in , ,

பார்க்கர் பேனாவும் பாரத்வாஜ கோத்திரமும் (பகுதி 11) – வைஷ்ணவி

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

பகுதி 1    பகுதி 2   பகுதி 3    பகுதி 4    பகுதி 5    பகுதி 6    பகுதி 7    பகுதி 8

பகுதி 9   பகுதி 10

இரண்டாவது முறையாக டெலிபோன் மண அடிக்கவும், மாதவனாக இருக்குமோ என்று நினைத்த காயத்ரிக்கு ஒரு இன்ப அதிர்ச்சி.

“ஹலோ மின்னல்!”

” நாந்தான் பேசறேன்” என்றாள் சிறிது வெட்கத்துடன்.

” என் மின்னலா இது? இவ்ளோ மெதுவா பொறுமையா பேசறது ? ஒரு வேளை நம்பர் மாத்தி கால் பண்ணிட்டேனோ?”

“என்னது என் மின்னலா? சரி போனா போகுது பட்ட பேர் வெச்சு கூப்பிட்டும்னு ஒன்னும் சொல்லாம சும்மா விட்டா,  என் மின்னல்னு உரிமை கொண்டாடுறீங்க?”

“அப்பாடா! ராங் நம்பருக்கு கூப்பிடல. என் மின்னலுக்கு தான் கூப்பிட்டுருக்கேன். அப்போ நீ என் மின்னல் இல்லையா?” என நவநீதன் ஆதுரத்துடன் கேட்டான்.

“நீங்க என்னை பார்த்தது கூட இல்லை. பார்க்காமலே உரிமை கொண்டாடுனா என்ன அர்த்தம்?”

“எதுக்கு பார்க்கனும் மின்னல்? உன் பேச்சுக்காக தான் உன்னிடம் திரும்ப திரும்ப பேசுகிறேன். நான் முப்பது கேள்வி கேட்டா, மூன்றே வார்த்தையில் பதில் சொல்ற ஆள். நீ ஒரு கேள்விக்கே மூன்று பக்கத்துக்கு பதில் சொல்ற. அந்த வேகம் தான் எனக்கு பிடிச்சுருக்கு. முதன்முதலில் உன்னிடம் போன்ல பேசும் போது ரயில் வருகிற பாதையை சொன்னத வெச்சி, அது இந்த பிளாட்பாரத்துலதான் வரும்னு டக்குனு சொன்னியே, அந்த ப்ரசன்ஸ் ஆஃப் மைண்ட் சான்ஸே இல்லை” அதுவும் என்னை இம்ப்ரஸ் பண்ணிடுச்சு. எதிரெதிர் துருவங்கள் தானே ஒன்றை ஒன்று ஈர்க்கும்”

“எங்கப்பா உங்களுக்கு பொண்ணு பார்த்திருக்கார். நீங்க ஊருக்கு போறீங்களாமே உங்ககிட்டயே ஜாதகத்தை கொடுக்கறதா சொன்னார்”

“பொண்ணு நல்லாருக்குமா? எனக்கு பொருத்தமா இருக்குமா?”

” அதை நீங்க தான் முடிவு பண்ணனும். பிடிச்சிருந்தா பண்ணிக்கங்க”

“அப்போ நான் அந்த பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டா, உனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை?”

“தாராளாமா பண்ணிக்கங்க”

“அப்போ உங்க அப்பா நாளைக்கு ஜாதகம் தருவாரே அப்போ என் சம்மதத்தை சொல்லிடவா?”

“ம் சொல்லி தான் பாருங்களேன்”.

“அம்மணி! இப்படி பொசுக்குனு சொல்லிப் போட்டா நான் என்ன பண்றது? கொஞ்சம் ரோசணை பண்ணி சொல்லுங்க”

“என்ன எங்கூரு தமிழ்ல பேசறீங்க?”

“இங்க பேக்டரில பேசி பழகிட்டேன். அப்புறம் உங்க ஊர் மாப்பிள்ளையாய்ட்டா, உங்க ஊர் ஆள் மாதிரி தான பேசனும்? நான் நாளைக்கு ஊருக்கு போறேன். அங்க இருந்து திருப்பதி போகனும். அக்கா பையனுக்கு முடி கொடுக்கறதுக்காக”

“ஓ! அப்போ எப்போ வருவீங்க? பேச முடியாதா?”

” மூணு நாள்ல வந்துருவேன்.  எப்பவும் போல கூப்பிடு. விசேஷம் முடிஞ்சதும்  நம்மள பத்தி வீட்ல சொல்லலாம்னு இருக்கேன்”

“உங்க வீட்ல சம்மதிப்பாங்களா?”

“பெருசா பிரச்சனை இருக்காது என் சைட்ல. உங்க வீட்டுல என்னை எல்லாருக்கும் பிடிச்சிருக்கு. அப்படியே பிரச்சனை வந்தாலும் பேசிக்கலாம்”

“நீங்க இன்னும் என்னை நேர்ல பார்த்ததே இல்லை. அப்புறம் எப்படி?”

“நீயும் தான் என்னை பார்க்கலை. உனக்கு பிடிக்கலையா? அது போல தான். நான் திருப்பதி போய்ட்டு வரேன். நாம் ஒரு நாள் நேர்ல சந்திக்கலாம். எப்போ எங்கேனு நீயே சொல்லு”

“அடுத்த வாரம் என் பிறந்த நாள் வருது. அன்னிக்கு பாக்கலாமா?”

“ஹே! அப்படியா? சூப்பர்ல. ரொம்ப ஸ்பெஷல் நாள்ல. அன்னிக்கே பார்க்கலாம். உன் பிறந்த தேதி என்ன?”

“நட்சத்திரம் வர நாள்ல தான் பிறந்த நாள் கொண்டாடனும் பாட்டி சொல்வாங்க “

“மக்கு ! நட்சத்திரம் எப்போனு கேட்டேன்?”

“ஆனி திருவாதிரை”

“அமாவாசை அன்னிக்கா பிறந்த?”

“ஆமாம். உங்களுக்கு எப்படி தெரியும்?”

“சொல்றேன். என்ன லக்னம் ?”

“மேஷம் “

“அதான பார்த்தேன். எப்பட்றா இவ பட் பட் பட்டாசாவும் அதே நேரத்தில் ப்ரெசன்ஸ் ஆப் மைண்ட்டாவும் இருக்காளேனு பார்த்தேன்.”

“மேஷ லக்னம் தான் வேகத்துக்கு காரணம். மிதுனத்தில இருக்க சந்திரன் புத்திசாலித்தனம். உனக்கு கணக்கு நல்லா வருமே?

“ஹையோ! எப்படி கரெக்டா சொல்றீங்க?”

“அதெல்லாம் ஒரு கணக்கு “

“உங்களுக்கு ஜோசியம் தெரியுமா?”

“ம் கொஞ்சம் கொஞ்சம் “

“சரி எங்கே பார்க்கலாம்?”

“சென்னிமலை முருகன் கோவில் போலாமா? எனக்கு ரொம்ப பிடிச்ச இடம். உங்களுக்கும் அங்க சிப்காட்ல இருந்து பக்கம் “

“ஏன் ஈரோடு வந்து உன் கூட சேர்ந்து வரக்கூடாதா?”

“அப்போ அடுத்த வாரம் செவ்வாய் காலைல 9 மணிக்கு பஸ் ஸ்டாண்டுக்கு வந்துடுங்க. ஒரு மணி நேரத்தில் போய்டலாம். டைம் ஆபிஸ்கிட்ட நில்லுங்க. உங்கள எப்படி அடையாளம் கண்டுபிடிக்கிறது?”

“ஒயிட் ஜீன்ஸ். ஸ்கை ப்ளூ ஸ்டிரைப் ஃபுல் ஹேண்ட் ஷர்ட் “

“எத்தனை பாக்கெட், பட்டன் கலர்லாம் விட்டு போச்சு”

அவன் வாய் விட்டு சத்தமாக சிரித்ததை கேட்கும் போது காயத்ரி இதுவரை  ஒரு உணர்ந்திடாத புது உணர்வினை அடைந்தாள். இப்போதே அவனை பார்த்து விட மாட்டோமா என ஏங்கினாள்.

“நீ என்ன கலர் டிரஸ்? உன்னை எப்படி கண்டுபிடிக்கிறது?”

“நான் இன்னும் டிரஸ் எடுக்கல. இந்த பிறந்த நாள் ரொம்பவே ஸ்பெஷல்ல. சோ பொறுமையா எடுக்கனும். இந்த பிறந்த நாள் உங்கள பார்க்கப் போறேன்.அடுத்த பிறந்த நாள் உங்க கூட தான் இருக்க போறேன்”

“ஹே மின்னல் ! வெட்கபடுறியா? ஐயோ என்னால பாக்க முடியலயே!. அதுக்கும் அடுத்த அடுத்த  வருஷம் பத்தி எல்லாம் நான் சொல்லட்டுமா?”

“சொல்லுங்க பாக்கலாம்?”

“ரெண்டாவது வருஷம் என் மின்னல் மாதிரி  துறுதுறுனு ஒரு பொண்ணு. மூணாவது வருஷம் என்னை மாதிரி அமைதியா ஹேன்ட்ஸமா ஒரு பையன். “

“ஐயோ அடுத்தடுத்தா? நான் பாவமில்லையா?”

“அப்போ நான் பாவமில்லையா?”

“பாவந்தான். இருந்தாலும் சரி வேணாம் விடுங்க”

அவள் அதீத வெட்கத்தில் பேச முடியாது தடுமாறியதை   ரசித்துக் கொண்டே அவன் பேச்சை மாற்ற ஆரம்பித்தான்.

“சுதா என்ன பண்றாங்க?”

“சாயந்திரம் சுதாக்கு வலி வந்துருச்சுனு ஹாஸ்பிடல் கூட்டிட்டு போய்ட்டாங்க. பையன் பிறந்திருக்கு”

“ரொம்ப சந்தோஷம். அம்மாவும் பையனும் எப்படி இருக்காங்க?”

“பையன் நல்லாருக்கான். அவளுக்கு தான் இரத்தம் வேணும். மாதவன் அதுக்கு தான் முயற்சி பண்றான் “

“எந்த ஆஸ்பிடல்? நான் யுனிவர்சல் டோனர் தான் “

“அப்படியா ரொம்ப சந்தோஷம். நான் முதல்ல மாதவனுக்கு சொல்லிடறேன்” என்று கூறிவிட்டு மருத்துவமனை முகவரியை நவநீதனிடம் பகிர்ந்தாள்.

நவநீதன் அப்போதே மருத்துவமனைக்கு சென்று மாதவனிடம் அறிமுகப்படுத்தித் கொண்டான். இரத்த தானத்திற்கான வேலைகள் கிடுகிடுவென ஆரம்பமானது. குழந்தையையும் சுதாவையும் பார்க்க சென்ற நவநீதனை மாதவன் கண்ணில் நீர் தளும்ப கட்டியணைத்தான்.

“எங்க காயத்ரி ரொம்ப கொடுத்து வச்சவ ” என்றாள் சுதா.

“அப்படியெல்லாம் இல்லைங்க சுதா ! நீங்க மூணு பேருந்தான் சின்ன வயசுல இருந்தே ஒன்னா இருக்கீங்க. நீங்க தான் லக்கி “

“காலத்துக்கும் நீங்க தான் கூட இருக்க போறீங்க. நீங்க தான் லக்கி” என்று இடைமறித்தான் மாதவன்.

நால்வரும் ஒரு சேர சிரித்தனர். யாரந்த நாலாவது நபர் என யோசிக்கிறீர்களா? வேறு யாரு விதிதான்.

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    சுத்தம் (சிறுகதை) – நாமக்கல் எம்.வேலு

    கண்களில் மின்னிடும் மின்னல் (மின்னல் 10) – ஜெயலக்ஷ்மி