ஆதவனின் வரவினை
ஆரத் தழுவிடு
ஆழ்ந்த துயிலினை
ஆழ்நிலையில் துகிலெறி…
நாம் வாழும்
நாளைகள் நல்லதாகட்டும்…
நாட்டின் வளர்ச்சியில்
நாளும் பிறப்போமா?
சோதனைகள் பூமிதனில்
சோதிடமே தேடுமோ?
ஆளும் இரவல்
ஆசைகளை விசிறிடுவோமா?
வெறுங்கை முழம்போடுமோ?
வெற்றிக்கு அடிப்படை
வெளிச்சத்தின் செயல்களன்றோ?
விக்கல்களை தினமும்
விலங்கிட்டு வீசிவீசிடுவோமா?
அடிவான கதிரவனை
அனபுடன் வரவேற்றிடவே
வைகறையின் வாசலில்
வையகம் எழட்டுமே!?
This post was created with our nice and easy submission form. Create your post!




GIPHY App Key not set. Please check settings