in

நீயும் ஒரு தாயே! (கவிதை) – வைஷ்ணவி

அரை தூக்கத்திலிருந்து

பயந்து எழும் குழந்தை

தாயை தேடுவது போல்,

அனைத்தும் வெறுமையாகும் போது

நாதனே !

மனம் உன்னை நாடுதே!

 

என்னுள்  இருக்கும் நீ

பலமுறை

என்னையே

வேறு வேறு பரிமாணத்தில் பிரசவிப்பதால்

எனக்கு

நீயும் ஒரு தாயே.

 

ஒவ்வொரு வருடமும்

அதே சிறு வயது குதூகலத்துடன்

என் பிறந்த நாளை

எதிர்நோக்குகிறேன்.

கொண்டாடுவதற்காக அல்ல.

உன்னிடமிருந்து வரும்

ஒற்றை வாழ்த்து செய்திக்காக….

 

இன்று

என் பிறந்த நாளென்று

உனக்கு தெரியுமென்பது,

எனக்கு தெரியும்.

ஆனால்

அது உனக்கு தெரியாது.

அதுவும் எனக்கு தெரியும்

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    சூப்பர் ஸ்டார் (சிறுகதை) – முகில் தினகரன், கோவை

    முகவரி தேடும் காற்று (நாவல்-அத்தியாயம் 17) – ”கவி இமயம்” இரஜகை நிலவன்