கண்ணான கண்ணா! கார்மேக வண்ணா !
என்ஜீவன் நீயல்லவோ?
நீயின்றிநானும் நானின்றிநீயும்
வாழ்தல்என்றும் நலம்தருமோ?
தந்துவிடு உன்புல்லாங்குழலை
குழல்இசைக்கும்கீதம் நீதானே?
சூட்டிவிடு உன்மயில்இறகை
வண்ணமயிலின்அழகும் நீதானே?
தான்என்ற கர்வம்நீக்கி
புல்மேல் பனியாய்
சூரியஜோதியில் கரைந்த
நிலவொளி போல்
எனைஉன்னுடன் கரைத்துவிடு
வாஎன்றெனக்கு ஆணையிடு
நாடிவர அனுமதிகொடு
நின்தாள்சேரும்நாள் நல்லநாளே
இப்பெரும்வரம் தந்தருளே
பூவின்மணமும் வாழ்வின்சுவையும்
கண்ணின்ஒளியும் நீயல்லவோ?
ஆதியும்நடுவும் அந்தமும்சராசரமும்
உயிருக்கும்பொருள் நீயல்லவோ?
கண்ணான கண்ணா கார்மேக வண்ணா
என்ஜீவன் நீயல்லவோ?
நீயின்றிநானும் நானின்றிநீயும்
வாழ்தல்என்றும் நலம்தருமோ?
#ad
“சஹானா” மாத இதழ்களை வாசிக்க விரும்புவோருக்கு, இணைப்புகள் 👇
GIPHY App Key not set. Please check settings