2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7 பகுதி 8 பகுதி 9 பகுதி 10 பகுதி 11 பகுதி 12 பகுதி 13 பகுதி 14 பகுதி 15 பகுதி 16 பகுதி 17 பகுதி 18
அம்மா…அப்பாவைப் பத்தி சொன்ன விஷயங்கள் மாயாவை ரொம்பவே பாதிச்சது. ‘எந்த தவறும் செய்யாத என் அப்பாவுக்கு ஏன் இந்த தண்டனை..காதலிக்கிறது அவ்வளவு பெரிய குற்றமா ?திருமணமான தங்கையின் வாழ்க்கையைப் பற்றி கவலைப்படாமல், ஒரு அண்ணன் ஜாதி வெறியில் இருந்த அளவுக்குக் கூட போக முடியுமா ? சிந்திச்சுப் பாக்கவே முடியலை ஏன் இப்படி இருக்கிறாங்க ..?’
அன்பே உருவான அத்தையும், பாசமான அத்தானும், அதே வீட்டில் தான் இருக்கிறார்கள் ..ஆனால் மாமாவுக்கு மட்டும் ஏன் இந்த புத்தி ..அவரால் என் அம்மா எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறாள். வாழ்க்கையில் எல்லா சுகத்தையும் இழந்து, சந்தோஷமாக வாழ வேண்டியவள் ..பூவிழந்து பொட்டிழந்து ..புருஷன் அருகாமையின் சுகம் இழந்து, குழந்தையை தனியாக போராடி வளர்த்திருக்கிறா.
இந்த நிலைமை மாமாவின் ஜாதி வெறியால் வந்தது. வாழும் கனவிலிருந்த என் அப்பாவை எப்படி துடிக்கத்துடிக்க கொன்றிருப்பார்கள்.அவர் மட்டும் இருந்திருந்தால் எனக்கும்,அம்மாவுக்கும் வாழ்க்கை எவ்வளவு அர்த்தமுள்ளதாக இருந்திருக்கும்.
நான் எத்தனை நாள் அப்பாவுக்காக ஏங்கி இருந்திருக்கிறேன். அவர் என்னை எவ்வளவு அருமையாக வளர்த்திருப்பார் .அப்பா பாசம் கிடைக்காதபடி செய்து விட்டார் மாமா.. மனம் கொதித்தது… புழுங்கியது…எல்லாம் தெரிந்தும் ஒன்றும் செய்ய முடியாமல் கைகள் கட்டப்பட்டு இருக்கேனே…’ என்று தன் மேலேயே அவளுக்கு கோபம் வந்தது ..
அவள் மாமா வீட்டை அந்நியமாக நினைத்ததில்லை. அதற்கு காரணம் அத்தையின் அன்பான அரவணைப்பும், அத்தான் மேல் கொண்ட பிரியமும் ..தன் மனதில் ஒன்றுமில்லை.. அத்தான் மேல் எந்த காதலுமில்லை என்று அவள் மாமாவிடமும் ,அம்மாவிடம், அத்தையிடம் கூறினாலும் அவளுக்கு உண்மையில் ஆதர்ஷ் மேல் அளவிட முடியாத அன்பு இருந்தது என்பதுதான் உண்மை.
“என்னை நானே ஏமாற்றிக் கொள்கிறேன். நான் என் மனதின் ஆசைய வெளியே சொன்னால், இரண்டு குடும்பங்களுக்கும் நடுவே பூகம்பம் வெடிக்கும். இன்னொரு பிரச்சனையை தாங்கும் அளவுக்கு சக்தி அம்மாவிடம் இல்லை. அதனால் அத்தான் பேரில் உள்ள காதலை என் மனதுக்குள் போட்டு புதைத்துக் கொள்கிறேன். எனக்கு எல்லாவித உரிமையும் இருந்தாலும் ..அத்தானிடமிருந்து விலகியிருக்க வேண்டிய நிலையில் இருக்கிறேன்”
“அத்தான் உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும். நினைவு தெரிந்த நாள் முதலாய் மனதுக்குள் உங்களுடன் குடித்தனம் நடத்துகிறேன். என்னுடைய காதல் நிறைவேறாதது என்பது எனக்கு நூறு சதவிகிதம் தெரிந்த ஒன்றுதான். ஆனால் எனக்கு என் மனதை அடக்கத் தெரியவில்லை. அது எப்போதும் உங்களிடம் தான் வருகிறது .நான் விளையாட்டாக பாடுவதாக நினைக்கும் ஒவ்வொரு வரியும் உங்களுக்காக நான் எனக்குள் உருகி பாடுவது தான்..
வெளியே சொல்ல முடியாத இக்காதல் எனக்குள் மட்டுமே உள்ள மிக அழகான கவிதை ..அது என் வாழ்க்கையில் நான் எங்கே இருந்தாலும் என்னுடைய இந்த முதல் காதலை என்னால் மறக்க முடியாது. எல்லாருமே நான் உங்கள் பேரில் பிரியம் வைக்க கூடாதுன்னு சொல்லுவது என் மனசு ஏத்துக்க முடியாத ஒன்று .நான் உங்கள் மேல் வைத்திருக்கும் காதல் என் உரிமை.
நான் காதல் இல்லை .. என்று சொன்னால் தான் உங்களுடன் பேச ..பழக… முடியும். உங்களை பார்க்க முடியும். அதற்காக என் காதலை என் மனதுக்குள்ளேயே போட்டு புதைத்துக் கொள்கிறேன் அத்தான் .சொல்லாத என் காதல் பொக்கிஷமாய் எனக்குள்ளே இருக்கும். அத்தான் இனி உங்களுக்குன்னு ஒரு பொண்ணு வரப்போறா.. அவ தான் உங்க மனசுல இருப்பா…அவதான் அந்த வீட்டு மகாராணியா உலா வருவா.. ஆனாலும் என் மனசுல நீங்க தான் இருப்பீங்க.இதை யாராலும் மாத்த முடியாது “
தாங்க முடியாத துக்கத்தில் மாயா குமறி.. குமறி…அழுதாள். நெஞ்சே வெடித்துவிடும் போல அழுதாள். அவள் கண்ணீர் துளிகளால் தலையணை நனைந்தது. பாவம் அந்தப் பேதைப் பெண் தன் சிறகுகள் வெட்டப்பட்டு இருக்கிறது என்று தெரிந்து, சிரித்துக் கொண்டிருக்கும் பறக்க முயற்சிக்காத அழகிய பறவை ..
மறுநாள் காலை புலர்ந்தது .மனதில் உள்ள வருத்தங்கள் எல்லாவற்றையும் தூக்கி போட்டுவிட்டு, பழைய மாயாவாக மலர்ந்து சிரித்தாள். அவளுடைய சிரித்த முகத்தை பார்த்த பின்பே சாரதாவுக்கு மனதில் நிம்மதி வந்தது. ரொம்ப உடைந்து போய் இருப்பாளோ என்ற கவலை ஆட்டியது. ஆனால் ஒன்றுமே நடக்காத மாதிரி மாயா நடந்துகிட்டது… அவள் மனதில் பெரிய நிம்மதி.
“அம்மா நான் அத்தையப் போய் பார்த்துட்டு வரேன் “
“ஏண்டி இவ்வளவு நடந்திருக்கு. இப்ப எதுக்கு அங்க போற? இன்னுமொரு வாரம் போகட்டும்.. இப்போதைக்கு நீ போக வேண்டாம் “
“அத்தான் நேத்தைக்கு பொண்ணு பாக்கப் போயிருக்காரு.. நான் போய் என்னுடைய வாழ்த்தைச் சொல்லிட்டு வர்ரேன்” சாரதாவுக்கு மறுப்பு சொல்ல முடியவில்லை,
இந்த அளவாவது அவள் சாதாரணமாக நடந்து கொள்கிறாளே என்று நிம்மதி அடைந்தாள்.” சரி போயிட்டு வா…மாமா வீட்ல இருக்காரான்னு தெரியலையே “
“மாமா இல்லம்மா ..அவர் டிஸ்ட்ரிக்ட் கிளப் போயிருக்காரு. நான் அத்தைகிட்ட..போன் பண்ணி கேட்டுட்டேன் “
அவள் ஈஸ்வர பவனத்தில் நுழையும்போது வானம் லேசாக தூறிக்கொண்டிருந்தது …லேசாக குளிர் காற்று வீச காலை பொழுது ரம்மியமாய் இருந்தது ..பாடிக்கொண்டே உள்ளே நுழைந்தாள் ..
“புதிய வானம் புதிய பூமி
எங்கும் பனிமழை பொழிகிறது ..
நான் வருகையிலே..
என்னை வரவேற்க ..
வண்ணப் பூ மழை பொழிகிறது..
லலலலால்லா லா..”
உண்மையிலேயே மாயாவின் புண்பட்ட மனதை அந்த குளிர் தென்றலும், இளஞ்சாரலும், மயிலிறகாய் தடவிக்கொடுத்தது.
மாயா இயல்பாக இருந்தாலும், பாரு அவள் முகத்தைப் பார்க்க முடியாமல் சமையலறைக்குள் பதுங்கிக் கொண்டாள்.
ருக்மணி தேவி தன் அறையிலிருந்து எட்டிப்பார்த்தாள்” மாயா குரல் போல கேட்குது.. மாயா வந்திருக்காளா?” என்று தானே பேசியபடி எட்டிப்பார்க்க மாயா கீழே நின்று கொண்டிருந்தாள்.
அவ்வளவு சீக்கிரம் மாயா மனம் சமாதானமாகி, அந்த வீட்டிற்கு வருவாள் என்று சுத்தமாக எதிர்பார்க்கவில்லை… அவள் வந்தது மனநிம்மதியைக் கொடுக்க..” மாயா மேல வா! என் கீழயே நின்னுகிட்டிருக்க” என்றாள் .
“இதோ வர்றேன் அத்தை” என்றவள் நாலு நாலு படியாக குதித்து ஏறினாள்.
“அத்தை என் ஸ்வீட் அத்தான் எங்கே?..பொண்ண பார்த்த கிறக்கத்தில் டூயட் பாடிகிட்டிருக்காறா கனவுல.. இன்னும் எந்திரிக்கலையா? “
“அத்தை நான் போய் அத்தானை பார்த்து ஒரு ஹலோ சொல்லிவிட்டு வர்றேன் .”என்றவள் அத்தை பதிலை எதிர்பார்க்காமல் அத்தான் ரூம் கதவை தட்டினாள். ஆதர்ஷ் கதவை திறக்க ..
“எனக்கென ஏற்கனவே
பிறந்தவள் இவளோ..
இதயத்தை கயிறு கட்டி
இழுத்தவள் இவளோ.. “
“அத்தான் என்ன கனவு கண்டுகிட்டு இருக்கீங்களா?.. டூயட் பாட்ட நான் கெடுத்துட்டேனோ…ஒன்றுமே நடக்காதது போல சகஜமாகப் பேசும் மாயாவை ஒரு குற்ற உணர்வோடு ஏறிட்டுப் பார்த்தான் .
“சாரி மாயா ..அம்மா பழைய விஷயங்களை சொன்னதிலிருந்து எனக்கு மனசு சரியில்ல …உனக்கும் இதுதெரிஞ்ச பிறகு ரொம்ப கஷ்டமா இருக்கும்.உன்னோட ,அத்தையோட, இவ்வளவு கஷ்டத்துக்கும் காரணம் நாங்கள்ன்னு நினைக்கும் போது உன்னை என்னால ஏறிட்டு கூட பார்க்க முடியல ..”
“ஹேய்ய்… என்ன திடீர்னு இப்படி பக்கம் பக்கமா டயலாக் எல்லாம் பேசுறீங்க ..முடிஞ்சு போன விஷயத்துக்கு எதுக்கு முக்காடு போட்டுக்கிட்டு அழுவனும். லீவ் இட் .அத்தான். அப்புறம் அத்தான்.. பொண்ணு பாக்கப் போனீங்களே… சைலண்டா என்ன விட்டுட்டு போயிட்டீங்க பாத்தீங்களா..நீங்க என்ன கூட்டிட்டு போய் இருந்தீங்கன்னா நான் காவ்யாகிட்ட அப்படி இப்படி பேசியிருப்பேன், அவளை பத்தி நிறைய டீடைல்ஸ் தெரிஞ்சுகிட்டு வந்திருப்பேன். இவ்வளவு ஏன் போன் நம்பர் கூட வாங்கி உங்ககிட்ட சைலண்ட்டா கொடுத்திருப்பேன். மிஸ் பண்ணிட்டீங்க ஒரு நல்ல சந்தர்ப்பத்தை …”
அவள் போன் நம்பர் என்றதும் நேற்று நடந்த நிகழ்வுகள் அவன் மனதில் நிழலாடின ..
“ஏய் வாயாடி! இப்ப நேத்து என்ன நடந்ததுன்னு உனக்கு தெரியனும் .அவ்வளவு தானே! சொல்றேன். நாங்க மூணு பேரும் போனோம் அவங்க தடபுடலான வரவேற்பு கொடுத்தாங்க..அவங்க வீடு இந்த வீட்டை விடப் பெரியது. ஆனால் ரொம்ப கலைநயத்தோடு அலங்காரம் பண்ணி இருக்காங்கன்னு சொல்ல முடியாது. எங்க பார்த்தாலும் ஒரு பணக்காரத்தனம் தான் தெரிஞ்சுது ..”
“அதையெல்லாம் விடுங்க அத்தான்! முதல்ல முக்கியமான மேட்டருக்கு வாங்க ..பெண்ணை எப்ப பாத்தீங்க? எப்படி பார்த்தீங்க? ..இப்படியே நாணி.. கோணி.. வெட்கப்பட்டுகிட்டு பட்டு சேலை சரசரக்க.. கால் கொலுசொலி சலக்கு சலக்குன்னு கேட்க ..அவங்க ஒரு கேசரி கிண்ணத்தை தூக்கிட்டு வந்தாங்களா? ..சே.. நான் ஒரு நல்ல சீனை மிஸ் பண்ணிட்டேனே.”
“நீ நினைக்கிற மாதிரியெல்லாம் இல்ல ..ரொம்ப ட்ரெடிஷனல் இல்ல.. அதே நேரம் ரொம்ப மாடர்னும் இல்லை.. சாதாரணமா வந்தாங்க ..எல்லோருக்கும் வணக்கம்னு சொன்னாங்க. அப்புறம் டிபன் சாப்பிட்டோம். எல்லாரும் ஒருநாள் இங்க வரோம்னு சொன்னாங்க அப்புறம் நாங்க கிளம்பிட்டோம் ..”
“என்னத்தான் இது உப்பு சப்பு இல்லாம இப்படி சப்பையா மேட்டர் முடிஞ்சு போச்சு ..சினிமால வர்ற பொண்ணு பார்க்கிற சீன் மாதிரிகூட இல்ல.. அதுல கூட ஏதாவது இன்ட்ரஸ்டிங்கா இருக்கும் .உங்க கதையிலே ‘ட்விஸ்ட்டே இல்லையே..போங்க அத்தான் என்னை ரொம்ப ஏமாத்திட்டீங்க. ஒரு போட்டோ கூட இல்லையா ஒரு செல்பி எடுத்திருக்கலாமில்ல..”
“ஏதோ அப்பா சொன்னாரு.. பார்த்துட்டு வந்தோம் . இதுக்கு மேல விவரம் தெரியனும்னா உன் அருமை அத்தைகிட்ட கேட்டுக்கோ…என்ன ஆள விடு சாமி …”
அவளிடம் ஒன்றுமில்லை என்று சொல்லி முடித்து விட்டாலும் எதிர்பாராத ட்விஸ்ட் அன்று காவ்யாவை பார்க்கப் போகும் போது இருந்தது வாஸ்தவம். ..அது அவன் மட்டுமே அறிந்த ரகசியமாய்…
(அலை வீசும் 🐬)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings