in ,

மதி வதனா (பகுதி 7) – ராஜேஸ்வரி

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

பகுதி 1    பகுதி 2    பகுதி 3    பகுதி 4    பகுதி 5    பகுதி 6

வைத்தியர் சொன்னதைக் கேட்டு , மகிழ்ச்சியடைந்து, புன்னகைத்து விட்டு ராணி சௌபர்ணிகா அங்கிருந்து அகன்றதும், தனக்கு மயிலிறகாலான விசிறியால் விசிறி கொண்டிருந்த பணி பெண்ணிடம்  “இது எந்த இடம் யார் எங்களை இங்கு அழைத்து வந்தார்கள்?” என்று கேட்டாள் வதனா.

“நம் இளவரசர் மதி மகேந்திரனும், தளபதியின் மைந்தன் மாயவண்ணனும் தான் தங்களை இங்கு அழைத்து வந்தார்கள்”. இது ஆதுர சாலை. மருத்துவம் நடக்குமிடம்.  ஆமாம்.?விஷச் செடிகள் நிறைந்திருக்கும் அந்த அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதே… நீங்கள் எவ்வாறு சென்றீர்கள்.யாரும் உங்களை தடுக்க வில்லையா?என்று ஆச்சரியத்துடன் கேட்டாள் பணிப்பெண்.

“இல்லை அங்கு போகப் போகிறோம் என்று நாங்கள் யாரிடமும் சொல்லவில்லை. ஒரு நாள் மேல் தளத்திலிருந்து பார்க்கும் பொழுது அருவி தூரத்தில் இருப்பது தெரிந்தது.  எனக்கு அருவியை அருகில் இருந்து காண வேண்டும் என்ற ஆவல். ஆதலால் தான் யாரிடமும் சொல்லாமல் சென்றோம்” என்று புன்னகையுடன் பதில் அளித்தாள் வதனா.

  அதே சமயம்….அரண்மனையில்…

“அருவிக்கு அருகில் பலத்த பாதுகாப்பு போட வேண்டும், யார் அந்த பொறுப்பை ஏற்று இருக்கிறார்கள் அம்மா”என்று  கேட்டபடியே வந்தான் மதிமகேந்திரன்.

“நம் தளபதி அருமன் தான் மகேந்திரா”என்றாள் தன் மகனின் பொறுப்பைக்கண்டு பெருமிதமாக  ராணி சௌபர்ணிகா.

“அவருக்கு வயதாகி விட்டதால் கவனம் குறைந்து விட்டது. அதனால் நான் அந்த பொறுப்பை ஏற்க மன்னரிடம் தாங்கள் தான் அனுமதி பெற்று தர வேண்டும்” என்றான் மகேந்திரனை தொடர்ந்து வந்த மாயவண்ணன் , அருமனின் மைந்தன்.

“அப்படியே செய்கிறேன், மாயவண்ணா. இது போல் இனி யாருக்கும் அபாயம் நேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நல்லவேளை அந்த மங்கையருக்கு எதுவும் அபாயமாக நேரவில்லை. அதுவும், என் கண்காணிப்பில் இருப்பவர்கள். கலாசாலை நிர்வாகி குமுதவர்த்தினியிடம் ஆணையிட்டிருக்கிறேன். இதுவரை யாரும் அருவிக்கு செல்லவில்லை. இவர்கள் எவ்வாறு சென்றார்கள்? இல்லை இது போல விதிமீறல் நிறைய நடந்திருக்கிறதா? என் கவனத்தில் வரவில்லையா?” என்று குழப்பமான வருத்தத்துடன் வினவினார் ராணி.

“வருத்தம் கொள்ளாதீர்கள் தாயே ! இனி அந்த பொறுப்பை மாயவண்ணனுடன் நானும் கவனித்துக் கொள்கிறேன்” என்றான் மதி மகேந்திரன்.

“நல்லது ,நல்லது, அப்படியே ஆகட்டும்” என்றாள் ராணி.

இரண்டு நாட்கள் கழித்து லலிதாங்கி வதனாவிடம் பேசிக் கொண்டிருந்தாள்.

“அதற்குள் இப்படி இங்கு அனுப்பி விட்டார்களே இன்னும் இரண்டு நாட்கள் அங்கு இருந்தால் அரண்மனையை சுற்றி பார்க்கலாம் என்று ஆசைப்பட்டேன்” என்றாள்.

“வேண்டுமானால் மீண்டும் அருவிக்கு சென்று மயங்கி விழுவோமா?மீண்டும் அங்கு சென்றால் பார்க்கலாம்” என்று சிரித்தாள் வதனா.

“ஆமாம் நாம் எதனால் மயங்கி விழுந்தோம்? என்ன ஆயிற்று?” என்று சந்தேகத்துடன் கேட்டாள் லலிதா.

“ஏன் உனக்கு நினைவில்லையா? அந்த விஷப் புகையை நாம் சுவாசித்ததால் தான் மயங்கினோம்.” என்று பதிலளித்தாள் வதனா.

“அதுதான் நான் சொன்னேன் அங்கு யாருமே இல்லை திரும்பி விடலாம் என்று நீ தான் கேட்கவில்லை. என்ன ஆயிற்று பார்த்தாயா ?”என்று சிறிது கோபத்துடன் கேட்டாள் லலிதாங்கி.

வதனா சிறிது அமைதியாக யோசனையுடன் இருந்தாள் பிறகு மெதுவாக சொல்ல ஆரம்பித்தாள்.”ஆமாம். நான் தான் காரணம். ஆனால் என்னை அங்கு போக, யாரோ சொன்னது போல் இருந்தது. இரு நான் யோசித்துப் பார்க்கிறேன்” என்று கண்களை மூடி யோசித்தாள்.

ஆச்சர்யக் குழப்பத்துடன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தாள் லலிதா.

“இரவு நான் உறங்கிக் கொண்டிருந்த பொழுது யாரோ ஒரு பெண் என்னை மேல் தளத்திற்கு அழைத்துச் சென்றாள். அங்கிருந்து தூரத்தில் தெரியும் அருவியை  கைக்காட்டி எவ்வளவு அழகான அருவி தெரியுமா? அங்கே போய் குளித்தால் அவ்வளவு குளுமையாக இருக்கும் அந்த நீர். அந்த அருவியைச் சுற்றி வளர்ந்திருக்கும் புஷ்பச்  சோலைகள் நம்மை இந்திரலோகத்துக்கே அழைத்துச் செல்லும். நாளை மறவாமல் அங்கே செல் என்றாள். பிறகு கண் விழித்து விட்டேன். அது கனவா இல்லை நினைவா என்று எனக்கு புரியவில்லை”என்றாள் வதனா, குழப்பமான பார்வையுடன்.

“அந்தப் பெண்ணின் முகம் உனக்கு நினைவிருக்கிறதா பழக்கமான முகமா? இங்கு தங்கியிருக்கும் பெண்கள் யாராவது ஒருத்தியின் முகமா?” என்று கேட்டாள் லலிதாங்கி.

“இல்லை எனக்கு அந்த முகம் நினைவில்லை. இருளாக இருந்ததால் அவள் முகம் என் கண்களுக்கு சரியாக தெரியவில்லை” என்றாள் வதனா.

“சரி, அவள் குரலாவது உனக்கு நினைவிருக்கிறதா? என்று கேட்டாள் லலிதாங்கி.

“இல்லை, நான் அரை தூக்கத்தில் இருந்ததால் எனக்கு சரியாக நினைவில்லை” என்றாள் வதனா.

“ஆமா…ம்,அந்த இரவில் தூரத்தில் இருக்கும் அருவி உன்  கண்களுக்கு தெரிந்ததா? என்று கேட்டாள் லலிதாங்கி.

“நன்றாக தெரிந்தது. அன்று பௌர்ணமி. முழு நிலா வெளிச்சத்தில் அந்த அருவி தூரத்தில் வெள்ளி ஜரிகை போல் நன்றாக தெரிந்தது” என்றாள் பயந்த கண்களை விரித்துக்கொண்டு வதனா.

பேசியபடியே தூங்கிப்போனார்கள் இருவரும்.

மறுநாள் கலாசாலையின் நிர்வாகி குமுதவர்த்தினி இவர்களை அழைத்து,

“மாணவர்களே, வரும் ஆவணி மாதம் 20 ஆம் நாள் நம் இளவரசரின்  ஜென்ம தினம் வருகிறது. அன்று நடக்கும் கலை நிகழ்ச்சியில் பங்கு பெற தங்கள் இருவரையும் நான் தேர்வு செய்து இருக்கிறேன். அரண்மனையில் உள்ள சித்திரக்கூடத்தில் பல வண்ண ஓவியங்களையும் வண்ணக் கோலங்களையும் வரைவதற்கு சில மாணவர்களை தேர்வு செய்துள்ளேன். வதனா, நீயும் அதில் பங்கு பெற விரும்புகிறாயா? “என்று கேட்டாள்.

 “நிச்சயமாக விரும்புகிறேன்” என்று மிகவும்  ஆனந்த உற்சாகத்துடன் பதில் அளித்தாள் வதனச்சந்திரிகா.

“நானும் அவளுடன் செல்ல எனக்கு அனுமதி வேண்டும்” என்றாள் லலிதாங்கி.

“இன்னும் இரண்டு தினங்கள் கழித்து எல்லோரும் அரண்மனைக்கு செல்வோம். அங்கு இருபது தினங்கள் தங்க வேண்டும்.  எல்லோரும் தங்கள் உடமைகளை எடுத்துக் கொண்டு தயாராக இருங்கள்”  என்றாள் குமுதவர்த்தினி.

“அரண்மனையைச் சுற்றிப் பார்க்க இத்தனை விரைவில் வாய்ப்பு வரும் என்று எண்ணவில்லை….ஹஹஹஹ மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று அறைக்கு செல்லும் வழியில் துள்ளிக் குதித்தாள் லலிதாங்கி.

அரண்மனையின் வலப்புறத்தில் இருந்த ஐந்து தளங்கள் கொண்ட மிக பிரமாண்டமான மாளிகையின்

இரண்டாவது தளத்தில் இருந்த அறைகளில் அவர்கள் தங்க வைக்கப்பட்டனர்.

கீழ் தளத்தில் இருந்த சித்திரக்கூடத்தில் வதனச்சந்திரிக்காவும்  இன்னும் சில மாணவிகளும் தங்கள் வேலையை அன்றே தொடங்கினர்.

வதனா, ராதையும் கிருஷ்ணனும் காதல் வயப்பட்டிருக்கும் ஓவியத்தை தீட்டத் தொடங்கினாள்.

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    ரோசம்மா (சிறுகதை) – ஸ்ரீவித்யா பசுபதி

    கடவுள் என்றோர் சிநேகிதனுண்டு (அத்தியாயம் 7) – முகில் தினகரன், கோவை