in ,

ஒரு நீண்ட பயணம் (சிறுவர் கதை) – ✍ மோனிஷா. நா, பள்ளி மாணவி

ஒரு நீண்ட பயணம் (சிறுவர் கதை)

டிசம்பர் 2021 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

குதிரையும் ஒட்டகச்சிவிங்கியும் ஒரு இடத்தை விட்டு இன்னொரு இடத்திற்கு இடம் பெயர திட்டம் போட்டது. ஏனென்றால் தற்போது குதிரையும் ஒட்டகச்சிவிங்கியும் வசிக்கும் இடத்தில் மழை பெய்யாததால் நிலம் வறண்டு விட்டது. எனவே 2 நண்பர்களும் சேர்ந்து நடைபயணம் மேற்கொண்டது.

குதிரை ஒட்டகச்சிவிங்கிடம் “நண்பா நாம் எப்படியாவது ஒரு நல்ல  புல்வெளியை கண்டுபிடிக்க வேண்டும். அப்புறம் தான் நமக்கு ஓய்வு” என்று  கூறியது

“என்னால் உணவு தேடி அலைய முடியவில்லை” என்றது.

வெகு தூரம் நடந்த பிறகு குதிரை “தூரத்தில் பார்” என்றது.

அடியில் இருளாகவும் நடு பாகத்தில் அடர்ந்த பச்சை நிறத்திலும் மேலே வெளிர் பச்சை நிறத்திலும் வர்ணம் திட்டியது போல இருந்தது. அருகில் செல்ல செல்ல இன்னும் அழகாக தெரிந்தது.

இரண்டிற்கும் ஒரே சந்தோஷம் தான் துள்ளி குதித்தது. அந்த காட்டிற்கு  இன்னும் அழகு சேர்க்கும் விதமாக நடுவே மலையிலிருந்து இறங்கிய அருவி சலசலவென்று கூழாங்கற்களையும்  சில  மரக்கட்டைகளையும் அடித்துக் கொண்டு ஓடியது

பார்க்கவே கண்களுக்கு அழகாகவும் குளிர்ச்சியாகவும் தெரிந்தது.

குதிரை ஒட்டகச்சிவிங்கியிடம் “நண்பா இனிமேல் சாப்பாட்டிற்கு நமக்கு பிரச்சனையே இல்லை, அதே போல் வெயில் காலத்திலும் தண்ணீர் தேடி அலையத் தேவையில்லை. கடவுள் நமக்கு ஒரு நல்ல இடம் காட்டியுள்ளார்” என்றது. 

அதன் பிறகு ஒரு நிமிடம் கூட வீணடிக்காமல் இருந்த பசியில் இரண்டும் வயிறு முட்ட சாப்பிட்டு முடித்தன.  அதன்பின் அருகில் ஓடிய நதியில் தண்ணீர் பருகின.

குதிரை ஒட்டகச்சிவிங்கியை பார்த்து “இப்போது தான் எனக்கு வயிறு நிறைந்தது” என்று கூறியது.

பின் குதிரை ஒட்டகசிவிங்கியிடம் “உறங்கலாமா?” என்றது.  

அதற்கு குதிரை “நீ என்ன மடத்தனமா பேசுற? இப்ப தானே நாம இந்த காட்டுக்கு வந்திருக்கிறோம், காட்டை பற்றி நாம தெரிஞ்சுக்க வேணாமா? வா போய் இந்த காட்டை சுத்தி பாக்கலாம்” என்று கூறியது.

அதற்கு ஒட்டகச்சிவிங்கி “நீ சொல்றதும் கரெக்டு தான் நண்பா, வா போலாம்” என்று கூறியது.

உடனே  இரண்டும் புறப்பட்டன. வழி நெடுகிலும் பலவிதமான பழ மரங்களும் காய் மரங்களும் சில பூ மரங்களும் காய்த்தும் பூத்தும் குலுங்கின. இரண்டுக்கும் நாம் ஏதோ சொர்க்கத்திற்கு தான் வந்துவிட்டோமோ என்று நினைத்து கொண்டன.

கொஞ்ச தூரம் நடந்தபின் புல்வெளியில் ஒரு முயல் தன் மூன்று   குட்டிகளுக்கு உணவு ஊட்டி கொண்டிருந்தது.

குதிரை  முயலிடம் “உங்களுக்கு இந்த புல்வெளி வசதியாக உள்ளது என்று நினைக்கிறேன்” என்றது.

அதற்கு முயல் “எனக்கு என்ன குறை, இந்த காடும் புல்வெளியும் எல்லாம் எங்களுக்கு கொடுத்துருச்சு, சந்தோஷமா இருக்குறோம்” என்றது.

முயலிடம் இருந்து விடைபெற்று இன்னும் கொஞ்ச தூரம் நடந்தன.

ஒட்டகச்சிவிங்கி     குதிரையிடம் “நண்பா வானம் இருட்டுது, மழை வரும் நினைக்கிறேன்” என்றது. குதிரை சொல்லி 2 நிமிடத்தில் மழை சடசடவென கொட்டியது.

உடனே ஒட்டகச்சிவிங்கி “டேய் நண்பா ஓடு!!! ஓடு!!! அந்தப் பெரிய ஆல மரத்துக்கு அடியில் போய் நில்லு, அது நம்மள இந்த மழையில் இருந்து கொஞ்சம் காப்பாற்றும்” என்றது.

பின் இரண்டு ஓடி ஆலமரத்தடியில் நின்றன. மழை சோ…. என்று பெய்து கொண்டிருந்தது. இரண்டும் ஏதேதோ பேசிக் கொண்டே  ஆலமரத்தடியில் நின்று கொண்டிருந்தன.

உடனே கீச் என்ற குரலில் “டேய் வாய   மூடுங்க டா மட பசங்களா, என் குழந்தைங்க முழிச்சிக்க போது” என்றது.

இரண்டும் “எங்க இருந்துடா அந்த குரல் வருது?” என்று சுற்றும் முற்றும் பார்த்தன.   

ஒட்டகச்சிவிங்கி “டேய் நண்பா அந்த பொந்த பாரு, அங்க இருந்து தான் அந்த சத்தம் வருது” என்றது.

உடனே அந்த பொந்திலிருந்து ஒரு பச்சைக்கிளி எட்டிப் பார்த்தது. குதிரை “பாக்க தம்மாத்துண்டு இருந்துகிட்டு எங்ககிட்டயே வாய் அடிக்கிறியா?” என்று கேட்டது.

அதற்குக் கிளி “நீ எவ்வளவு பெருசா இருந்தா எனக்கு என்ன? என் குழந்தைங்க முழிச்சுகிட்டா நீயா வந்து சமாதானப்படுத்துவ” என்றது.

அதற்கு ஒட்டகச்சிவிங்கி “அது சரி தான், நாங்க அமைதியா பேசுறோம்” என்று சிரித்துக் கொண்டே கூறியது. 

பச்சைக்கிளியும் அவர்களிடம் கனிவாக பேசு  ஆரம்பித்தது “என்னை மன்னித்து விடு நண்பா, நான் ஏதோ கோபத்தில் உங்ககிட்ட கொஞ்சம் கோவமா பேசிட்டேன்” என்றது.

அதற்கு குதிரையும் “விடு நண்பா” என்று  கூறியது.

பச்சைக்கிளி அவர்களிடம் “நீங்க என்ன இந்த காட்டுக்கு புதுசா?” என்று கேட்டது.

“ஆமாம்” என்று இரண்டும் தலையை ஆட்டின.

அதன் பிறகு குதிரை பச்சைக்கிளியிடம் “இந்த  காட்ட பத்தி எங்களுக்கு கொஞ்சம்  சொல்லேன்” என்று கேட்டது.

அதற்கு பச்சைக்கிளி “நாங்க  பல  நூற்றாண்டுகளா இங்க தான்  இருக்குறோம்னு எங்க பாட்டி எனக்கு சொல்லியிருக்காங்க. அந்த அளவுக்கு இந்த காடு எல்லாருக்கும் வேண்டியத அள்ளிக் கொடுக்கும்.   இந்த எடத்துல காய், கனி, விதை என எதுக்கும் எங்களுக்கு பிரச்சனை இல்ல, ரொம்ப சந்தோஷமா நாங்க இங்க இருக்கோம்” என்று கூறியது.

உடனே மரத்தின் ஆங்காங்கே இருந்த பொந்திலிருந்து ஒரு 50 பச்சை கிளிகள்  எட்டி பார்த்து “ஆமா… ஆமா… நாங்க ரொம்ப சந்தோஷமா  இருக்கோம்” என்று கூச்சலிட்டு பறந்தன.

இதைப் பார்த்து குதிரையும் ஒட்டகச்சிவிங்கியும் மெய் சிலிர்த்து போயின. அந்த நேரத்தில் மழையும் ஓய்ந்து, சிறு சிறு மழை தூரல்களாக போட்டுக் கொண்டிருந்தது. அங்கிருந்து விடைபெற்று இரண்டும் நடக்கத் தொடங்கின.

“நண்பா! நண்பா! சீக்கிரம் வா அவர்கள் வந்துவிட்டார்கள்” என்று பின்னாலிருந்து குரல் கேட்டது.

குதிரை சுதாரித்து கொண்டு கண் விழித்து பார்த்தது. அப்போது ஒரு பெரிய ஜேசிபி மற்றும் மரம் அறுக்கும் எந்திரம் ஒன்று எடுத்துக் கொண்டு ஒரு கூட்டம் வந்து கொண்டிருந்தது.

அப்போது தான் குதிரைக்கு புரிந்தது பாதி  காட்டை அழித்து மனை ஆக்கி விட்டனர் இந்த மனித கயவர்கள். அதன் பின் மீதி காட்டை அழிக்க அவர்கள் வந்து கொண்டிருந்தார்கள்.

குதிரை “நாம் வந்த போது இந்த காடு எப்படி இருந்தது” என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டிருந்தது, அதை நினைத்து முடிப்பதற்குள் இந்த மனிதப் பிறவிகள் மீதி இருக்கும் மரங்களையும்  அங்கு இருக்கும்  உயிர்களையும் அழிக்க வந்து விட்டனர்.

குதிரையும் ஒட்டகச்சிவிங்கியும் கண்ணீருடன் “நாம் மலை மேலே ஏறி அங்கே வாழ்ந்து கொள்ளலாம், அங்கேயும் இவர்கள் வந்தார்கள் என்றால் நாமெல்லாம் எதிர்த்து நம் இடத்திற்காக  போராட தான் வேண்டும்” என்றது.

பறவைகளும் விலங்குகளும் மனிதர்களுக்கு எந்தத் தொந்தரவும் செய்வதில்லை, நாம்  அவற்றின் இடத்தை  கைப்பற்றாமல் இருக்கும் வரையில்.  இந்த பூமி நமக்கு மட்டும் சொந்தமில்லை, அனைத்து ஜீவராசிகளுக்கும் தான் சொந்தம்.

#Ads – Kids Story Books – Deals from Amazon 👇

 

#Ads – Children Activity Stuff – Deals from Amazon 👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

One Comment

நானும் என் மனசாட்சியும் (சிறுகதை) – ✍ அ. லட்சுமணக்குமார்

வனஜா அக்காவின் காதல் (சிறுகதை) – ✍ செல்வா