in

கண்களில் மின்னிடும் மின்னல் (மின்னல் 18) – ஜெயலக்ஷ்மி

இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

திர்ந்து நின்ற நித்யாவின் இருதயம் வேக வேகமாகத் துடிக்க ஆரம்பித்தது. வயிற்றுக்குள் தாழ்வழுத்த மண்டலம் உருவாகி, நெஞ்சுக்குள் சூறாவளியாய்ச் சுழன்று, தொண்டையை அடைத்து, விழி முகில்களில் மழையைச் சொரிந்தது.

விசாரிக்க அருகில் அழைத்த அந்தப் பையன்… நீலகிரியில் பார்த்த மைக்கண்ணன். அன்று விக்கோ பழத்தைக் கேட்டதும், மரத்திலிருந்து குதித்து, கால்சட்டைப் பையிலிருந்த அத்தனைப் பழங்களையும் அள்ளி, கன்னம் குழிய கலகலவென்ற குறும்புச் சிரிப்புடன் நீட்டியவன் நினைவினில் வந்து போனான்.

இன்று வெறித்த பார்வையும், வெளிரிய முகமும், பூட்டப்பட்ட வாயும் நித்யாவுக்கு பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தின. அன்று ரோஜாப் பூப்போன்றிருந்த பிஞ்சுக் கைகள், இன்று கன்றிக் காய்த்துப் போயிருந்தன.

”டேய்! மைக்கண்ணா! நீ எப்டிடா இங்க வந்து மாட்டின?” என்றவளின் ஒரு சொட்டுக் கண்ணீர் அவனது காய்த்துப் போன கரங்களின் மீது விழ, அம்போதுதான் உயிரடைந்தவன் போல் அவளை நிமிர்ந்து பார்த்தான். வெறித்த கண்களில், சிறிது ஈரம் படர, மெதுவாக புன்னகை பூத்தான்.

அவனை அருகில் அழைத்து இருக்கையில் அமர்த்திக் கொண்டு, “இந்தா, பிஸ்கெட் சாப்ட்டு, ஜூஸைக் குடி!” என்று குடிக்க வைத்துவிட்டு, அவன் முதுகைத் தடவியவாறு, “சொல்லுடா! இங்க எப்படி வந்த? துருதுருன்னு இருப்பியே. ஏன் இப்படி அமைதியாய்ட்ட?” என்று கேட்டாள்.

ம்மா, அப்பாவை இழந்த மைக்கண்ணன் பாட்டியோடு வாழ்ந்து வந்தான். கொரோனாவில் பாட்டியும், மரிக்க, என்ன செய்வதென்று தெரியாமல், மருத்துவமனை வாசலில் நின்றவனை,  ”சாப்பிட போலாம் வா” என்று கூப்பிட்டவரின் பின்னால் போனான்.

ன்னைக்கு ஒரு தாத்தாக்கு டேப்லட்ஸூம், ப்ரெட்டுடம் வாங்கிக் கொடுத்தோல்லீங்க அக்கா, அந்த வீட்டுக்குத்தாங்க கூட்டிட்டுப் போனாங்க. சாப்பாடு குடுத்தாங்க. ஆனா, வெளிய விடலங்கக்கா. குகை மாதிரி ஒரு எடத்துக்கு கூட்டிட்டுப் போனாங்க.  அங்க நெறைய பேர் இருந்தாங்க. அப்புறம் வேற ஊருக்கு கூட்டிட்டுப் போய், இதோ, இங்க ஆப்பரேஷன் பண்ணிட்டு, கொஞ்ச நாள் அங்கிருந்துட்டு இவங்களோட இங்க அனுப்பிட்டாங்க” என்று சட்டையைத் தூக்கி, வயிற்றின் வலது புறத்திலிருந்த  வில் வடிவிலான தையல் தழும்பைக் காண்பித்தான். ”இங்கியும் எங்கியும் போக முடியாதுங்க. வேலை மட்டும் செஞ்சிட்டே இருக்கணும். இங்க வந்ததுலருந்து யார்ட்டயும் பேசவே இல்லீங்களா?… அதாங்க” என்றான்.

”ஏண்டா, ஆப்பரேஷன் பண்ணாங்க? வயிறு ஏதாவது வலிச்சிச்சா? ” என்று கேட்டாள்.

”இல்லங்கக்கா. அங்கிருந்த நிறைய பேருக்கு பண்ணாங்கக்கா” என்றான்.

”அடப்பாவிகளா… கிட்னி எடுத்துருக்காங்கனு நினைக்கிறேன். ஹ்யூமன் ட்ராஃபிக்கிங்க எல்லா வழியிலயும் பண்றாங்கனு நெனைக்கிறேன். ஆர்கன் ரிமூவ் பண்ணிட்டு, கொத்தடிமையாவும் வித்துருக்காங்க. அந்த வீட்டு மேல எனக்கு டவ்ட் இருந்துட்டேதான் இருந்துச்சு. பட் கண்டுபிடிக்க முடியல” என்று புலம்பியவள்,

”ஓ,கே. செல்லம். டோன்ட் ஒர்ரி. உன்ன இங்கருந்து இப்பவே கூட்டிட்டு போய் ஸ்கூல்ல சேக்க ஏற்பாடு பண்றேன்” என்றவள், அதற்கான ஏற்பாடுகளைச் செய்துவிட்டு, அவர்களை பணிக்கு அமர்த்திய முதலாளிகளைக் கைது செய்யவும்,  மனிதக் கடத்தலில் ஈடுபட்டவர்களைக் குறித்து விசாரிக்கவும் காவல்துறையிடம் புகார் பதிவு செய்யுமாறு, தனது ஆய்வாளருக்கும், தாசில்தாருக்கும் அறிவுரை வழங்கினாள்.

உரிமையாளர் சார்பில் அரசியல்வாதி ஒருவர், “தப்புதான் மேடம்! தனியா வாங்க பேசிக்கலாம்“ என்றார்.

”பேசறதுக்கு என்ன இருக்கு? வக்கீல் வச்சி, கோர்ட்ல பேசிக்கோங்க” என்றபடி  கீழே இறங்கி காத்துக் கொண்டிருந்த பத்திரிக்கை நண்பர்களிடம் மீட்பின் செய்தியைப் பகிர்ந்தாள்.

மீட்பின் சந்தோஷம்… மீண்டும் ஒருமுறை! ஆனால் இம்முறை அந்த சந்தோஷத்தை அனுபவிக்கத் தோன்றவில்லை. கொஞ்சம் கூட மனிதாபமில்லாமல் மனித உறுப்புகளை திருடி விற்பதும், அவர்களையே கொத்தடிமைகளாக விற்பதும், என்ன ஒரு மனசாட்சி இல்லாத செயல் என மனம் குமுறியது. எவ்வளவு அழகாக பட்டாம்பூச்சி போல் ஆனந்தமாய் பறந்து திரிந்த அந்தச் சிறுவனின் இறக்கைகள் பிய்க்கப்பட்டு, அவனுடைய குழந்தைப் பருவம் உரிக்கப்பட்டு, அந்தத் தோலில், இந்தப் பைகள் தைக்கப்டுகின்றன. 

காசினி மீட்பின் போது உடனிருந்த நீலகிரி காவல் ஆய்வாளரிடம் தொடர்பு கொண்டாள். ”ஏற்கெனவே சொன்னேனே ஸர், அந்த வெள்ளை மாளிகைல ஏதோ மர்மம் இருக்குனு. ஏதோ பேய் மாளிகை மாதிரி இருந்துச்சு. கடைசில ஹ்யூமன் ட்ராஃபிக்கிங் நடக்குது ஸர். ஆர்கன் ரிமூவல் அன்ட் பாண்டட் லேபர் ட்ரேடிங். ஏதோ குகைக்குள்ள நடக்குதுங்றாங்கனு சொல்றாங்க. திப்பு சுல்தான் போர்க் காலங்கள்ல பதுங்றதுக்கு அமைச்ச குகைகள் அங்க இருக்குன்னு சொன்னாங்கள்ல. அது எதாவது இருக்குமா, ஸர்? கொஞ்சம் இன்வெஸ்டிகேட் பண்ணுங்க ஸர். நான் இங்கயும் கலெக்டர் மேடம்கிட்ட சொல்றேன்” என்றாள்.

நக்கலாக சிரித்தவர், ”சரிங்க மேடம்” என்றார்.

”என்ன ஸர், சிரிக்கிறீங்க?” என்று கேட்டாள்.

”இல்ல, திப்பு சுல்தான் குகைன்னீங்களே, இந்தக் காலத்துல அங்கெல்லாம் யார் போகப் போறாங்க?  அதான் சிரிச்சேன்” என்றார்.

”வேற எங்கயும் அங்க குகைலாம் பார்த்ததில்லையே, அதனால சொன்னேன் ஸர். ஏதாவது சின்ன சின்ன இன்ஃபர்மேஷன் உங்களுக்கு யூஸ் ஆகலாம், இல்லையா? அதான்” என்றாள்.

”கரெக்ட் தான் மேடம். நோட் பண்ணிக்கிறேன்” என்றார் அவர்.

விக்கோ மரத்திலிருந்து கலகலவென சிரித்தவாறே கீழே குதித்த, வெள்ளை மாளிகை காவலாளிக்கு நாற்காலியை மின்னலென இழுத்துப் போட்டு, ஊற்று நீர் அள்ளி வந்த மைக்கண்ணனும், வெளிறிய முகமும், வெறித்த பார்வையுமாய் பேச்சையும், சிரிப்பையும் மறந்து பைத் தைக்கும் அழுக்கு கண்ணனும் மாறி, மாறி நித்யாவின் நினைவில் அலைமோதினர்.

அவள் நெஞ்சுக்குள் சுழல் அடித்தது. சென்னையில் இதுபோல கொத்தடிமை தொழிலாளர்களாக சிக்கிக் கொண்டவர்களை முற்றிலுமாய்  மீட்டெடுத்துவிட விரும்பினாள்.

சமூக ஆர்வலர்கள் இவளது ஆர்வத்தையும், தைரியத்தையும் பார்த்து, சென்னையில் கொத்தடிமைத் தொழில் முறையை முற்றிலும் அகற்றிவிடலாம் என நம்பிக்கை கொண்டு, இவளுடன் ஆர்வமாகப் பணியாற்ற ஆரம்பித்தனர்.  அவளுடன் பணியாற்றும் பிற அலுவலர்களோ, இவள் ஏன் இப்படி வெறி கொண்டு பத்ரகாளி போல் அலைகிறாள்?

சிறு தொழில் செய்கிற அந்த முதலாளிகளுக்கு எவ்வளவு தொல்லை ஏற்படும்? கொத்தடிமை தொழில் முறை, மனிதக் கடத்தல் போன்ற குற்றங்களுக்காக வழக்கு தொடுத்தால் அவர்களுக்கு சிறை தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டியிருக்குமே, அவர்களுடன் பேசி சமாதானமாகப் போனால் என்ன? இத்தனை வருடமாக இந்தச் சட்டங்கள் இருக்கத் தானே செய்கிறது? நமக்கு வேறு வேலையே இல்லையா? என்ற ரீதியில் பேசத் தொடங்கினர். சிலர் இவளிடமே கேட்டனர்.

            ”முதலாளிகளைத் தொழில் செய்ய வேண்டாம்னா நான் சொல்றேன்? பதினெட்டு வயசுக்கு மேல உள்ளவங்க எத்தன பேர் வேல இல்லாம இருக்காங்க? அவங்களுக்கு வேல குடுக்கலாமே? மினிமம் வேஜஸ் குடுக்கக் கூடாது. வெறும் சாப்பாடு போட்டு வேல வாங்கலாம்னு தான இந்த சின்னப் பசங்கள வேலைக்கு வைக்கிறாங்க? நம்மளோட சைல்டுஹூட் இப்டி இருந்திருந்தா, நாம இப்டி பேசற எடத்தில இருந்திருப்பமா? நமக்கு படிப்பு, விளையாட்டு, பொழுதுபோக்கு எல்லாம் கெடச்சிச்சி இல்ல. நம்ம பிள்ளைங்க இப்டி மாட்டிட்டிருந்தா நாம இப்டி பேசுவோமா?  சரி, இப்டி பொது நலமா கூட நீங்க யோசிக்க வேண்டாம். யுனைடெட் நேஷன்ஸோட பொருளாதார வளர்ச்சிக்கான ஸஸ்டைனபிள் டெவலப்மெண்ட் கோல்ஸ்ல கூட கொத்தடிமை தொழில் முறை, ஹ்யுமன் ட்ராஃபிக்கிங், சைல்ட் லேபர் லாம் 2025க்குள்ள ஒழிக்கப்படணும்னு சொல்றாங்க. அப்டி பொருளாதாரத்ல ஏற்பட்ற பாரம் ஒவ்வொரு இண்டியன் சிட்டிஷனோட தல மேலத்தான இறங்கும். அப்படி ஒரு சுய நலத்தோடயாவது இதெல்லாம் ஒழிக்கணும்னு நினைங்க”  என்றாள்.

            ”நீங்க சொல்றதெல்லாம் சரிதான் மேடம். இங்கருந்து விடுவிச்சு அனுப்பினா, வேற ஊர்ல வேலைக்குப் போவான். இல்லைன்னா பதினெட்டு வயசான மறுபடியும் இங்கயே வருவான்”.

            ”சைல்டு லேபர் ஸ்பெஷல் ஸ்கூல்ல படிச்ச எத்தனையோ பேரு டாக்டர்ஸ், என்ஜனியர்ஸ் ஆய்ருக்காங்கல. ஏன் சைல்ட் லேபரா இருந்தவங்க கலெக்டராக் கூட ஆயிருக்காங்கள்ல? முதல்ல அவங்க பேசிக் எஜூகேஷனையும், இல்ல, ஏதாவது தொழிற் கல்வியோ கூட கத்துக்கட்டும்.  அப்புறம் என்ன வேல பாக்கணும்னு அவங்க டிசைட் பண்ணிக்கட்டும். அதுவரை அந்தந்த டிஸ்ட்ரிக்ட் அட்மினிஸ்ட்ரேஷன் தான் பாத்துக்கணும். முதல்ல நம்ம கடமையை சரியாச் செய்வோம். மத்ததெல்லாம் அப்புறம் பாக்கலாம். ஒருத்தன் உங்க வீட்ல  திருட்றத பாத்துட்டு, இப்போ புடிச்சா மட்டும் இன்னொரு எடத்ல திருடாமயா இருக்கப் போறான், இங்கயே திருடிட்டு போட்டும்னு விட்ருவீங்களா? ”    என்று கேட்டாள்.

இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    பார்க்கர் பேனாவும் பாரத்வாஜ கோத்திரமும் (பகுதி 12) – வைஷ்ணவி

    கண்ணனாய் வா! (சிறுகதை) – ஜெயலக்ஷ்மி