in

சஹானா வாசிப்புப் போட்டி அறிவிப்பு – ஜூலை 2021

வாசிப்புப் போட்டி அறிவிப்பு

“சஹானா” இணைய இதழின்

“வாசிப்புப் போட்டி – ஜூலை 2021” அறிவிப்பு

வணக்கம்,

ஜூலை 2021 வாசிப்புப் போட்டி அறிவிப்புடன் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி

சக எழுத்தாளர்கள் மட்டுமின்றி, வாசிப்பில் விருப்பம் உள்ள யார் வேண்டுமானாலும் இந்த போட்டியில் பங்கேற்கும் புத்தகங்களை வாசித்து, உங்கள் விமர்சனத்தை பதிவிட்டு, பரிசை வெல்லலாம்

மூன்று பரிசுகள்

இந்த மாத வாசிப்புப் போட்டியின் வெற்றியாளர்களுக்கு, மூன்று பரிசுகள் வழங்கப்படவுள்ளது 

  1. அதிக விமர்சனங்கள் தரும் ஒருவருக்கு
  2. சிறந்த விமர்சனம் வழங்கும் ஒரு நபருக்கு 
  3. அதிக விமர்சனங்கள் பெறும் புத்தகத்தின் ஆசிரியருக்கு

வாசித்து பரிசை வெல்ல, அனைவருக்கும் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்

மூன்று புத்தக வாசிப்புவிதி

புத்தகத்தை போட்டிக்கு பகிர்ந்த எழுத்தாளர்கள், சக எழுத்தாளர்களின் மூன்று புத்தகங்களையேனும் வாசித்து விமர்சனம் தர வேண்டும் என்பது போட்டி விதி

பரஸ்பர வாசிப்பு, சக எழுத்தாளர்களின் எழுத்தை அறிய ஒரு வாய்ப்பாய் அமைவதோடு, எழுத்துலக நட்பு வட்டத்தை விரிவாக்கி, இன்னும் நிறைய பேருக்கு உங்கள் எழுத்தை கொண்டு சேர்க்கும். அதற்காகத் தான், இந்த “மூன்று புத்தக வாசிப்பு கட்டாயம்” என்ற விதி சேர்க்கப்பட்டது. புரிதலுக்கு நன்றி

முடிந்த வரை, நீங்கள் வாசிக்கும் நூலுக்கு Amazonலும் Review மற்றும் Rating பகிருங்கள்

ஒரு சிறு விண்ணப்பம், விமர்சனம் பதியும் போது முடிந்த வரை கதையின் முடிவை அல்லது முக்கிய முடிச்சுகளை குறிப்பிடாமல், அடுத்து வாசிப்பவர்களுக்கு ஆர்வத்தை தூண்டும் வண்ணம் பதிவிடுங்கள். நன்றி 

விமர்சனத்தை எங்கு பதிய வேண்டும்?

உங்கள் விமர்சனத்தை, “இணைய தமிழ் எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் குழுமம்” எனும் முகநூல் (Facebook) குழுவில் பதிய வேண்டும்

குழுவின் link இதோ – https://www.facebook.com/groups/onlinetamilwritersandreadersgroup

#சஹானா_புத்தகவாசிப்புப்போட்டி என்ற hashtag உபயோகித்து, உங்கள் விமர்சனங்களை பதிவிடுங்கள். நன்றி

ஜூலை 2021 போட்டியில், 14 புத்தகங்கள் இடம் பெறுகிறது. புத்தகப் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது

உங்கள் விமர்சனங்களை பதிய கடைசி நாள் – ஜூலை 31, 2021  

புத்தகங்களை இலவசமாய் தரும் எழுத்தாளர்கள், அதை குழுவில் பகிரலாம். நன்றி

ஜூலை 2021 வாசிப்புப் போட்டியில் உள்ள புத்தகங்களின் பட்டியல்

#புத்தக தலைப்புஎழுதியவர்# of PagesAmazon Link
1என்ன தவம் செய்தேன் – பாகம் ரெண்டுAnitha Rajkumar306https://amzn.to/32WfXht
2தங்கமணி ரங்கமணி சிரீஸ்சஹானா கோவிந்த்40https://amzn.to/3jztdCm
3முட்டக்கண்ணி முழியழகி – 2வதனி பிரபு236https://amzn.to/3t5T4Ts
4ரங்கா vs ரங்கா பாகம் 2Ajudhya Kanthan367https://amzn.to/3uJp2WV
5உணர்வுகளோடு சில உரசல்கள்: (சிறுகதை தொகுப்பு)சேதுபதி விசுவநாதன்199https://amzn.to/3vHVeuV
6காதல் வேரில் பூத்த துரோகப் பூக்கள்Dikshita Lakshmi116https://amzn.to/34tY4rj
7மாயங்கள் செய்திடும் மான்எழுத்தாளர் மியாழ்223https://amzn.to/2RKmj1P
8உன்னில் உறைந்தவன் நானே Rajeswari D (Kavini)Not Showinghttps://amzn.to/3wHTwJT
9ஒரு பிடி மண்Subhashini Balakrishnan21https://amzn.to/2RSbTwQ
10இசைக்காதலி என்னைக் காதலி விஸ்வதேவி தேவி (Chitra Devi)Not Showinghttps://amzn.to/3fQi38O
11விலகிடுவேனா இதயமேBudding Novels AR (Arthy Ravi)338https://amzn.to/3gtvOM5
12வாழ்வளித்த வள்ளல்கனவு காதலி ருத்திதா74https://amzn.to/3gphswh
13யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிப் போவது?நர்மதா சுப்பிரமணியம்31https://amzn.to/2Szj5yx
14நான் நீ மழைKalyan AnanthNot Showinghttps://amzn.to/2TqDdmD

#ad “சஹானா” மாத இதழ்களை வாசிக்க விரும்புவோருக்கு இணைப்புகள் 👇

                      

             

என்றும் நட்புடன்,
ஆசிரியர் – சஹானா இணைய இதழ் 

Contact us for your Advertising Needs

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    சுவாச தொப்புள் கொடி (கவிதை) – ✍ சௌமியா தட்சணாமூர்த்தி

    ஆழியின் காதலி ❤ (பகுதி 4) -✍ விபா விஷா