ஜைனர்கள் ரொட்டிக்குத் தொட்டுக் கொள்ளச் செய்யும் ஒரு இனிப்புக்கார பச்சடி இது. வெகு சுலபமாகச் செய்யலாம். ருசியும் நன்றாக இருக்கும்.
இப்போது கொய்யாப்பழம் கிடைப்பதால் எழுதுவோமேயென்று தோன்றியது. அதிக ஸாமான்களும் வேண்டாம். நாமும் தக்காளிப் பச்சடி போல ருசிக்கலாமே என்று தோன்றியது. பாருங்கள் செய்து.
வேண்டியவைகள்
பழுத்த கொய்யாப்பழங்கள் – இரண்டு பெரிய ஸைஸ்
நெய் – இரண்டு டீஸ்பூன்
மிளகாய்ப்பொடி – கால் டீஸ்பூன்.
கடுகு, சீரகம் – வகைக்கு கால் டீஸ்பூன்
துளி உப்பு
துளி மஞ்சள் பொடி
(துளி என்பது ஒரு சிட்டிகை அளவு. கட்டை விரலுடன் அடுத்த இரண்டு விரல்களால் எடுத்துப் போடும் அளவு. கால் டீஸ்பூன் என்றும் வைத்துக் கொள்ளலாம்)
சர்க்கரை – இரண்டு டேபிள்ஸ்பூன்.
செய்முறை
- கொய்யாப்பழத்தைத் துண்டுகளாக்கவும்
- வாணலியை அடுப்பில் வைத்து, நெய்யைக் காய வைத்து, கடுகை வெடிக்க விட்டு சீரகத்தை வறுக்கவும்
- சிறிதளவு கொய்யாப்பழத் துண்டுகளையும் சேர்க்கவும்
- உப்பு, மஞ்சள், மிளகாய்ப் பொடி சேர்த்து சற்று வதக்கி, மிகுதித் துண்டங்களையும் சேர்த்து வதக்கி, அரை கப் தண்ணீரைச் சேர்க்கவும்
- இப்போது சர்க்கரையும் சேர்த்துக் கொதிக்க விடவும். அதிகம் வேக வேண்டாம். சேர்ந்து வரும் போது இறக்கி விடவும்
சற்று நீர்க்க இருந்தால் பச்சடி. கெட்டியாகத் தயாரித்தால் ஸப்ஜி. பழத்துண்டங்களுக்குத் தகுந்தாற் போல தண்ணீரைச் சேர்க்கவும்.
நாம் இஞ்சி பச்சை மிளகாய் வேண்டுமானாலும் சேர்க்கலாம்.
பழங்கள் சற்றுக் காயாக இருந்தால் அதிகம் வேக வைக்கலாம்
செய்து பாருங்கள். ரொட்டிக்கு உடன் சாப்பிட வாஸனையாக இருக்கும்.. எளிமையானது
“சஹானா” மாத இதழ்களை வாசிக்க விரும்புவோருக்கு, இணைப்புகள் 👇
எழுத்தாளர் சஹானா கோவிந்தின் நாவல்கள் மற்றும் சிறுகதைத் தொகுப்புகளை வாசிக்க விரும்புவோருக்கு, இணைப்புகள் 👇
இது எப்போவோ சாப்பிட்டது அம்மா. நீங்கள் எழுதி இருப்பதைப் பார்க்கையில் மறுபடி பண்ணிச் சாப்பிடும் ஆவல் வருகிறது. இங்கே கொய்யாப் பழங்களும் கிடைக்கின்றன. நல்லதொரு செய்முறை அம்மா. உங்களை இங்கே சஹானாவில் பார்க்க மனதில் சந்தோஷமாகவும் இருக்கிறது.
நன்றி உங்களுக்கும்
அம்மா உங்கள் ரெசிப்பி புதுசு. பார்த்துக் கொண்டுவிட்டேன் செய்து பார்த்துவிடுகிறேன்.
உங்கள் ரெசிப்பி இங்கும் பார்ப்பது சந்தோஷமாக இருக்கு..
மிக்க நன்றி காமாட்சிம்மா…
கீதா