in

நீரினைத் தேடிடும் வேரென நான் ❤ (இறுதிப் பகுதி) -✍ விபா விஷா

நீரினைத் தேடிடும்... ❤ (இறுதிப் பகுதி)

இந்த தொடரின் அனைத்து பகுதிகளையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

சேலம் மாநகரத்தை விட்டு வெளியே பல கிலோ மீட்டர்கள் கடந்த பிறகு, ஆளரவமற்ற ஒரு பாதையில், தனியாக ஒரு தார் ரோடு சென்றது.

அந்தத் தார் ரோட்டின் இருபுறமும் வேறெந்த வீடும் இன்றிச் சமதளமாக இருந்தது

இறுதியில் அந்தப் பாதை ஒரு மிகப் பிரம்மாண்டமான மாளிகையின் முன் முடிவுக்கு வந்தது,  காரிலிருந்து கீழே இறங்கினான் யாதவ்.

அதன் சுற்றுச் சுவர் மட்டும், அந்த மாளிகைக்குக் கிட்டத்தட்ட அரை கிலோமீட்டர் தொலைவில் இருக்க, வாயிற் கதவு அடைக்கப்பட்டிருந்ததால், என்ன செய்வதெனத் தெரியாது விழித்தான் யாதவ் 

அதே நேரம், அந்த வாயில் தன்னிச்சையாய் திறக்க,  படபடத்த மனதை அடக்கி, ஜானவிக்கு எதுவும் ஆகிவிடக் கூடாது என்பதையே ஒரு ஜபம் போலச் சொல்லியவனாய் உள்ளே சென்றான் அவன்.

நெடுந்தூரம் நடந்து அந்த மாளிகையை அடைந்து அதன் முகப்புக் கூடத்திற்குள் சென்றதும், அந்த வாயில் தானாகவே மூடிக்கொண்டது 

அவ்வளவு பெரிய பங்களாவில் தனியாளாக நின்றிருந்த யாதவ், எந்த அறையில் ஜானு இருப்பாள் என்று அறிவதற்காக, கீழ்த்தளத்தில் ஒவ்வொரு அறையாகத் திறந்து பார்த்தான் 

ஆனால் கீழ்த்தளத்தில் யாரும் இல்லை எனத் தெரியவும், விரைந்து மேல் தளத்திற்கு சென்றவன், அங்கிருந்த முதல் அறையைத் திறக்கவும், அங்கு கால்மேல் கால் போட்டு வாயிலைப் பார்த்தபடி அமர்ந்திருந்தான் உதயசேனன்

சுற்றிலும் தேடிப் பார்க்க, ஓய்ந்து போன முகத்துடன் ஜானவி கை கால்கள் கட்டப்பட்டு தரையில் அமர்ந்திருந்தாள்

அவளை ஒரு கணம் மட்டுமே பார்த்த யாதவ், மீண்டும் உதயசேனனை வஞ்சத்துடன் நோக்கினான் 

“வருக வருக… மழவர் நாட்டின் பேரரசரே…” என்று கூறி எழுந்து நிற்க, கட்டுக்கடங்காத கோபத்துடன் விரைந்து சென்று அவனது மார்பின் மீது உதைத்தான் யாதவ்.

அதில் நிலைதடுமாறி உதய் கீழே சரிய, வன்மத்துடன் அதிவேகமாக எழுந்து யாதவை தாக்க முற்பட்டான் உதயசேனன் 

மனத்தால் மிகவும் அரக்கத் தனமானவனாகவும் கொரூரமானவனாகவும் இருந்தவனின் உடலில் அவ்வளவு பலம் இல்லாமல் போக, ஒரு கட்டத்தில் தொய்ந்து விழுந்தான் உதயசேனன்

அவனை விட்டு விட்டு, ஜானவியைக் கவனிக்கச் சென்றான் யாதவ் 

அவள் அருகே சென்று அவளது கட்டுக்களை அவிழ்க்கும் நேரம், யாதவின் முதுகை துப்பாக்கியின் குழல்கள் உரசின

மெல்ல திரும்பிய யாதவின் முகத்தில், இகழ்ச்சியான முறுவல் தோன்றியது.

“இன்னும் முதுகுல குத்தறதா நீ விடல இல்ல?” என்றவன் கேட்க 

“காதல்லயும் சரி, போர்லயும் சரி, எதுவுமே தப்பில்லனு நீ கேள்விப்பட்டதில்லையா?” என்றவன், யாதவ் அசந்த நேரம் அவனை வேறு புறம் தள்ளிவிட்டு, கீழே இருந்த ஜானவியை ஒற்றைக் கையால் தூக்கி அவள் நெத்தியின் மீது துப்பாக்கியை வைத்தான் உதயசேனன் 

அதைக் கண்டு யாதவின் அங்கமெல்லாம் பதறியது 

“உதயசேனா, அவளுக்கு ஏதாவது ஆச்சு.. உன்ன நான் சும்மா விடமாட்டேன் டா..” எனக் கத்தினான்

யாதவ் ஜானவியை நினைத்து பதறப் பதற, உதயசேனனின் மனம் துள்ளிக் குதித்தது

“ஓஹோ ஜானவிக்கு ஏதாவது ஆச்சுன்னா.. என்னை நீ சும்மா விடமாட்டியா?” என நக்கலாகக் கேட்டவன், “இந்த முறையாவது இந்த ஜானவி, உன் கையால தாலி கட்டிக்கிட்டாளா? இல்ல வேற யாருடைய பெண்டாட்டியையாவது நீ கட்டிகிட்டயா?” என வார்த்தையில் அமிலத்தை உமிழ்ந்தான் உதயசேனன் 

அதைக் கேட்டு சீறிச் சினந்த யாதவ், “இன்னொரு வார்த்த அவளைத் தப்பா பேசின, எதையும் யோசிக்காம உன்ன நானே கொலை பண்ணிடுவேன் டா..” என கர்ஜித்தான்.

யாதவின் அவனது பேச்சை பொருட்படுத்தாத உதயசேனன், “இங்கப் பாரு, உனக்கு இவ தான முக்கியம்? அப்போ அந்த வெடிபொருளோட வேதியல் மூலக்கூறு பத்தி எனக்குச் சொல்லிடு, உங்க ரெண்டு பேரையும் நான் நிம்மதியா விட்டுடறேன்” என பேரம் பேசினான் 

“அப்போ அரசனா இருந்தவன் இப்ப சாதாரணப் போலிசாமே? எப்படிச் சம்பளம் எல்லாப் பத்துதா? இப்போ பொண்டாட்டி வேற வந்துட்டா? அவளுக்கு வேற நிறையச் செலவு செய்யணும் இல்ல? அதனால நீ அந்தப் பார்முலாவை என்கிட்ட சொல்லிடு. உனக்கும் கூட ஒரு ஷேர் தரேன்” என அவன் பாட்டில் பேசிக் கொண்டே போனான் 

பொறுமையிழந்த யாதவ், அங்கு அழகுக்காகச் சுவற்றில் மாட்டப்பட்டிருந்த ஒரு வாளை எடுத்து, கோபாவேசத்தில் கண்கள் சிவக்க, ஜானவியைப் பிடித்திருந்த உதயசேனனின் கரத்தை வெட்டினான் 

அதிலேயே அதிர்ச்சியாகி அலறிய உதயசேனனை ஆத்திரம் தீருமளவிற்கு அடித்து தீர்த்தான் யாதவ் 

அந்த நேரத்தில் அடியாட்களுடன் இளங்கோவும் அங்கு  வந்து சேர்ந்தான்

உதயசேனனின் நிலையைக் கண்ட இளங்கோ, ஆத்திரத்துடன் அவனது அடியாட்களை யாதவ் மேல் ஏவ, அவர்கள் அத்தனை பேரையும் தனியாளாய் அடித்து நொறுக்கி துவம்சம் செய்தான் யாதவ்.

இறுதியில் ரத்த வெள்ளத்தில் இருந்த இளங்கோவை உதயசேனனிடம் அழைத்து வந்த யாதவ், “இங்கப் பாருங்க இப்பக் கூட நான் உங்களுக்கு இன்னொரு வாய்ப்பு கொடுக்கறேன். செஞ்ச தப்பை எல்லாம் ஒத்துக்கிட்டு கொஞ்ச நாள் ஜெயில்ல இருந்தா சீக்கிரம் திருந்தி நல்ல மனுஷனா வெளில வந்துடலாம்” என்றான் 

உயிர் பிழைத்தால் போதும் என எண்ணிய இளங்கோ, “சரி சார்… சரி சார், நான் அப்ரூவரா மாறிடறேன்” என கையெடுத்துக் கும்பிட்டான் இளங்கோ 

அதற்குள் அருகில் இருந்த வாளை எடுத்து அவன் வயிற்றில் இறக்கினான் உதயசேனன்

அதைக் கண்டு ஜானவி பயத்தில் கண்களை மூடிக் கொள்ள, தனது ஒற்றைக் கையிலேயே மீண்டும் அந்த வாளை சுழற்றி அதனை ஜானவியின் கழுத்துக்கு உதயசேனன் குறி வைக்க, அடுத்த கணம் யாதவின் துப்பாக்கிக் குண்டு அவன் நெற்றிப் பொட்டில் பதிந்தது 

ஜானவி அதிர்ச்சியுடன் பார்க்க, அவளுக்குக் கண்களாலேயே தைரியம் சொன்னவன், குகனுக்கு அழைத்து நடந்ததைக் கூறினான் யாதவ்

அதைக் கேட்டதும், விரைந்து அவ்விடத்திற்கு வருவதாய் கூறினான் குகன் 

அங்கேயே இருந்தால் ஜானவி இன்னும் பயந்து விடுவாள் என கீழ்தளத்திற்கு அழைத்து வந்தான் யாதவ் 

கீழே வந்த பின்னும் கூட, யாதவ் ஜானவி இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை.

பின் திடீரென மௌனத்தைக் கலைத்த யாதவ், “ஜானு… முற்பிறவில நான் என்னோட கடைசி தருணத்துல கொஞ்சம் குழம்பினது உண்மை தான், அப்பவும் உன்னையும் அநங்கனையும் சேர்த்து வச்சு நான் சந்தேகப்படல. ஆனா நான் அப்படிக் குழம்பினதுக்கே உன்கிட்ட லட்சம் முறை மன்னிப்பு கேட்டுக்கறேன். அப்படியும் கூட உனக்கு மனசு ஒப்பலைன்னா, நீ என்ன முடிவெடுத்தாலும் நான் சம்மதிக்கறேன்” என வார்த்தைகளில் கோபமும் வலியும் மிகக் கூறினான்

அதைக் கேட்டதும் கணமும் தாமதியாமல் ஓடிச்சென்று அவன் நெஞ்சில் சாய்ந்த ஜானவி, “இது தான் என்னோட முடிவு” என்றாள் கொஞ்சலாய்

மன பாரம் விலக, அன்போடு மனைவியை அணைத்துக் கொண்டான் யாதவ் 

பின் சற்று நேரத்தில் அங்கு வந்து சேர்ந்த குகன், அந்த அமைச்சருக்கும் உதயசேனனுக்கும் இருந்த தொடர்பை வைத்து அந்தக் கெமிக்கல் பாக்டரியில் நடந்த முறைகேட்டை தங்களது குழு கண்டுபிடித்துவிட்டதாய் கூறினான் 

அதையே காரணமாய் வைத்து, யாதவ் உதயசேனனை கைது செய்ய வரும்பொழுது நடந்த தகராறில் அமைச்சரை உதயசேனன் கொன்றதோடு யாதவையும் கொல்ல முயற்சித்ததால், தற்காப்புக்காய் உதயசேனனை யாதவ் சுட்டுவிட்டான் என கேஸை முடித்தனர்

ந்தப் பிரச்சனைகளெல்லாம் ஒரு வழியாய் முடிந்துவிட, வெகு நாளைக்குப் பிறகு யாதவும், ஜானவியும் அன்று தான் ஒன்றாய் இருந்தனர் 

ஏனென்றால், இறந்து போன இருவரும் சமூகத்தில் உயரிய இடத்தில் இருந்ததால், பல விசாரணைகளுக்கு உள்ளாகி அந்த அலைச்சலில் ஊரிலேயே இல்லை யாதவ் 

மேலும் இளங்கோவின் பாதுகாப்பில் மயக்கத்தில் வைத்திருந்த ஆதித்யனை மீட்ட யாதவ், அவரைக் குணப்படுத்தி அழைத்து வந்து அவரது வழக்கையும் ஒரு வழியாக முடித்தான் 

அருஞ்சுனையனின் கண்டுபிடிப்பான அந்த வெடிபொருளைப் பற்றி யாதவிடம் கேட்டார் ஆதித்யன் 

“அந்தப் பொருளால நல்லத விடக் கெட்டது நடக்கும் போலருக்கு சார். அதனால நாங்க அந்தக் குடுவைய அழிச்சுட்டோம். அதனால நீங்களும் அந்தக் கல்வெட்ட பத்தியோ, அப்படி ஒரு பொருள் அந்தக் காலத்துல தயாரிக்கப்பட்டதைப் பத்தியோ உங்களோட எந்தக் குறிப்புகளிலும் சேர்க்காதீங்க” என கேட்டுக் கொண்டான் யாதவ் 

இதெல்லாம் நடந்து கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்குப் பின் அவர்கள் அறையில் அவர்களுக்கென உண்டான தனிமையில், ஜானவியின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான் யாதவ் 

“என்ன ஜானு.. எப்பவும் பேசிக்கிட்டே இருப்ப. இப்போ என்னடான்னா இவ்ளோ அமைதியா இருக்க?” எனக் கேட்க 

“பிரிந்தவர் சேருகையில் பேச்சுக்கு இடமேது?” என ஜானவி மையலுடன் கேட்க, அதற்கு மேல் அங்கு பேச்சுச் சத்தம் இல்லாதபடி பார்த்துக் கொண்டான் யாதவ்

இந்த தொடரின் அனைத்து பகுதிகளையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்) 

#ad எழுத்தாளர் சஹானா கோவிந்தின் புத்தகங்களை வாசிக்க விரும்புவோருக்கு இணைப்புகள் 👇  

              

                  

#ad “சஹானா” மாத இதழ்களை வாசிக்க விரும்புவோருக்கு இணைப்புகள் 👇

             

         

Contact us for your Advertising Needs. Low Cost Customized Ads

Ads will be placed in this website (Crossed 50 thousand Visitors) &

Promoted across our Social Media Platforms

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

4 Comments

  1. ஒரே வரியில் சொல்லனும்னா விஞ்ஞானமும் மெய்ஞானமும் கலந்த கதை அருமையான கதை கரு தொடர்ந்து எழுத வாழ்த்துகள் பேபி
    love u so much 💗💗💗

இவர்கள்  மாக்கள்…✍சக்தி ஸ்ரீநிவாஸன்

தஞ்சாவூர் ஓவியம் – 🎨 சியாமளா வெங்கட்ராமன்