2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7 பகுதி 8
தாராவிக்கு வந்த போது இருட்டி விட்டது. உள்ளுக்குள்ளே மெல்ல பயம் வந்தது. பசிக்க ஆரம்பித்தது.
நண்பர் ஒருவர் வைத்திருந்த பிரிண்டிங் பிரஸ் இருந்த இடத்தில் அச்சகம் இல்லாததால், அருகிலிருந்த ‘பான்’ கடையில் “இங்கே பிரஸ் வைத்திருந்த வில்சன் எங்கே இருக்கிறார் தெரியுமா?” என்று கேட்டான்.
“அது… அவர் பிரஸை மூடி தான் ஆறு மாதமாகி விட்டதே. நீங்கள் பக்கத்து வீட்டில் கேட்டுப் பருங்களேன்” என்றார் கடைக்காரர்.
‘’கடையைத்தாண்டி பக்கத்து வீட்டு வாசலில் இருந்த மூதாட்டியிடம் விசாரித்த போது, அடுத்த கல்லி (சிறிய முடுக்கு)யிலே மூணாவது வீட்டிலே இருக்கிறார்” என்றார்.
அந்த வீட்டில் கதவைத் தட்டியபோது ‘’யாரு? வில்சன் வெளியே போயிருக்காங்க. நீங்க யாரு? உள்ளே வாங்களேன்’’ என்றாள் வில்சனின் மனைவி திவ்யா.
உள்ளே போகவா வேண்டாமா? எனது தீர்மானிக்க முடியாமல், ”நான் வந்ததாகச் சொல்லுக்கள்.’’ என்றான்.
‘’உங்கள் பேர்?’’
‘’அரசு… வசாயிலிருந்து வந்திருந்தார் என்று சொல்லுங்கள்.” அவன் கிளம்ப எத்தனித்த போது
“வசாயிலிருந்து வந்திருக்கிறீர்கள், இருங்கள். இப்போது வந்து விடுவார்கள். மொபைல் போனைக் கூட வீட்டிலே வைத்து விட்டுப் போயிருக்கிறார்கள். இல்லையென்றால் மொபைலிலேயாவது கூப்பிட்டு விடலாம்” என்றாள் திவ்யா.
“பரவாயில்லீங்க, நான் அப்புறமாக வருகிறேன்.” என்று சொல்லி விட்டு திரும்பவும் தொண்ணூறு அடிச்சாலைக்கு வந்த போது, அவனை யாரோ தொடர்வது போல அவனுடைய பிடரியில் உணர்ந்தான்.
உடனடியாகத் திரும்பிப் பார்க்காமல் மெதுவாக அருகிலிருந்த பெட்டிக்கடைக்கு வந்து “ஒரு டிரிபிள் வைவ் சிகரெட் கொடுங்கள்” என்று சொல்லி விட்டு தற்செயலாக பின்னால் யாராவது நிற்கிறார்களா என்று திரும்பிப் பார்த்தான்.
கொஞ்சம் தள்ளி கையில் சிகரெட் மினுங்க சிரித்துக் கொண்டு நின்றார் பாபு.
அரசுக்கு ஆச்சரியமாக இருந்தது. ’அப்பாவின் ஆத்ம நண்பர் என்னைத் தொடர்கிறாரா? அப்பாவின் எந்தச் செயலுக்கும் பக்க பலமாக நிற்கும் பாபு என்னைத் தொடர்கிறார் என்றால்…’ அவனுக்குள் சிலிர்த்தது.
நான்… அப்பாவின் அடையாளங்களிலிருந்து தப்ப வேண்டுமெனில் என் இருப்பிடம் அவர்களுக்குத் தெரியக் கூடாது.
சிகரெட்டை வாங்கியவன் பற்ற வைக்காமல் திரும்ப பையில் போட்டுக் கொண்டு வேகமாக அடுத்தடுத்தக் கல்லிகளுக்குள் (சிறிய முடுக்குத்தெருக்கள்) நுழைந்து தொடர்பவர் தன்னை பார்க்கும் முன்னரே அடுத்தடுத்தக் கல்லிக்குள் (சிறிய முடுக்குத்தெருக்கள்) நுழைந்து பாந்திரா குர்லா லிங்க் ரோட்டிற்கு வந்து ‘ஆட்டோ’ என்று கைத்தட்டி கூப்பிட்டு ஏறி அமர்ந்து ”சுன்னா பட்டி ஜாவ்…” என்றான்.
திரும்பப் பார்த்து யாரும் தொடராததால் ஆட்டோ டிரைவரிடம் தீப்பெட்டி வாங்கி சிகரெட் பற்ற வைத்துக் கொண்டு “சுன்னாப்பட்டி ஸ்டேஷன் தாண்டி ஒரு சிக்னல் வருமே, அதிலே இறங்கி விடு” என்றான்.
சுன்னாப்பட்டி வந்ததும் இறங்கி அங்கிருந்து ‘சாய் பாலாஜி’ பில்டிங் தேடி மூன்றாவது மாடி ஏறி அறை எண் 301ல் மணி அடித்தபோது… “கோன்…”? என்ற சப்தத்தோடு கதவை திறந்த கிருஷ்ணன் “ஹே! என்னாச்சரியம்!! அரசு எங்க வீட்டிற்கு வந்திருக்கிறான். வா….வா…” என்றான்.
“நண்பர்கள் எல்லோரும் எங்கே?”
‘’அரோராவில் விஜயின் திருப்பாச்சி படம் பார்க்கப் போயிருக்காங்க. வா.. உள்ளே வாப்பா… என்ன சாப்பிடுகிறாய்? இது பாச்சிலர்ஸ் ரூம்… அப்படி இப்படித் தானிருக்கும்” என்று கீழே கிடந்த டெபோனைர் புத்தகத்தை எடுத்து ஒளித்து வைத்து விட்டு நாற்காலியில் கிடந்த ஜட்டி, பனியனை எடுத்து விட்டு அவனை அமரச் சொன்னான்.
தமிழரசு ஏதோ ஒரு உணர்வில் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தப்போது ரோட்டில் பாபு ”அரசு இங்கே சுன்னாப்பட்டியில் நண்பர்கள் அறையில் இருக்கிறார். ஒன்றும் பிரச்சினையில்லை” என்று போன் பண்ணிக் கொண்டிருந்தார்.
பெரும்மூச்சு விட்ட தமிழரசு, “கிருஷ்ணா இந்தப் பில்டிங்கிலேயிருந்து வெளியே போவதற்கு வேறே வழியிருக்கிறதா?” என்று கேட்டான்.
“பின்னாலே வழியிருக்கிறது. அந்த வழியிலே போகலாம். என்ன விஷயம்”? என்று கேட்டான் கிருஷ்ணா.
“அப்புறம் சொல்கிறேன்.” என்று கிளம்பிய அரசு, பின் வழியாக வெளியே வந்து ஆட்டோ பிடித்து “பாந்திரா போப்பா” என்றான்.
“பாந்திரா மே… கிதர் ஜானேகா?” என்றான் ஆட்டோகாரன்.
“ரயில்வே ஸ்டேஷன்” என்றான் அரசு.
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!





GIPHY App Key not set. Please check settings