in ,

அன்பொன்றே அரவணைக்கும் (மரபுக்கவிதை) – பாவலர் கருமலைத் தமிழாழன்

இயற்கையாக  வருகின்ற  ஊற்றில்  தானே

          இனியசுவை  தருகின்ற  நீரும்  ஊறும்

செயற்கையாக  வடிவமைத்த  ஊற்றில்  நீரைச்

          செறிவூட்டச்   செறிவூட்டத்  தான்நீர்  ஊறும்

இயல்பாக  வருகின்ற  ஊற்றில்  நீரும்

          இடையீடே  இல்லாமல்  வருதல் போன்று

கயமையில்லா   அன்பொன்றே   இரக்கம்  காட்டும்

          காணுகின்ற  உயிர்களினைத்  தமராய்  எண்ணும் !

 

தடிகொண்டு   பழுக்கவைக்கும்  பழத்தைப்  போன்று

          தனக்குள்ளே  பிறர்சொல்லி  வந்தி  டாமல்

அடிப்பட்டு   விழுந்தவனைக்  கண்ட  போதே

          அடிமனத்துள்  சுரக்கவேண்டும்  உதவும்  ஈரம்

கடிபட்ட   உடனேறும்  பாம்பின்  நஞ்சைக்

          கடிவாயைக்  கட்டியதைத்  தடுத்தல்  போல

துடிதுடிக்கும்   முகந்தன்னைக்  காணும்  போதே

          துயர்களைய  முனைவதுவே  உண்மை  அன்பாம் !

 

தன்கன்றைப்  பாசத்தால்  பார்க்கும்  போதே

          தானாப்  பசுமடியும்  பால்சு  ரக்கும்

அன்புபொங்கிக்  கருணையுடன்  கலக்கும்  போதே

          அரவணைக்கும்  பலனெதையும்  எதிர்பார்க்  காமல்

குன்றின்மேல்  ஏற்றிவைத்த   ஒளிவி  ளக்கு

          குவிந்திருக்கும்  காரிருளை   ஓட்டல்  போன்று

தன்னலமே  இல்லாத   அன்பு  வொன்றே

          தனையெதிர்க்கும்  தெவ்வரையும்  நட்பாய்ப்  பார்க்கும் !

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    இயற்கைப் போற்றுவோம் (மரபுக்கவிதை) – பாவலர் கருமலைத் தமிழாழன்

    சைபர் புத்திசாலி (சிறுகதை) – மனோகர் மைசூரு