2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7 பகுதி 8 பகுதி 9 பகுதி 10 பகுதி 11 பகுதி 12 பகுதி 13 பகுதி 14 பகுதி 15 பகுதி 16 பகுதி 17 பகுதி 18 பகுதி 19 பகுதி 20
ஆதர்ஷிடம் தைரியமாக..” பேச வேண்டும் “என்று சொல்லி விட்டாலும்…காவ்யாவின் மனம் தவியாய் தவித்தது ..பலவித எண்ணங்களால் குழப்பம் அலைமோதியது ..எப்படி பேசுவது என்ன பேசுவது.. பழக்கமில்லாதவரிடம் தங்கள் பிரச்சனையை கூறும் போது அவர் எப்படி எடுத்துக் கொள்வார் என பலவித குழப்பமான எண்ணங்களுடன் வந்தவளுக்கு .ஆதர்ஷ் அன்பாகப் பேசுவது ஒரு பெரிய ஆறுதலைத் தந்தது கண்டிப்பாக தங்கள் பிரச்சனை அவருக்குப் புரியும் ..எப்படி சமாளிப்பது என்று பேசி முடிவெடுக்கலாம் ..
காவ்யாவே முதலில் ஆரம்பித்தாள்..” மிஸ்டர் ஆதர்ஷ் .”
“ப்ளீஸ் இந்த மிஸ்டர் எல்லாம் வேண்டாம் ..ஆதர்ஷ்னே நீங்க ரெண்டு பேரும் என்னைக் கூப்பிடலாம்.”
” தேங்க்ஸ் மிஸ்டர் ஆதர்ஷ் … சாரி ஆதர்ஷ்… நேத்திக்கு எங்க வீட்டுக்கு உங்களை பொண்ணு பாக்க உங்க அப்பா அம்மாவோட வரச் சொல்லிட்டு, இன்னைக்கு நான் வந்து உங்களை தனியா பார்த்து பேசுறது சரி கிடையாது.அது உங்க மனச கஷ்டப்படுத்தும்னு புரியுது ..ஆனா அப்ப நான் ஒரு சூழ்நிலை கைதி. எங்கப்பாகிட்ட எவ்வளவோ எடுத்துச் சொல்ல முயற்சி பண்ணியும், எங்கப்பா எனக்கு சந்தர்ப்பம் கொடுக்கவே இல்லை. கண்டிப்பாக பெண் பார்க்க வரும்போது ஒத்துழைக்கனும்னு வற்புறுத்துனாங்க.. அதனாலேயே அதுக்கு சம்மதிச்சேன்.
ஜெய்யும், நானும் ஒரே ஸ்கூல்ல தான் படிச்சோம். ஒரே காலேஜ் தான். இவன் என்னை விட ஒரு வருஷம் சீனியர். கிட்டத்தட்ட நாலு வருஷங்களா நாங்க ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் விரும்புறோம் ..காதலிக்கும் போது எந்த சிக்கலும் இல்லை. அன்பு மட்டும் தான் எங்களுக்கு பிரதானமாக தெரிஞ்சது”
” இப்பதான் சிக்கல்.. எங்கப்பா கல்யாண ஏற்பாடு பண்ணும்போது.. எங்கப்பா கிட்ட எங்களுடைய காதலை சொல்ல முடியல.. சொன்னாலும் அவர் ஏத்துக்க மாட்டார். எங்கப்பா அம்மாக்கு அவங்க ஸ்டேட்டஸ் தான் பெரிசு. எங்க காதல் அவங்களுக்கு ஒரு தூசுக்கு சமானம்”
“அந்தஸ்து, ப்ரிஸ்டீஜ் ,பிஸினஸ் இது தான் அவங்களுக்கு பெத்த பொண்ண விட ரொம்ப முக்கியம். பணமே பிரதானமாக வாழ்றவங்க ..அவங்ககிட்ட கிடைக்காத உண்மையான அன்பையும், அக்கறையும் நான் ஜெய் கிட்ட பார்த்தேன் ..
ஜெய் இல்லாம எனக்கு வாழ்க்கையில்ல. இவன் தான் என் உலகம் .மனம் முழுக்க இவனை வச்சுக்கிட்டு, நான் எப்படி இன்னொருத்தர கல்யாணம் பண்ணிக்கிட்டு அவருடன் வாழ முடியும்.. அப்படி வாழ்றது ரெண்டு பேருக்கும் நான் செய்ற துரோகம்”
“அதனால இந்த கல்யாணத்துக்கு என்னால சரின்னு சொல்ல முடியல ..நான் எப்படி இதிலிருந்து வெளிய வந்து, இவன கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு எனக்குப் புரியல. ஆனா எனக்கு கண்டிப்பா ஜெய் வேணும் அதுக்கு நீங்கதான் உதவி செய்யனும் ஆதர்ஷ்.. ” என்று கண்ணீர்மல்க இரு கைகளையும் கூப்பினாள் காவ்யா .
“உணர்ச்சி வசப்படாதீங்க…காவ்யா. உங்களுடைய அன்பு.. நீங்க அவர் பேரில் வெச்சிருக்க காதல் உங்க வார்த்தையிலேயே தெரியுது. காதல்ங்கறது அந்தஸ்தையும், பணத்தையும் பாத்து வர்றதில்ல.. அன்பையும் மனசையும் பாத்து வருவது. அது உங்கப்பா, எங்கப்பா மாதிரி ஆட்களுக்குப் புரியாது ..
ஜெய் நீங்க ஒண்ணுமே சொல்லலியே.. நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு சொல்லுங்க . இந்த சிக்கலை எப்படி நாம சரி பண்ணலாம்ன்னு யோசிக்கலாம் “
“ஆதர்ஷ்! நீங்க ஒரு நல்ல நண்பனா.. அக்கறையா கேட்கறது மனசுக்கு இதமா இருக்குது. என்னுடைய குடும்பம் அம்மா, அப்பா, ரெண்டு தங்கைகள், தம்பின்னு கொஞ்சம் பெரிசு ..என் அப்பா ஒரு கம்பெனியில வேலை பாத்துகிட்டிருந்தாரு.. உடல்நிலை காரணமாக வேல பார்க்க முடியாத சூழல் ..மூத்த தங்கச்சி மட்டும் வேலைக்குப் போறா. அடுத்த ரெண்டு பேரும் படிச்சுகிட்டிருக்காங்க. அதனால குடும்பத்துக்கு மூத்த பிள்ளையா, குடும்பத்தை கவனிக்க வேண்டியது என்னோட கடமை. உங்ககிட்ட சொல்றதுக்கு என்ன பொருளாதாரத்தில என் குடும்பம் என்னை நம்பி இருக்காங்க.
அதே நேரம் காவ்யாவுடைய அன்பையும், காதலையும், என்னால விட்டுக் கொடுக்க முடியல ..இப்ப எனக்கு சிங்கப்பூர் கம்பெனி ஒன்னுல நல்ல வேலை கிடைச்சிருக்கு. நல்ல சம்பளம்.. ஆனால் காவ்யாவை விட்டுட்டு போவது எப்படின்னு எனக்கு புரியல… எந்த முடிவும் எடுக்க முடியாமல் திணறிகிட்டிருக்கேன் ..
எங்க பிரச்சனையை உங்ககிட்ட சொன்னா நீங்க இந்த கல்யாணத்த நிறுத்துறதுக்கு ஏதாவது ஒரு விதத்தில யோசனை சொல்லுவீங்க ..காவ்யா அப்பாகிட்ட போய் பேசுற தைரியம் எனக்கு இருந்தாலும், நிச்சயம் கண்டிப்பா அதுக்கு பிறகு ஒரு பெரிய போராட்டம் நடக்கும், அதை சந்திக்கிற அளவுக்கு என்னுடைய குடும்பம் வலுவானதில்ல. மேலும் நான் வெளிநாடு போயிட்டா.. அவங்களால என் குடும்பத்துக்குப் பிரச்சனை எதுவும் வரலாம். இதெல்லாம் உத்தேசம் பண்ணி நான் காவ்யா அப்பாகிட்ட நேரடியா பேச விரும்பல…
ஒரு வருஷம் டைம் கிடைச்சா நான் கேரியர்ல ஸ்டேபிள் ஆயிடுவேன் .குடும்பத்துக்கும் கொஞ்சம் சப்போட்டா இருக்கும் ..அதே நேரம் காவ்யாவும் படிப்ப முடிச்சிடுவா. அதுக்கப்புறம் நாங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிகிட்டா யாரையும் எதிர்பார்க்காம எங்க குடும்பத்தை நடத்த முடியும் …நான் ரொம்ப சுயநலமா பேசுறேன்னு எனக்கு புரியுது .. உங்க கிட்ட உதவி கேட்பதை தவிர எங்களுக்கு வேற எந்த வழியும் தெரியல .”
“நீங்க சொல்றது ரொம்ப சரி ஜெய்…எங்கப்பா, காவ்யா அப்பா எல்லாம் மென்மையான காதல் உணர்வுகளுக்கெல்லாம் மதிப்புக் கொடுக்க மாட்டாங்க. அதுவும் நீங்க ஒரு நல்ல வேலையில இல்லாம போய் காவ்யாவை பெண் கேட்கிறது இன்னும் மோசமான விளைவைத் தான் கொடுக்கும்.
அதனால கொஞ்சம் பொறுங்க! ஓரிரு நாள் எடுத்துக்குவோம். இந்த சிக்கலை எப்படி தீர்க்கறதுன்னு யோசிக்கிறேன். நீங்களும் யோசனை பண்ணுங்க.. கண்டிப்பா ஒரு நல்ல தீர்வு கிடைக்கும்.திரும்ப நாம மீட் பண்ணி பேசுவோம் “
நீரஜாவைப் பற்றிய கவலையில் இருந்த ஆதர்ஷுக்கு காவ்யா கூறிய விஷயங்கள் மேலும் மன குழப்பத்தை உண்டாக்கியது. இந்த சிக்கலில் இருந்து எப்படி விடுபட? யோசித்துப் பார்ப்போம் ஏதாவது வழி கிடைக்காமலா போய்விடும்.
மனதுக்கு பிடித்தவள் மாயமாய் மறைந்து விட்டாள்.
மணமுடிக்க நிச்சயித்தவளோ… திருமணத்தை நிறுத்த தன்னிடமே யோசனை கேட்கிறாள் …என்ன சூழல் இது ..மனதில் பலவித எண்ணங்களும் குழப்பங்களும் அலைமோத ஆதர்ஷ் காரை நோக்கி நடந்தான்.
(அலை வீசும் ..🐬)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings