in ,

மூடத்திற்கு முடிவு கட்டுவோம் (மரபுக்கவிதை) – பாவலர் கருமலைத் தமிழாழன்

பல்லியது  குரல்கொடுத்தால்  வீட்டிற்  குள்ளே

          பல்வேறு  துயர்நிகழ்ச்சி  நடக்கு  மென்றும்

துள்ளிபூனை  குறுக்கினிலே  ஓடி  வந்தால்

          துலங்காது  செல்கின்ற  வேலை  யென்றும்

வெள்ளாடை  விதவையவள்  எதிரில்  வந்தால்

          விளங்காது  போகின்ற  பணிதான்  என்றும்

கல்விகற்றுப்  பரந்தறிவு  பெற்ற  பின்பும்

          கல்லாத  அறிவிலிபோல்  நம்ப  லாமா !

 

நல்லகாலம்  வருமென்று  பாம்பு  புற்றில்

          நாள்தோறும்  சுற்றிவந்து  பாலை  ஊற்றல்

சொல்லாமல்  வரும்துயர்கள்  போவ  தற்குச்

          சொல்லிதலை  மயிர்மழித்து  மொட்டை  போடல் !

பொல்லாத  துன்பங்கள்  போகு  மென்று

          போலியான  சாமியாரின்  காலில்  வீழ்தல்

எல்லாமும்  மூடத்தின்  வெளிப்பா  டன்றி

          எந்நாளும்  இச்செயல்கள்  பயனைத்  தாரா !

 

தலைமீது  தேங்காயை  உடைத்தல் !  தீய்க்கும்

          தணல்கங்குள்  பரப்பியதில் நடத்தல் ! எச்சில்

இலைமீது  உடல்படிய  புரளல் !  நாக்கை

          இழுத்துவைத்துக்  கூரலகு  குத்தல்  எல்லாம்

மலைபோன்ற  தடைகளினைத்  தகர்த்தே  ஈசன்

          மாலையாக  அருள்தருவான்  என்று  மூட

வலைக்குள்ளே  சிக்கியுள்ள  மக்க  ளுக்கு

          வளர்த்திடுவோம்  பகுத்தறிவு  ஒழிப்போம்  மூடம் ! 

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    மனிதரிடம் கேட்க வேண்டா (மரபுக்கவிதை) – பாவலர் கருமலைத் தமிழாழன்

    இயற்கைப் போற்றுவோம் (மரபுக்கவிதை) – பாவலர் கருமலைத் தமிழாழன்