எழுத்தாளர் மலர் மைந்தன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
மாலை…
‘கணேஷ்’ அலுவலகம் முடிந்து வீடு திரும்பும் வேளை வானம் மப்பும் மந்தாரமாக இருந்தது.
வண்டிகள் நிறுத்தும் இடத்திற்கு நடக்கும் பொழுது இணைந்து கொண்டார் ‘மனோகரன்’
‘’என்ன மனோ சார் ரெயின் கோட்டோட வந்துருங்கீங்க போல”
“அதான் இன்னிக்கு மழை வருன்னு சொன்னார்களே”
“எங்க சார் வருது …அவுங்க சொல்ற அன்னிக்குத்தான் வர மாட்டேங்குது”
“ஆமா சார் …அது வேண்ணா உண்மைதான் சார்”
“நமக்கு இங்க சிட்டியில் மழ வந்து என்ன பிரயோஜனம் சார் …மழ தண்ணி வடிய மாட்டேங்குது …சாக்கடை தண்ணி கலந்துடுது …மாநகராட்சி என்ன செய்யுதோ?’”
“அப்படிச் சொல்லாதீங்க கணேஷ் …மழ வரட்டும் …அக்டோபர் மாசம் வந்தும் மே மாசம் மாதிரி வெய்யில் அடிக்காதே …கொஞ்சம் பூமி குளிரட்டும்”
“வாஸத்வம் தான் சார்”
“நமக்கு இல்லேன்னாலும் விவசாயிகளுக்கோசாரம் மழை வரட்டும் “
“உங்கள போல நல்ல மனசுகாரங்களுக்குவது மழ வரட்டும் சார்”
இருவரும் பேசிக்கொண்டு வழக்கமா வண்டிகள் பாதுகாப்பா நிறுத்திவைக்கும் ஷீட்டு கொட்டகைக்கு வந்ததும் …
“என்ன மனோ சார் …உங்க வண்டிய மழையில நனையாத பாதுகாப்பான இடத்துல நிறுத்துவீங்க இன்னிக்கு வெட்ட வெளியில நிறுத்தி இருக்கீங்க?”
“அது ஒண்ணுமில்ல …ஆயுத பூஜை வருது ..மழவந்தா வண்டி வாட்டர் சர்வீஸ் பண்ற செலவும் மிச்சமில்லையா …அநியாயத்துக்கு 200 ரூபா கேக்குறான் சார்”
கணேஷ் நமட்டுச் சிரிப்பு சிரித்துவிட்டு வண்டியை எடுக்க…வேகமாகக் காற்றடிக்க …கருமேகங்கள் கலைந்தன ..சிறுதுளியும் சிதறாமல்.
எழுத்தாளர் மலர் மைந்தன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings