in ,

அந்தியில வானம் தந்தனத்தோ பாடும் (கவிதை) – இரஜகை நிலவன்

 

அந்தியிலே வானம்

தந்தனத்தோ பாடும்…

அழகிய கானம்

வந்தே ஆடும்…

தகதகவெனத் தாளம்

தவிக்குதே மேளம்…

பறக்கும் கூட்டமே

பண்ணிசை இன்னிசைக்குமே…

அந்திசாயும் ஆதவன்

அமைதியாய் ஆளுதே …

அதிரும் கதிரும்

அதிவிரைவில் மேகமூடுதே…

மேகமே மேற்கின்

மேதினியில் கவிழுதே…

மேமாத கதிரவனும்

மேசமதில் விரியுதே…

சாயுங்காலமா பொழுதிற்கும்

சாய்ந்திருக்கும் காலமா?

இதமாகச் சொல்லுமா?

இதயம் வெல்லுமா?

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    கவசமில்லாத சலனங்கள் (சிறுகதை) – இரஜகை நிலவன்

    இனிமை நிறைந்தது இளமைப் பருவம் (கவிதை) – இரஜகை நிலவன்