோ செய்யும். செடேஷன் சமயத்தில் நோயாளிக்கு வலி இருக்காது, புறஉலகம் என்னவென்று தெரியாது, ஆனால் எளிதில் விளக்க முடியாத, வார்த்தைகளால் அலங்கரிக்க முடியாததொரு அனுபவம் தங்கி இருக்கும்.

செடேஷன் தெளியத் தெளிய அது மங்கலாக நினைவலைகளில் ஊசலாடும். அதை மீட்டெடுக்க முனைந்தால் சிந்தனை மட்டுமல்ல, உடலும் வருந்திக் களைக்கும். அப்படியொரு நிலையை ரகு அனுபவித்துக் கொண்டிருந்தான். 

யோசனைகளைக் கைவிட்டான், அமைதியாக குளத்தைக் கவனிக்க ஆரம்பித்தான். இயல்புநிலை சிரித்தபடி வெளிவரத் துவங்கியது. கஷ்டப்பட்டு பிறழ்வு யோசனையை விலக்கினான். ஏதோ ஒரு உள்ளுணர்வு உந்த, எப்போது இசை ஓட்டத்தை நிறுத்தினோம் என்று யோசித்தபடி ப்ளே லிஸ்டை கலைத்து மற்றொரு பாடலை ஒலிக்க விட்டான்…  

வெண்ணிலவே
வெள்ளி வெள்ளி நிலாவே
போகும் இடம் எல்லாமே
கூட கூட வந்தாய்

வெண்ணிலவே
வெள்ளி வெள்ளி நிலாவே
நட்சத்திரப் பட்டாளம்
கூட்டிக்கொண்டு வந்தாய்

மஞ்சள் வெயில்
மாலையிலே மெல்ல
மெல்ல இருளுதே
பளிச்சிடும் விளக்குகள்
பகல் போல் காட்டுதே

தயக்கங்கள்
விலகுதே தவிப்புகள்
தொடருதே அடுத்தது
என்ன என்ன என்றேதான்
தேடுதே

வெண்ணிலவே
வெள்ளி வெள்ளி நிலாவே
போகும் இடம் எல்லாமே
கூட கூட வந்தாய்

வெண்ணிலவே
வெள்ளி வெள்ளி நிலாவே
நட்சத்திரப் பட்டாளம்
கூட்டிக்கொண்டு வந்தாய்

உலகத்தின்
கடைசிநாள் இன்று
தானா என்பது போல்
பேசிப்பேசித் தீர்த்த
பின்னும் ஏதோ ஒன்று
குறையுதே

உள்ளே ஒரு
சின்னஞ்சிறு மரகத
மாற்றம் வந்து குறுகுறு
மின்னல் என குறுக்கே
ஓடுதே

வெண்ணிலவே
வெள்ளி வெள்ளி நிலாவே
போகும் இடம் எல்லாமே
கூட கூட வந்தாய்

வெண்ணிலவே
வெள்ளி வெள்ளி நிலாவே
நட்சத்திரப் பட்டாளம்
கூட்டிக்கொண்டு வந்தாய்

மஞ்சள் வெயில் மாலையிலே மெல்ல
மெல்ல இருளுதே
பளிச்சிடும் விளக்குகள்
பகல் போல் காட்டுதே

தயக்கங்கள்
விலகுதே தவிப்புகள்
தொடருதே அடுத்தது
என்ன என்ன என்றேதான்
தேடுதே

வண்ணங்கள்
வண்ணங்கள் அற்ற
வழியில் வழியில் சில
நடக்கிறார் நடக்கிறார் ஆ
மஞ்சளும் பச்சையும் கொண்டு
பெய்து பெய்து மழை
நனைகிறார் நனைகிறார்

யாரோ யாரோ
யாரோ அவள் ஹே
யாரோ யாரோ யாரோ
அவன் ஒரு கோடும்
கோடும் வெட்டிக்கொள்ள
இரு தண்டவாளம்
ஒட்டிச்செல்ல

வெண்ணிலவே
வெள்ளி வெள்ளி நிலாவே
போகும் இடம் எல்லாமே
கூட கூட வந்தாய் வெண்ணிலவே
வெள்ளி வெள்ளி நிலாவே
நட்சத்திரப் பட்டாளம்
கூட்டிக்கொண்டு வந்தாய்

இன்னும் கொஞ்சம்
நீள வேண்டும் இந்த நொடி
இந்த நொடி எத்தனையோ
காலம் தள்ளி நெஞ்சோரம்
பனித்துளி

நின்று பார்க்க
நேரம் இன்றி சென்று
கொண்டே இருந்தேனே
நிக்க வைத்தாள் பேச
வைத்தாள் நெஞ்சோரம்
பனித்துளி ஓஹோ ஹோ

பிரசன்னாவின் ப்ரவுஸிங் சென்டரில் ரகு முதல் முறையாக பாடலைக் கேட்க கேட்க, பாலகன் போல் துள்ளிக் குதித்தான்.

“கமலுக்கு ஹாரீஸ் செட்டாகாதுன்னு சொன்னியே இப்போ பார்த்தியா? ஹாரீஸ் மியூஸிக் போடல பிரசன்னா மேஜிக் செய்யராப்டி, எல்லாருக்கும் செட் ஆகும்”

நேரமாக நேரமாக பேச்சுக் குரல்கள் மங்கலாக் காதில்? விழுந்தன.

“எஸ், சத்தியமா நான் சொல்றது உண்மை, நீயே பாரு”

அவன் எதையோ தர அவள் முகம் மாறியது. இருவரும் சம்பாஷணையைத் தொடர்ந்தாலும் சகல காட்சிகளும் கமல்ஹாசனின் புஷ்பக் விமான் திரைப்படம் போல் நகர்ந்தன.

“தேங்க் யூ பிரதீப், யூ ஆர் மை ஐ ஓப்பனர்”

மிகவும் பிரம்மப்பிரயத்தனம் செய்து அந்த வாக்கியத்தை அபகரிக்க முடிந்தது. அவளின் நன்றி அறிவிப்புக்கு முன்பாக அந்தப் பிரதீப் சொன்னது துவக்கத்தில் நினைவில் நின்றது, ஆனால் தொடர்ந்து நிற்காமல் விலகியது. எவ்வளவு யோசித்தும் அதை சேமிக்க இயலவில்லை.  

ந்த முறை ரகு பயங்கரமாக அயர்ந்து போனான். இது அவனாகத் தெரிந்தே வருத்திக் கொண்டது. தேகம், மூளை, உடல் உறுப்புகள் என ஒட்டு மொத்தமும் பூகம்ப பிடிக்குள் சிக்கிய நகரமாய் ஆட்டம் கண்டன. அலையோடு சேர்ந்து அதன் இழுப்புக்கு கட்டுப்பட்ட ஆளில்லா படகு போல் போய் கொண்டிருந்தான் ரகு.

கண் விழித்த போது செளகரியமாக இருந்தது. தண்ணீர் பாட்டிலை எடுத்து மூடி விலக்கி, கார் கதவைத் திறந்த வெளியே நின்றவன் தண்ணீரைத் திணற திணற பருகியபின் மீதத்தை அப்படியே முகத்தில் சரித்துக் கொண்டான்.

உடுப்புகளில் ஈரம் பரவுவதை அலட்சியம் செய்தான். காரை ஊட்ட முடியும் என்ற நம்பிக்கை அழுத்தமாக வெளிப்பட வீடு நோக்கிப் பயணிக்க ஆரம்பித்தான்.

மதிய போஜன வியாபாரம் முடியும் தருவாயில் இருந்ததால் வீட்டுக்கு செல்வதாகவும் தொடர் பிரயாணங்களால் உடலுக்கு கூடுதல் ஓய்வு தேவைப்படுவதாகவும் சொல்லி விலகினான் ரகு.

அம்மா யோசித்தார். ஏதோ உருவாகிக் கொண்டிருப்பதாக அவருக்குத் தோன்றியது. ரகுவுக்கு என்ன ஆனது?

நிதானமாக குளித்து முடித்தான் ரகு. டிஸ்இன்ஃபெக்டன்ட் ஸ்ப்ரே அடித்தல், கோலின் கொண்டு அலைபெசியைத் துப்புரவு செய்தல் என சீனக் கடமைகளைத் தவறாமல் செய்து முடித்தவன், சமையல்கட்டில் இருந்த தக்காளி சாத வாசனையால் உந்துதலுக்கு ஆளானவன் சாப்பிட்டு முடித்தான். மிளகுத்தூள், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து நீர் மோர் கரைத்துக் குடித்து கட்டிலில் வந்து படுத்தான்.

ஒவ்வொன்றாக அடுக்கி அலசி ஆராய வேண்டும் அப்போது தான் தெளிவு கிட்டும்.

 • ராஜமுந்திரிக்கு சவாரி நிமித்தமாக பயணித்தது.
 • தெலுங்குப் பாடல்களை திணறத் திணற கேட்டது
 • இரவு காரில் தங்கியது
 • அதிகாலை ராஜமுந்திரியில் இருந்து புறப்பட்டது.
 • திடீரென தமிழ் பாடல்கள் கேட்க ஆசைப்பட்டது
 • எந்தவொரு சிக்கலும் இல்லாது பயணம் தொடர்ந்தது
 • Old Collection பென் டிரைவ்
 • பூவிழி வாசலிலே திரைப்படத்தின் மலேசியா வாசுதேவன் பாடிய பாட்டு இங்கே பாடல்
 • வினோத அனுபவம்
 • பிறழ்வு நினைவு
 • மெட்ராஸ் வீடு திரும்பியபின் பரிசோதனை
 • புதிய அனுபவம் எதுவும் சிக்காத நிலை
 • தாம்பரம் சவாரி
 • நங்கநல்லூர் 48வது தெரு என வீடு திரும்பும்போது உதித்த எண்ணம்
 • பிடித்தமான மற்றொரு மலேசியாவின் பாடலைக் கேட்டது
 • சலனமற்ற நிலை
 • பூவிழி வாசலிலே படத்தில் இடம் பெற்ற ஜேசுதாஸ் பாடல்
 • தெளிவான சூழல்
 • ஹரிஹரன் ஹிட்ஸ்
 • பீமா பட ரகசியக் கனவுகள் பாடலிலும் இயல்பு நிலை
 • முதல் மழை பாடல்
 • மீண்டும் பித்தாய் போன தருணம்
 • மீண்டும் ஹரிஹரன் பாடல்கள்
 • மஞ்சள் வெயில் பாடல் ஒலிக்கும் போது மீண்டும்…   

பவர் பாயிண்ட் ப்ரஸண்டேஷன் போல ஒவ்வொரு நிகழ்வாக வரிசைப்படுத்தி நிதானமாக ஆய்வு செய்தான்.

திடீரென ஏதோ ஒரு உள்ளுணர்வு வலிந்து இந்த அனுபவங்களை சுமக்க வைத்திருக்கிறது. எதனால் இது ஏற்பட்டது?

யோசிக்க யோசிக்க ஒரு பாதை புலப்பட்டது. வெளிச்சமும் போதுமான அளவு கிடைத்தது. கார் பற்றி மஹாதேவன் சார் பேசியது, தாமே கார் வாங்கிக் கொள்வதாக அவரின் வழிமுறைக்கு உடன்பட்டது, காரில் உள்ள மியூஸிக் சிஸ்டம்.

புள்ளிகளை இழுத்து தொடர்ந்து கோலம் புனைவதில் மும்முரமானான் ரகு.

ஹரிஹரன், மலேசியா வாசுதேவன் பாடிய பாடல்கள் அனைத்தும் மனதை ஸ்தம்பிக்க வைக்கவில்லை. அவர்கள் பாடிய குறிப்பிட்ட பாடலை முதல் முறை கேட்ட தருணங்களில் நடந்த சில நம்ப முடியாத, நிரந்தர பாதிப்பை ஏற்படுத்திய சம்பவங்கள் நினைவுகளை இறுகப் பற்றுகின்றன.

அந்த விபத்துக்குப் பிறகு தான் கோமாவுக்குப் போய் வருடக்கணக்கில் மருத்துவமனையில் வாழ்ந்து (?) மீண்டிருக்கிறோம். அனைத்தையும் அம்மா சமாளித்து வளைய வந்திருக்கிறார்.

சுயகழிவிரக்கம் ஒரு புறம், அம்மாவின் அசாத்திய நெஞ்சுரம், மனவலிமை, நெருக்கடிகளை சமாளித்த விதம், பேராளுமை… பட்டியலிடப்பட்ட குணாதிசயங்கள் மறுபுறம் என பிரமிக்க வைத்தன.

அம்மாவிடம் எதையும் சொல்லி பதற்றம் அடைய வைக்கக் கூடாது என்று ரகு தீர்மானமாய் முடிவெடுத்தான். மனம் புதிதாக நிறைய சங்கதிகளைப் பழக சொன்னது. பழக வேண்டும்.

மாலை நேர டிஃபன் வியாபாரத்திற்காக கடைக்குச் சென்றான். வெகு ஜாக்கிரதையாக எதையும் வெளிப்படுத்தாது வளைய வந்தான். மாஸ்டரிடம் சகஜமாகப் பேசினான். ஜோக் என்ற பெயரில் எதையோ சொல்லி மனைவியைத் தலையில் அடித்துக் கொள்ள வைத்தான். வழக்கமாகப் பேசுவது போல் அம்மாவிடம் பேச மிகவும் சிரமப்பட்டான். ஓரளவு கரையேறினான். இரவு பதினோரு மணிக்கு வீடு திரும்ப வழக்கம் போல் அனைவரும் நித்திரைக்குத் தயாரானார்கள்.

பால்கனியில் சேர் எடுத்து அமர்ந்த ரகு மனம் சாந்தசொரூபமாக மாறி லயிக்க முடிவெடுத்தான். முதல் முறையாக கேட்ட பிறகு எப்போதும் அந்தப் பாடலே அவன் மனதின் அமைதிக்கான அத்யந்த ஸ்நேகிதனாக மாறிப் போனது. அலைபேசியை உயிர்ப்பித்து, செவிகளில் ஹெட் செட் பொருத்திக் கொண்டு உன்னி கிருஷ்ணன் பக்தி மணம் கமழ சிரத்தையுடன் பாடிய ஹரிவ ராஸனம் பாடலில் சங்கமிக்கத் துவங்கினான்.

ஹரிவ ராஸனம் விஸ்வ மோஹனம்
ஹரிததீஸ்வரம் ஆ ராத்ய பாதுகம்
அரிவிமர்தனம் நித்ய நர்த்தனம்
ஹரிஹராத்மஜம் தேவ மாச்ரயே…

சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!

சரண கீர்த்தனம் சக்த மானஸம்
பரணலோ லுபம் நர்த்தனாலஸம்
அருண பரஸுரம் பூத நாயகம்
ஹரி ஹராத்மஜம் தேவ மாச்ரேய..

சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!

ப்ரணய ஸத்யகம் ப்ராண நாயகம்
ப்ரணவ கல்பகம் ஸுப்ர பாஞ்சிதம்
ப்ரணவ மந்திரம் கீர்த்தனப் ரியம்
ஹரிஹராத்மஜம் தேவ மாச்ரேய…

சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!

துரக வாகனம் ஸுந்த ரானனம்
வரக தாயுதம் தேவ வர்ணிதம்
குருக்குருபாகரம் கீர்த்தனப்ரியம்
ஹரி ஹராத்மஜம் தேவ மாச்ரயே…

சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!

த்ரி புவனார் சுதம் தேவாத்மகம்
த்ரி நயன ப்ரபும் திவ்ய தேசிகம்
த்ரிதச பூஜிதம் சிந்தித ப்ரதம்
ஹரி ஹராத்மஜம் தேவ மாச்ரயே…

சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!

பவபயா பகம் பாவு காவகம்
புவன மோகனம் பூதிபூஷணம்
தவள வாகனம் திவ்ய வாரனம்
ஹரிஹராத்மஜம் தேவ மாச்ரயே!

சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!

களம்ருது ஸ்மிதம் ஸுந்தரானனம்
களப கோமளம் காத்ர மோகனம்
களப கேசரி வாஜி வாகனம்
ஹரிஹராத்மஜம் தேவ மாச்ரயே…

சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!

ச்ரித ஜனப்பிரியம் சிந்திதப்ரதம்
ச்ருதி விபூஷணம் ஸாது ஜீவனம்
ச்ருதி மனோகரம் கீதலாலஸம்
ஹரிஹராத்மஜம் தேவ மாச்ரயே…

சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!

கடவுள் விக்ரஹத்திற்கு சாத்தப்பட்ட புஷ்ப மாலை போல் தூய்மை நிரம்பித் ததும்பும் உணர்வுடன் உறங்கிப் போனான்.

குளித்து முடித்து, வீட்டில் பூஜை முடித்து காலை ஐந்து மணிக்கெல்லாம் கடைக்கு வர வழக்கமான அலுவல்கள் தொய்வின்றி நடந்தேறின. எப்போதும் போல நாலரை மணிக்கெல்லாம் மாஸ்டர் வந்து விட்டதால் கடையின் இயக்கம் பதமாகத் தொடர்ந்தது.

அம்மா எப்போதும் போல ஆறு மணிக்கு கடைக்கு வந்து விட்டார். சட்னியையும் சாம்பாரையும் வீட்டிலிருந்து எடுத்துக் கொண்டு வருமாறு சொன்னார். ரகு வீட்டிற்குப் போய் எடுத்து வந்தான். ஆறரை மணியளவில் அர்ச்சகரின் வாகனம் சாலையின் எதிர்ப்புறம் செல்வது கண்ணுக்குத் தெரிந்தது.

“கோயிலுக்குப் போயிட்டு வந்துடறேன் மா” ரகு கிளம்பினான்.

“எந்த கோயிலுக்கு டா போற? அதுவும் நடை பயணமா?

“தர்மலிங்கேஸ்வரர் கோயிலுக்குத் தான், பக்கத்துல தானே இருக்கு அதான் நடந்தே போறேன்”

அம்மா முகத்தில் கேள்விகள் அடுக்கடுக்காய் எழும்பின.

அன்றைய பொழுது எந்தவொரு சலனமும் இல்லாது திருப்திகரமாகச் சென்றது.

இரவு ஒன்பதரை மணிக்கெல்லாம் கிளம்பும் விதத்தில் வியாபாரம். அனைத்தையும் முடித்து கிளம்பும் போது ரகுவையும் அறியாமல் சில வார்த்தைகள் அம்மாவைப் பார்த்தபடி வெளிவந்தன.

“அப்பா ஆக்ஸிடெண்ட்ல இறந்த போது பக்கத்து வீட்ல ஒரு ஆளு இருந்தானே அவன் பேரு ஜேம்ஸ் தானே மா?”

அம்மா முகத்தில் அதிர்வலைகள்.

“அப்பா சர்வீஸ்ல வேலை கிடைச்சுருக்குமே மா, சம்பாத்தியமும் உங்களுக்கு நல்லா கிடைச்சுருக்கும். அதை விட்டுட்டு அந்த க்வார்டர்ஸ்ல இருந்து வீட்டைக் காலி பண்ணி கஷ்டப்பட்டு என்னை ஆளாக்கி… நீங்க கஷ்டத்தைத் தவிர எதையுமே அனுபவிக்கல மா!”

அம்மாவின் கண்கள் நீர்க்கத் தயாரானது போல தெரிந்தது.

“அப்பாவுக்கு ஆக்ஸிடெண்ட்னா அடுத்து எனக்கும் விபத்து, கோமா… ஒரு வரியில் சொல்லனும்னா நீங்க ஒரு Magical Human Being மா”   

“இப்போ எதுக்கு அதெல்லாம்? எல்லாம் முடிஞ்சு போச்சுப்பா”

ரகு கிளம்பினான். மூளையில் மின்னல் வெட்டியது போல உள்ளே யாரோ பேசுவது கேட்டது

“எஸ் செல்வி, உன் ராமோட ட்ரூ கலர் இது தான். பேரு தான் ரகுராம், ஆனா அவன் ரகுராமர் போல சுத்தமானவன் இல்லை”

“Music related Psychological Disorder” என்று இரவு கூகிள் செய்து பார்க்க வேண்டும் என்று சமாதானப்படுத்திக் கொண்டாலும், ரகு மனது தெளிவாக சொன்னது “எதுவும் முடியவில்லை, ஆரம்பமாகப் போகின்றன” 

(முற்றும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

One Comment

 1. “Inthak kuRunaval ezhuthiya aasiriyarukkup paaraattukaL. Ivar our ‘Doctor’ aagavO allathu maruththuvath thuraiyil iruppavar polytheism thOnRuGinRathumenakku. Eppadiyiruppinum, en paaraattiKKaLaith avarukkuth therivippathil maghizhchchiyE.

  – “M.K. Subramanian.”
  No:100, Juliet Ct: Chapel Hill, N.C.
  USA.

ஸங்ஷேபம் – குறுநாவல் (Part 3 of 4) – ✍ சத்யா.G.P, சென்னை

காக்க! காக்க! ❤ (பகுதி 1) – ✍ விபா விஷா, அமெரிக்கா