in ,

கரை தொடாத அலைகள் 💗 (நாவல் – அலை 14) – தி.வள்ளி, திருநெல்வேலி 

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

பகுதி 1   பகுதி 2    பகுதி 3    பகுதி 4    பகுதி 5    பகுதி 6   பகுதி 7   பகுதி 8    பகுதி 9    பகுதி 10    பகுதி 11    பகுதி 12    பகுதி 13

ஈஸ்வர் எக்ஸ்போர்ட்ஸ் பரபரப்பாக இயங்கிக் கொண்டு இருந்தது …ஆதர்ஷ் அன்று அனுப்ப வேண்டிய முக்கியமான மெயில்களை அனுப்பிக் கொண்டிருந்தான் ..

‘ இன்னும் நிறைய மெயில் செக் பண்ணனும். அத்தோட இன்னைக்கு பீல்டு விசிட் வேற.. ப்ரொடக்ஷன் சைட்ல போய் பீல்ட்ல நடக்குற வேலையை பார்க்கனும் ..இதுவே பீல்டு விசிட் பண்ணி ரெண்டு வாரம் ஆயிடுச்சு .. வேற ஏதும் முக்கியமான அப்பாய்ண்ட்மென்ட் இருக்கான்னு கேட்கனும் …வேலை நிறைய காத்திருக்குது.. நீரஜா இருந்தால் நல்லா இருந்திருக்கும்.அவள் லீவில் போனது வேலை கூடிப் போச்சு ..’ வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போதே அவன் மனதில் பல எண்ணங்கள் ஓடின.

சதீஷை இன்டர்காமில் அவனுடைய கேபினுக்கு அழைத்தான்.

” சதீஷ் நீரஜா எங்க ரெண்டு நாளா காணோம்?இன்னைக்கும் வரலையா? லீவ் லெட்டர் எதுவும் அனுப்பியிருக்காங்களா? நான் இன்னைக்காவது வந்துடுவாங்கன்னு நினைச்சேன். இன்டிமேட் பண்ணாம லீவ் போட மாட்டாங்களே என்னாச்சு?”

நீரஜா வராததால் அவளுடைய வேலையை சதீஷ் பார்த்துக் கொண்டிருந்தான் …

“சார்! அவங்க ப்ராப்பரா இண்டிமேட் பண்ணல.. லீவ் லெட்டர் எதுவும் அனுப்பல.. யார்கிட்டயும் கூட சொல்லிவிடல.. என்ன ஆச்சுன்னு தெரியலை… அவங்களுக்கு போன் பண்ணி பார்த்தா போன் புல் ரிங் போய் கட்டாகுது சார்..”

“ஓகே சதீஷ்! நீங்க அவங்க வர்ற வரைக்கும், அவங்க வேலைய பாத்துக்கங்க. எந்தெந்த ஆர்டர்கள் அவசரமோ அதெல்லாம் முடிஞ்சு கொண்டு வாங்க. பைலை பார்த்துட்டு கையெழுத்து போடுறேன் “என்றான் …

சதீஷ் மனதுக்குள் சிரித்துக் கொண்டே அங்கிருந்து நகர்ந்தான் ..’தான் ஒருவேளை பரமேஸ்வரனிடம் கொளுத்திப் போட்டது தான் வெடிக்குது போல..எது எப்படி ஆனாலும் அவ வராம இருந்தா நல்லதுதான்’ என்று நினைத்தபடி தன் சீட்டுக்கு திரும்பினான்.

ஆதர்ஷ் தன்னுடைய நம்பரிலிருந்து நீரஜா நம்பருக்கு கூப்பிட்டுப் பார்த்தான். சதீஷ் சொன்னது போல புல் ரிங் போய் கட் ஆனது .’சரி இன்னும் ஒருநாள் பார்ப்போம். இல்லாவிட்டால் நேரில் போய் பார்க்க வேண்டியதுதான். இவள் ஏன் இப்படி பண்ணுகிறாள்.. வழக்கமாக, பொறுப்பாக இருப்பவள்.. லீவு லெட்டர் கூட அனுப்பாமல், இரண்டு நாளாக வராததன் காரணம் என்ன ?வேறு ஏதாவது பிரச்சினையா?’

வேலைப்பளு அவனை அழுத்த, சுத்தமாய் நீரஜாவை மறந்தே போனான் ..

மாலை ஸ்டாப்கள் எல்லோரும் கிளம்பி போய் விட ..பியூன் ராமசாமி காபியை எடுத்துக்கொண்டு அவன் ரூம் கதவை தட்டினார்..

“உள்ள வாங்க ராமசாமி .” ராமசாமியிடம் கேட்டுப் பார்க்கலாம். ஒருவேளை மற்றவர்களுக்கு தெரியாதது அவருக்கு ஏதேனும் தெரிந்திருக்கலாம் ..

காபியை அவரிடமிருந்து வாங்கிக் கொண்டவன்..

” ஏன் ராமசாமி.. நீரஜா ரெண்டு நாளா வரலையே? என்ன காரணம்? அவங்க அப்பா குமாரவேல் நல்லா இருக்காறா? இல்ல வீட்ல ஏதாவது பிரச்சனையா?”

“இல்ல சார் இந்த பொண்ணு வரவும் இல்ல ..லீவு லெட்டரும் கொடுக்கல.. அதுவும் என்கிட்ட குமாரவேல் அண்ணாச்சி நம்பர் இருந்தது, கூப்பிட்டுப் பார்த்தேன் ,அவர் நம்பரும் அடிக்குது.. ஆனால் எடுக்க மாட்டேங்கறாரு .என்ன பிரச்சனைன்னு தெரியல. நான் வேணா இன்னைக்கு சாயங்காலம் அவங்க வீட்டுக்குப் போய், பார்த்துட்டு வந்து உங்ககிட்ட நாளைக்கு விஷயத்தை சொல்றேன்”

“கண்டிப்பா ராமசாமி! போய் பார்த்துட்டு வாங்க! என்ன பிரச்சனை அவங்க வீட்டிலேன்னு தெரிஞ்சிட்டு வந்து நாளைக்கு சொல்லுங்க”

தான் நேரில் போனால் விஷயம் பெரிதாகும்.ஏற்கனவே கசமுசா என்று பேசும் ஆட்கள், இன்னும் அதிகமாகப் பேசுவார்கள். அதைவிட ராமசாமி போய் பார்த்துவிட்டு வந்து சொல்லட்டும் என்ற முடிவில் ஒரு நாள் அமைதியாக இருப்போம் என்று யோசித்தான்.

ஏனோ மனம் நிம்மதி இல்லாமல் தவித்தது.. நீரஜாவுக்கு ஏதாவது நடந்திருக்குமா? அப்படி நடக்க வாய்ப்பில்லை குடும்பமே தான் எங்கோ போய் இருக்கிறார்கள். போன இடத்தில் ஏதும் சிக்கலா என்று தெரியவில்லை .எந்த பதிலும் கிடைக்காமல் மனம் குழம்பி தவித்தது .

மறுநாள் ராமசாமி சொன்ன செய்தி அவன் தலையில் இடியை இறக்கியது ..அதிர்ச்சியில் உறைந்தான்..”என்ன சொல்றீங்க ராமசாமி! நிஜமாகவா..” என்று சீட்டை விட்டு எழுந்தான் ..

“ஆமாம் சார்! நான் போனபோது குமாரவேல் அண்ணாச்சி வீடு பூட்டியிருந்தது. அங்கு ஒருத்தரும் இல்ல. பக்கத்துல உள்ளவங்கள விசாரிச்சு பார்த்தப்ப அவங்களுக்கும் ஒன்னும் தெரியலைன்னு சொன்னாங்க “

“அடுத்த தெருவுல குமாரவேல் அண்ணாச்சியோட ஒன்னுவிட்ட தங்கச்சி வீடு இருக்கு.அங்க போய் விசாரிச்சேன் அவங்க தான் சொன்னாங்க அந்த பொண்ணு நீரஜாவுக்கு கல்யாணம். அதனால அவங்க கிராமத்துக்குப் போய் இருக்காங்கன்னு.”

“என்னாச்சு அவங்க குடும்பத்துக்கு? ஏன் இந்த திடீர் முடிவு? உங்களுக்கு ஏதாவது தெரியுமா ராமசாமி, அவள் வேலை பார்த்து தான் தம்பி தங்கை படிக்க வைக்கனும். அண்ணன் இன்னும் கால் ஊனலைன்னு சொல்லிட்டிருந்தா.. இப்ப எப்படி திடீர்னு கல்யாணத்துக்கு சம்மதிச்சிருப்பா.?”

“எனக்கும் இது அதிர்ச்சியாகத் தான் இருக்கு ஐயா! எனக்கு அண்ணாச்சிய நல்லாத் தெரியும். அவரு இப்போதைக்கு பொண்ணுக்கு கல்யாணம் பண்றதா சொல்லல .போன வாரம் கூட பார்த்தேன்.அதுக்குள்ள என்ன நடந்திருக்கும்? ஏன் இந்த திடீர் முடிவு ..”

“அவங்க வீடு இந்த பொண்ணோட சம்பளத்தையும் அவங்க அண்ணன் கொடுக்குற பணத்தையும் நம்பித்தான் இருந்துச்சு.. இப்ப இந்த பொண்ணு கல்யாணம் பண்ணிக்கிட்டு போனா அண்ணாச்சி குடும்பத்தை எப்படி நடத்துவாரு..அதெல்லாம் விட இந்த பொண்ணுக்கு கல்யாணம் பண்றத்துக்கு பணம் ஏது இவர்கிட்ட.. பணம் இல்லாமல் யார் எப்படி கல்யாணம் பண்ணிக்குவா? “

ஆதர்ஷூக்கு இன்னும் அதிர்ச்சியாகவே இருந்தது . அவனால் ராமசாமி சொன்னதை முழுதாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை .ஒருவேளை தெரியாமல் சொல்கிறார்களோ? ரெண்டு நாட்களுக்கு முன்னால் கூட நீரஜா சந்தோஷமாக வேலை பார்த்துக் கொண்டிருந்தாள் .அதற்குள் என்ன நடந்திருக்கும் ஏன் இந்த முடிவுக்கு வந்தாள்.”

.

அதற்குமேல் அவனுக்கு வேலை ஓடவில்லை.. நீரஜா வந்தால்தான் என்ன நடந்தது என்று தெரியும் ..நீரஜாவை கண்டுபிடிப்பது ஒன்றும் பெரிய கஷ்டமான காரியம் கிடையாது. எப்படியாவது கண்டுபிடிச்சிடலாம். ஆனால் ..

அவளுக்கு எல்லோரும் சொல்வதுபோல கல்யாணமாகி இருந்தால்..

பள்ளி பருவத்திலோ, காலேஜ் படிக்கும்போதோ, வெளிநாட்டில் வேலை பார்க்கும் போதோ கூட, அவன் எந்தப் பெண்ணையும் நினைத்துப் பார்த்தது கூட கிடையாது. யாரும் அவனை சலனப்படுத்தவில்லை .ஆனால் நீரஜா மெதுவாக அவன் மனதில் அமர்ந்து அவனை யோசிக்க வைத்தாள் .

அவளுடைய பண்பும், குணமும் அவனை வெகுவாக ஈர்த்தது. இயல்பாகவே அவன் அப்பா மாதிரி கிடையாது. முழுக்க முழுக்க அவன் அம்மாவின் மென்மையான குணத்தை கொண்டிருந்தான் ..

அதேபோல மென்மையான குணமுடைய, திறமையான பெண்ணாக, நீரஜா அவன் முன் நின்றபோது …அவன் அம்மாவின் குணத்தை அவளிடம் பார்த்ததாலோ என்னமோ ஒரு தனிப்பட்ட அன்பு அவள்பால் மலர்ந்தது. இன்னும் தன் அன்பைக் கூட அவளிடம் வெளிப்படுத்தவில்லை. அவர்களிடையே இருந்தது பாஸ்..பி.ஏ.உறவே…

ஆயிரம் கனவுகள் மனதிலோட, தன் மனதில் உள்ளதை அவளிடம் சொல்லத் துடித்துக் கொண்டிருந்த போது, இது போல ஒரு நிகழ்வு, அவன் மனம் மிகப்பெரிய ஏமாற்றத்தை தாங்கிக் கொள்ள முடியாமல் தவித்தது ..மலரத் துடித்த அந்த காதல் அரும்பு , மலரும் முன்பே கருகிவிட்டது ..

“ஏன் நீரஜா இந்த முடிவெடுத்தாள். நான் அவளுக்கு எந்த நெருக்கடியும் கொடுக்கவில்லை. இன்னும் சொல்லப் போனால் என் காதலை கூட அவளிடம் வெளிப்படுத்த வில்லை ..மற்றவர்கள் ஏதாவது அரசல்புரசலாக பேசுவது அவள் மனதை பாதித்திருக்குமா?

அப்படியெல்லாம் எளிதாக உணர்ச்சி வசப்படக் கூடியவள் அல்ல அவள்..எதையும் ஆழ்ந்து யோசித்து தெளிவாக முடிவெடுக்கக் கூடியவள்.அப்படியே அவள் இந்த காதலை ஏற்றுக் கொள்ளவில்லை என்றாலும் …என்னிடமே நேரடியாக தெரிவித்திருப்பாள். ஓடி ஒளிந்து கொள்ள மாட்டாள். இந்த நெருக்கடி அவளுக்கு ஏன் ஏற்பட்டது? யாரால் ஏற்பட்டது? எதற்காக ஏற்பட்டது? “

அவன் மனம் முழுக்க பல கேள்விகளால் குழம்பியது. தெளிவாக யோசிக்க முடியாமல், மனம் அலைபாய்ந்தது. வீட்டுக்கு போக மனம் இல்லாமல் காரை பீச் பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு கடற்கரையை பார்த்து நடந்தான். ..கடல் அலையைப் பார்த்து கொண்டு நேரம் போவது தெரியாமல் அமர்ந்திருந்தான்.

அம்மாவின் போன் அவனை நினைவுக்குக் கொண்டுவர ..

“இதோ இன்னும் அரை மணி நேரத்தில் வந்திடுவேன் அம்மா” என்று சொல்லிவிட்டு அவன் மனமில்லாமல் வீட்டுக்கு கிளம்பினான் …வாழ்க்கையின் எதிர்பாராத ஏமாற்றம் அவனை சூழ்ந்திருக்க ..மிகப்பெரிய குழப்பம் அவனை ஆட்கொண்டது ..

(அலை வீசும் 🐬)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் (அத்தியாயம் 6) – ரேவதி பாலாஜி

    தோற்றம் (சிறுகதை) – விடியல் மா. சக்தி