in ,

காது குத்து கல்யாணம் ❤ (சிறுகதை) – சசிகலா எத்திராஜ்

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்… 

கல்யாணி தன் அண்ணன் கௌதம் பார்த்துக் கல்யாண தேதி குறிக்கப் போவதாகத் தன் மகனிடம்  சொன்னார்.

அதைக் கேட்டு அதிர்ந்து நின்ற அகிலன் தன் அப்பா ராமசந்திரனைப் பார்க்க அவரோ ஆம் மாதிரி தலையசைத்தார்.

அகிலனோ ”அம்மா வேண்டாம்,  எனக்கு இப்போதைக்குக் கல்யாணம் பண்ண இஷ்டமில்லை.  கொஞ்ச நாளாகட்டும்,” சொல்ல

”இல்லை தம்பி இதுயெல்லாம் ஆதியிலே பேசி வைச்சது., இப்ப கல்யாணம் தேதியை தான் முடிவு பண்ணப் போறேன்”, சொன்னாள்  கல்யாணி.

அதில் மேலும் அதிர ”என்னம்மா சொல்றீங்க,  மாமா பொண்ணையா , அவ என் அளவுக்குப் படிக்கக் கூட இல்லை அவளைப் போய் கட்டனும் சொல்றீங்க.”,

”படிப்புக்கும் வாழ்க்கைக்கும் என்ன சம்பந்தம். படித்திருந்தாலும் படிக்காமல் இருந்தாலும் குடும்பத்தைச் சேர்ந்தவர்களை அரவணைத்து அன்போடு பாசத்தோடு குடும்ப அமைப்பைச் சிதைக்காமல் கடைசி வரை கொண்டு செல்வது பெண்ணின் கையில தான் இருக்கு”,.

”அதிலே என் மருமகள் கெட்டிக்காரி. பாசத்திலும் அன்பை வாரி வழங்குவா. என் குடும்பம் என் அண்ணன் குடும்பமும் கடைசி வரை பிரியாமல் இருக்கும்.”,

”சொந்தப்பந்தம் உறவுகளோடு இருந்தால் தான் நல்லது கெட்டது எல்லாவற்றிற்கும் துணையாக வந்து நிற்பார்கள்”,.

”நானும் அப்பாவும் முடிவு பண்ணியாச்சு, அதனால்  நாங்க ஊருக்குப் போறோம். நீ நாளைக்குக் கிளம்பி வா,” சொல்லிவிட்டு கிளம்பினார்கள் ராமசந்திரனும் கல்யாணியும்.

அவனுக்கோ தலை கிறுகிறுத்தது. இதை எப்படி வேண்டாம் சொல்வது புரியாமல் திகைத்தான் அகிலன்.

அகிலன் எம்.பி.ஏ படித்துவிட்டு அப்பா செய்யும் ஜவுளி வியாபாரத்தைப் பெருக்கவும், மேலும் பெரிய கடைகள் வேறு ஊரில் வைக்க அலையவும் செய்கிறான்.

அதனால் தனக்கு வரப் போகிற பெண் படித்தவளா ஒரு நிர்வாகத்தை நிறுவகிக்கும் திறமை உடையவளாக இருக்கணும் கனவு அவனுக்கு உண்டு.

கிராமத்திற்குச் சிறு வயதில் போய்யிட்டு வந்தப்ப பார்த்த  சிறு பெண் தான் ஆதினி.

பத்தாம் வகுப்பிற்கு பின்னும் காலேஜ், வேலை வந்த அப்பறம் அவன் கிராமத்திற்குப் போகவில்லை. அவள் பெரிய மனுசியாகி விட்டாள் வந்து மாமா கௌதமன் அழைத்தப் போதும் அவன் டூருக்காக வடநாட்டு பக்கம் சென்று விட்டான்.

அவன் அம்மா அவளைப் பற்றி பேச வரும்போது எல்லாம் எதாவது தடங்கல் வந்து விடும்.

அதனால் அவள் என்ன படித்திருக்கிறாள், எப்படி இருப்பா கூடத் தெரியாது.

ஊரில் விசேஷம் என்றால் அம்மா அப்பா இருவரும் சென்று வருவதால் இவனுக்குப் போகவும் நேரமும் இருந்ததில்லை.

ஆனால் எப்பவும் வீட்டில் அம்மா பேச்சுக்கு மறுபேச்சு இல்லாதால் அப்பாவும் சரி அவனும் சரி தலையாட்டி விடுவார்கள்.

அம்மாவின் மேலுள்ள பாசத்தால் அவன் அடுத்த நாள் தன் மாமா ஊருக்குக் கிளம்பினான்.

அவன் மனதிலோ கல்யாணத்தை எப்படி வேண்டாம் சொல்லுவது எண்ணம் மட்டுமே ஓடியது.

காரில் போய்க் கொண்டே இருந்தவன் ஊரில் உள்ள நுழைந்த நேரத்தில் கார் ஸ்டர்க் ஆகி நின்று விட அவன் ஸ்டார்ட் பண்ணிப் பார்த்தும் கார் ஸ்டார்ட் ஆகவில்லை.

கீழே இறங்கியவன் முன் பக்கம் பார்னட் தூக்கிப் பார்த்துக் கொண்டு என்ன ஆச்சு தலையை அதற்குள் நுழைத்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.

அப்பொழுது அங்கே பேச்சுக் குரல் கேட்கவே திரும்பி யாரு பார்க்க, ஆடு மாடுகளை ஓட்டிக் கொண்டு வந்த  பன்னிரண்டு வயதிலும், இருபது வயதிற்கு மேலே இருக்கும் இரண்டு  பெண்கள் நின்று எதையோப் பேசிக் கொண்டிருக்க அவர்களின் அருகில் பெரிய நாய் ஒன்றும் துணைக்கு நின்றது.

அதில் ஒருத்தியை எங்கோ பார்த்த நினைவு மங்கலாக உள்ளத்தில் அலை மோத, அவர்களைப் பார்த்தப் படி நின்றான்.

ஆனால் அந்த சின்னப் பெண், ”என்ன சாரே காருக்குள் நுழைந்து என்ன பண்ணறீங்க.. இஞ்சினை யாராவது தூக்கிட்டுப் போய்யிட்டாங்களா பார்த்துகிட்டு இருக்கீங்களா”, கேலியாக கேட்டாள்.

அதைக்கேட்ட பெரியவளும் சிரிக்க, அவனுக்குக் கீர்னு கோபம் வந்தாலும், அதை விட்டு

”ஆமாம் இஞ்சினை எந்த காக்கா தூக்கிட்டுப் போச்சு பார்த்து இருக்கேன்,” நக்கலாக சொன்னவன், இங்கே யாராவது மெக்கானிக் கிடைப்பாங்களா,” கேட்டான்.

”இங்கே எல்லாம் அவரவர் வண்டிக்கு அவங்க அவங்க தான் மெக்கானிக் சாரே இதுக்கெல்லாம் இந்த ஊரில ஆள் கிடைக்காது”, சொல்லிச் சின்னவள் சிரித்தாள்.

”சரியான பட்டிகாடு, அவசரத்திற்கு எதுவும் கிடைக்காது, இதை சொன்னால் இந்தம்மா கேட்கிறாங்களா தன் அம்மாவை மனதினுள்ளே திட்டிக் கொள்ள”,

கூட இருந்தவள் தன் நாயிடம், டைகர், ஆடுமாடுகளைப் பார்த்துக்கோ தோட்டத்திற்குள் மேய போய்ற போகது , கவனமா பார்த்துக்கோ, ஏல, வெள்ளச்சி, பசுமாட்டை அழைத்தவள், அங்கே இங்கே போகமா எல்லாரையும் பார்த்துக்கோ சொல்ல, அவள் சொல்லவதைக் கேட்ட ஒரு மாடு திரும்பி ஒரு லுக் விட்டு தலையாட்ட, அதன் கழுத்தில் கட்டிய மணியும் சேர்ந்து ஆடியது, அதைக் கண்டு சிரித்தவளோ, சும்மா முறைக்காதே, அப்ப தான் சாயங்காலம் உனக்கு புண்ணாக்கு போடுவேன், சொல்வதைக் கேட்ட வெள்ளச்சியோ வாயைத் திறந்து இருக்கிற பல்லை எல்லாம் காட்டியது.

அதைப் பார்த்தபடி நின்றவன் இவள் பேச்சுக்கு  ஆடுமாடுகளுக்குப் புரிகிறதே

ஆச்சரிமாக இருந்தாலும் எதுவும் பேசாமல் அவளை உற்றுப் பார்த்தான். நீள கூந்தல் இடை வரை தொங்கி இறுக்கிப் பின்னல்  போட்டிருக்க, இயற்கையோடு இயற்கையாக வளர்ந்தவளோ கொடிப் போல அழகிய வனப்போடு இருந்தாள்.

வாய்யில்லாத ஜீவன்களுக்குக் கட்டளையிட்டுவிட்டு கார் இருக்கமிடத்திற்கு வந்தாள் பெரியவள்.

அவளைப் பார்த்துக் கொண்டு இருப்பதைப் பார்த்த சின்னவள், ”என்ன சார், எங்கக்கா வாய்யில்லாத ஜீவனுக்கு எல்லாம் பெயர் வச்சிருக்க ஆச்சரியமாகப் பார்க்கீறிங்க.. அதுவும் நம்மை போல இந்த உலகில் பிறந்தது தானே .. அதுக்கு ஒரு பெயர் வேண்டாமா தத்துவமாகப் பேச”, அதைக் கேட்டவனோ இந்த சின்ன குட்டி எல்லாம் நம்மை நக்கலடிக்கதே சிறு முறைப்போடு சின்னவளைப் பார்க்க அவளோ நமட்டுச் சிரிப்பை உதிர்த்தாள் .

பெரியவள்  தன்னருகில் வருவதைக் கண்டு, என்ன, கேள்வியோடு பார்க்க,. ”கொஞ்சம் தள்ளுங்க, காரில் என்ன பிரச்சினை பார்க்கிறேன்”, சொல்ல

”அச்சோ இது பாரீன் கார், மா, உன் ஆடு மாடு எல்லாம் உன் பேச்சைக் கேட்பதைப் போல காரு கேட்காது, இதைப் பார்க்க மெக்கானிக்கே திணறுவான், இதில் நீ பார்க்கிறீயா”,கேட்க,

அவளோ அவனை மேலும் கீழே பார்த்தவள், ”பாரீன் கார் வாங்கிட்டுப்  பெருமைக்கு வச்சுக்க கூடாது,  அதைப் பற்றி தெரிஞ்சு அவசரத்திற்கு ரிப்பேரை சரி பண்ணவும் தெரிஞ்சுகணும்”, நக்கலடிக்க,

அவனுக்குக் கோபம் க்ர்னு ஏறினாலும், ”ஆடுமாடு மேய்க்கிற உனக்கு மட்டும் தெரியுமா”, கடுமையான குரலில் கேட்டான்.

”அது தெரியுமா, இல்லையா , தள்ளி நின்னா பார்த்துட்டுச் சொல்வேன், கேலிக் குரலோடு

சொல்ல,

அவள் நெருங்கியதும் சட்டென்று தள்ளி நிற்க, காரில் இஞ்சின் பக்கம் என்ன பிரச்சினை பார்த்து ஏதோ ஏதோ  செய்தவள், நிமிர்ந்து காரின் முன்பக்கத்தை மூடியவள், போய் ”காரை ஸ்டார்ட் பண்ணுங்கள்”, சொல்ல, அவளை வினோதமாகப் பார்த்தபடி காரில் ஏறி ஸ்டார்ட் பண்ணினான் அகிலன்.

உடனே காரும் ஸ்டார்ட்டாக ஆச்சிரியமானவன், ”நைஸ் சொல்லியவன், காரின் கண்ணாடியை இறக்கி அவளை அருகில் வரச் சொன்னான்.

பெரிய இவன் , இறங்கி வர மாட்டானா, நினைத்தவள்,  சின்னவள் ராஜியை கையாட்டி வாடிப் போகலாம் அழைத்துக் காரைத் தாண்ட,

அவனோ ”தேங்கஸ், வார்த்தையை உதிர்க்க, உங்க நன்றியை நீங்களே வச்சுக்கோங்க, புதுசா ஒருத்தரிடம் பேசும்போது மரியாதை பேசணும் உங்களுக்கு சொல்லிக் கொடுக்கலயா, பட்டிகாடு தானே இவ, வா போ,பேசுவதும், இங்கே இருக்கிறவங்களுக்கு எதுவுமே தெரியாது, அறிவுக் கெட்டவங்க நினைப்பை இங்கேயே கழற்றி விட்டு யார் வீட்டுக்கு வந்தீங்களோ அங்கே போய்ச் சேர்ங்க”, சொன்னவள் விடுவிடுவென்று நடந்தாள்.

அவள் போவதைப் கண்ணாடி வழியே பார்த்தவன், அவளின் நடைக்கேற்ப அவள் கூந்தலின் அசைவைக் கண்டவன்,  சரியான வாயாடி.. பேசும்போது அவள் கண்ணின் விழிப் பந்து அங்குமிங்கும் அசைந்தாட அழுத்தமான குரலில் ஆணவமின்றி, தான் எவருக்கும் யாருக்கும் குறைந்தவள் இல்லை என்பதை வார்த்தையாலே குத்திச் சென்றவள் அகிலனின் மனதில் பசுமரத்தாணியாக பதிந்துவிட்டாள் .

மாமா வீட்டைத் தேடிப் போனவன் அங்கே கௌதமனை

அவர் மனைவி மரகதமும் வெளியே வந்து வாங்க மாப்பிள்ளை சொல்லி அழைக்க,

அவரிடம் பேசி ரொம்ப நாள் ஆனதால்  பேச்சு வருவது குறைய வெறுமென தலையாட்டினான் , ஆனால் அவருடைய கம்பீரமும் முகத்தில் தெரிந்த அதீத பாசமும் அன்பைக் கண்டு பேசற்றுப் போனான் . பெரிய நிறுவனத்தைக் கட்டிக் காப்பவன், இங்கே பேச்சற்று இருப்பதைக் கண்ட அவன் அம்மா ”என்ன அகில், எதாவது வரும் வழியில் பிரச்சினையா கேட்க,’

“இல்லை மா அதில்லை, ரொம்ப நாளாச்சா மாமாவிடம் பேசி, அது ஒரு மாதிரி குற்றயுணர்வா இருக்குச் சொல்லிக் கொண்டு,” மாமாவின் கரங்களைப் பிடித்தவன் ,”நல்ல இருக்கீங்களா மாமா அத்தை, நீங்கள் எப்படி இருக்கீங்க, கேட்க அவரும் எல்லாரும் நல்லா இருக்கோம் தம்பி நீங்கள் உள்ளே வாங்க “,அழைத்தார்.

“வாடா மாப்பிள்ளை, அவன் தோளில் கைப் போட்டு உரிமையோடு  பிசின்ஸ் கலக்கீறியாமே, தங்கச்சி சொல்லுச்சு, உன்னைப் பார்க்கணும் ரொம்ப நாளா இருந்தது,  எங்கே நான் வரப்ப எல்லாம் உன்னை பிடிக்க முடியல,  அந்தளவுக்கு வேலை செய்யற, வேலை முக்கியம் தான் மாப்பிள்ளை,  அதைவிட அன்பான பாசமான உறவுகளும் முக்கியம் சொல்லிக் கொண்டு சோபாவில் அகிலனோடு  அமர்ந்தார்.

அவனோ வீட்டை விழிகளாலே சுற்றிப் பார்க்க அன்றைய கால பழைய வீடாக இருந்தாலும் இன்றைய நாகரியத்திற்குத் தகுந்தபடி இருக்க , வீட்டில் ஆகங்காங்க மாட்டி வைத்திருந்தப் போட்டோவில்  சிறுவனும் சிறுமியும் வண்ணச் சட்டத்தில் குறும்பும் சிரிப்புமாக இருப்பதைப் பார்த்தவன், எழுந்து ஒரு படத்தின் முன் நின்றான். அதுவோ ஒரு பெண்ணின் கூந்தலை இழுத்தபடி நிற்க அவளோ தலையை சாய்த்து விடுடா என்கிற பெரிய விழிகளில் மிரட்டிபடி இருந்தது, அதைப் பார்த்தவன் மனதில் வரும் வழியில் பார்த்த பெண்ணின் கூந்தலே ஞாபகம் வந்தது எதனாலோ தெரியவில்லை ..

“என்னடா மாப்பிள்ளை படத்தைப் பார்க்கிற, நீயும் ஆதினி தான்.. இங்கே இருக்கும்போது நிறைய படம் எடுத்தோம், சொல்ல, அவள் முகத்தை உற்று நோக்கினான்.

வழியில் பார்த்த பெண் ஜாடை இந்தச் சின்ன படத்திலும் இருக்க இவள் அவளாக இருக்குமோ சந்தேகம் இருந்தாலும், ஆடு மேய்கிறவ தான்டா உனக்கு பொண்டாட்டியா வரப் போறா, மனத்திற்குள் மனசாட்சி கூவியது.

“ம்ஹூம், பெருமூச்சை விட்டவன், மரகதம் கொண்டு வந்த காபியை வாங்கிக் குடிக்க அதுவோ தேவாமிர்தமாக இருக்க, தன் அப்பா அம்மாவும்  மாமாவும் மும்முரமாகப் பேசிக் கொண்டிருக்க, எதைப் பற்றி அறிந்தவன், தன் அம்மாவை அழைத்தான், அவரோ, “என்ன கண்ணா, ஆர்வமாக கேட்க நீங்கள் ஊருக்கு வரும்போது அத்தை கிட்ட எப்படி காபி போடணும் கத்துக் கிட்டு வாங்க, இத்தனை நாள் நீங்கள் கொடுத்தது சூடுதண்ணீர் இன்னிக்கு தான் தெரிஞ்சது,” சொல்லிச் சிரிக்க,

அவளை முறைத்த கல்யாணி, “டேய், உனக்கு வாய் கொழுப்புடா, என் காபி சுடு தண்ணீயா, அதற்கு  தான் காபியை  போட்டுத் தர என் மருமகளை கூட்டிட்டுப் போக வந்திருக்கேன். இனி என் கையாலே பச்சை தண்ணீர் கூட கிடையாது”, கேலியாக முடித்தவர் ,

அண்ணா அடுத்த வாரம் நல்ல மூதர்த்தம் வருது,

அதிலே அகிலனுக்கு ஆதினிக்கு கல்யாணம், ஒரு வாரம் கழித்து சென்னையில் வரவேற்பு வைச்சுக்கலாம், அண்ணி உங்களுக்கு சம்மதம் தானே சொல்ல, என்ன மதனி இப்படி சொல்லீட்டிங்க, எனக்கு நீங்கள் எப்ப வருவீங்க இந்த நல்ல விஷயத்தை பேசுவோம் தினம் வாசலைப் பார்த்துக் கொண்டே இருந்தேன்.. இன்னிக்கு தான் மகிழ்ச்சி சந்தோஷமாக இருக்கு, சொல்ல,

“ரொம்ப மகிழ்ச்சி அண்ணி, ஆமாம் ஆதினி எங்கே, காணாம் அவளுக்கும் இதில் விருப்பம் தானே ,

அவளுக்கு அகிலனாலே ரொம்ப பிடிக்கும்.

எனக்குக் கூடப் பிறந்த பிறப்பாக எடுத்துக்கட்டிச் செய்ய இந்த அண்ணாவைத் தவிர யாரு இருக்கா, ஆதினிக்கு காது குத்தறப்பே அகிலன் மடியில் அமர வைத்து காதைக் குத்தி அப்பவே மாலை மாற்றி முடிவு பண்ணின கல்யாண்ம்.. இப்ப சம்பிரதாயத்திற்காக பண்ணுகிறோம். நீங்கள் எப்ப சொல்லறீங்களோ அப்பவே கல்யாணம் பண்ணி அனுப்பி வைக்கிறோம்”, முடித்துவிட்டார் மரகதம்.

அதற்கு கௌதமும் ‘ஆமாம், தலையாட்டி நம் சொந்தம் என்றும் நிலைத்து நிற்கணும் கண்ணு தன்னருகில் அமர்ந்திருந்த கல்யாணியின் தலையை வருடிக் கொடுத்தார்.

“அண்ணா என்னிக்கும் நம்ம பாசம் பிரியாது,நாளைக்கு நம்ம பிள்ளைகள் வழியாகத் தொடரும் அண்ணா கவலை படாதீங்க சொல்லிக் கொண்டு இருக்க, வெளியே பெரிய சலசலவென்று பேச்சுக் குரல் கேட்டது.

“யாரு இப்படி சத்தமாகப் பேசிக் கொண்டு வராங்க, எட்டிப் பார்க்க வழியில் பார்த்த இரண்டு பெண்களும் வீட்டினுள் வந்துக் கொண்டிருந்தனர்.

இவளா அவள், மாதிரி அவளையே லுக் விட்ட அகிலன், கணிச்சது சரிதான் போல, ஆடுமாடுகளை மேய்க்கிறவள் தான் பொண்டாட்டி வரும் தலையெழுத்துப் போல.. நினைத்து அவளையே பார்த்தான்.

உள்ளே வந்த ஆதினி, அங்கே உட்கார்ந்திருந்த அகிலனைப் பார்த்தவள், எதுவும் பேசாமல் அத்தை அருகில் போய் அமர, ராஜியோ, ஐ, இவர நாமே தோட்டத்திற்குப் போகும் வழியே பார்த்தோமல அக்கா, சொல்லிட்டு அவன் அருகில் போனவள்,

“என்ன பாரீன் காரரே, எங்க வீட்டுக்கே வந்தாச்சா..இது  தெரியாமல் போச்சே எங்களுக்கு.. இல்லை அங்கே இருந்த தள்ளிட்டு வரச் சொல்லிருப்போம்”, கேலியாகப் பேசினாள் ராஜி..

”ஏய், வாயாடி கம்னு இரு, இவர் தான் அத்தையோட மகன்”, மரகதம் சொல்ல..

”ஓ, அத்தான் பொத்தானா”, வாயில் கைவைத்து கலீர் சிரித்தாள் ராஜி.

அதைக் கேட்டு எல்லாரும் சிரிக்க அகிலனுக்கு அதித கோபத்தோடு அம்மாவை முறைக்க,

”டேய் கண்ணா, முறைப்பையனா கிண்டல் கேலி பண்ணுவாங்க,  நீயும் பேச வேண்டிய தானே சொல்லியவர், ”ஏய் ராஜி என்ன மகனை நக்கலடிக்கிற… அடி வாங்கப் போற, சொல்லிவிட்டு இவ நம்மோட ஒண்ணுவிட்ட அண்ணே பொண்ணு.. அது தான் கிண்டலா பேசறா”,

”இவ தான் ஆதினி, என் மருமகள் ஆதினியை அவன் முன் கொண்டு வந்து நிறுத்த,

அவனோ தன் கோபத்தை அடக்கிக் கொண்டு ஆதினியை இடுங்கிய விழியால் பார்க்க,

அவளோ யாருக்கும் தெரியாமல் கண்ணைச் சிமிட்டினாள்.

அதில் அதிர்ந்தவன், அவளை முறைக்க,

டேய், பிள்ளையை முறைக்காதே,கல்யாணி சொல்ல,

‘௸உன் மருமகளை மிரட்டக் கூடாதா, வரும்வழியில் என்ன வாய் பேசினாள் கேளு”, அவரிடம் புகார் வாசித்தான் அகிலன்.

”என்னம்மா நடந்தது, ஆதினியைக் கேட்க ,

”அத்தை உங்க மகன் வச்சு இருக்கிற டப்பா காரு ரீப்பேரு, அதை சரி செய்துக் கொடுத்து பட்டிகாட்டில் இருப்பவங்க எல்லாம் முட்டாள் இல்லை சொன்னேன்”, சொல்லி சிரித்தாள்.

”அம்மா அவளைப் பாரு என் காரை டப்பா காரு சொல்றா, நீயும் கேட்டு சிரிக்கிற”,அம்மா மேலே எகிறினான் அகிலன்.

”டேய் விடுடா கண்ணா சின்ன பிள்ளைங்க மாதிரி, அப்பவும் இப்படி தான் சண்டை போடுவீங்க ஞாபகம் இருக்கா இருவரையும் கேட்க,

ஆதினியோ உங்க மகனுக்கு மறந்திருக்கும்,நீங்க தினமும் வல்லாரை சட்னி அரைத்துக் கொடுத்திருக்கணும் கேலிப் பண்ணியவள்,

வழியிலே பார்த்தா என்னையே யாரு தெரியல, அவ்வளவு ஞாபகம மறதி. சிறு கோபம் ஆதங்கமும் அவள் குரலில் இருக்க,

அவள் குரலில் இருந்த ஆதங்கத்தில், அகிலனின் மனம் ஏனோ சிறு சலனத்தோடு அவளைப் பார்க்க,

அவளும் அவனைப் பார்க்க இருவிழிகளும் கலந்து காவியம் படைத்தது.

ராஜி, ”அத்தை இவங்களுக்கு சீக்கிரம் கல்யாணம் பண்ணி வைங்க, இல்லை அத்தான் அப்ப நடந்த கல்யாணம் மாதிரி மறந்திட போறாரு”, சொன்னாள்.

‘அப்ப நடந்த கல்யாணமா, அகிலன் அம்மா முகத்தை நோக்கியவன்,என்னம்மா இவச் சொல்லறா,”

”அதுவா, கண்ணு ஆதினிக்கு ஊரை அழைத்துக் காது குத்தினோம்,அவளுக்கு தாய்மாமா இல்லதால் அத்தை பையன்   உன் மடியில் தான் மாமா முறைக்கு வச்சு குத்துச்சு,

அப்பவே அவளுக்கு நீ, மாலைப் போட, அவளோ அத்தானுக்கும் நான் மாலைப் போடுவேன் சொல்லி அடம்பிடித்தாள், நீயும் ஆமாம் அவ போட்டால் தான் ஆச்சு அடம்பிடித்த, அப்பறம் மாலை வாங்கி வந்து உனக்கு அவ மாலை போட, நானும் அண்ணாவும் வெற்றிலை பாக்கு மாற்றி அன்றைக்கே உங்க கல்யாணத்திற்கு அச்சாரம் போட்டாச்சு. சொல்லி முடித்தவர், நீயும் ஆதினியும் முதலில் போய் பேசிட்டு வாங்க

உங்களுக்குள் எதுவும் தெளிவாகாமல் இருக்கது, போய் பேசுங்க பின்பக்கம் அனுப்பிய கல்யாணி,

என்னங்க ,அண்ணா அண்ணி, சீக்கிரம் நாம் கல்யாணம் வேலை ஆளுக்கொன்று பார்க்கணும், ராஜி நீ அம்மாகிட்ட சொல்லு, நாங்க அப்பறம் வரோம் சொல்லி அவளை வீட்டுக்கு அனுப்பினார் ..

”அப்ப அத்தான் தான் அக்காவுக்கு மாப்பிள்ளை ஜாலி”,குதித்தபடி தன் வீட்டை நோக்கி ஓடினாள் ராஜி.

பின்பக்கம் போன அகிலனும் ஆதினியும், ஒருவரை ஒருவர் ஒன்றும் பேசாமல் சிலநிமிடங்களைக் கடத்தினர்.

அவனைப் பார்த்து  ஆதினி ஒரே கேள்வி மட்டுமே கேட்டாள் .

ஆதினி ”ஏன், அத்தான் எல்லாமே மறந்தீட்டிங்களா?

அதைக் கேட்டவன் மனமோ கண்ணாடியா சில்சில்லா உடைந்தது. ஆம் எப்படி மறந்தேன், படிப்பு வேலை சுற்றினாலும் அன்றே நடந்த நிகழ்வுகளை மறந்து இவளை பட்டிகாடு பரிகாசம் பண்ணி நோகயடித்துவிட்டனே மனம் நொந்தான் அகிலன்.

”உங்களுக்காக பல வருசமாக இங்கே ஒருத்தி தவம் இருந்தை மறந்து விட்டிங்க, உங்கள் அளவுக்குப் படிக்கணும், நீங்கள் என்னைப் பார்க்கும்போது எந்த இதிலும் குறைச் சொல்லிடக் கூடாது, என் அத்தான் மனத்திற்கு ஏற்றவளா இருக்கணும் தினமும் உங்களை நினைத்துக் கொண்டே வாழ்ந்த எனக்கு நீங்கள் யாரோ மாதிரி பார்த்த பார்வையிலே நான் செத்துட்டேன் அத்தான். அப்ப எல்லாம் காது குத்து கல்யாணம் அன்றே நடந்த நம் கல்யாணத்தால் நீங்கள் தான் எனக்கு கணவனாக நினைச்சு வாழ்ந்துகிட்டு இருக்கேன்.

”ஆனால் நீங்கள் மறந்துவிட்டீங்க”, எங்கோ வெறித்தபடி பேசினாள் ஆதினி.

ஒருத்தி சிறு வயதிலிருந்து காதலோடு தனக்காக காத்திருக்கிறாள் என்பதைக் கேட்டவன் , மறந்துப் போனது எதனாலோ காலத்தின் வேகத்திற்கு ஓடியதால் இவளை மறந்துவிட்டனா, அத்தான் அத்தான் பின்னால் முதுகில் தூக்கிக் கொண்டு அழைந்தது எல்லாம் அவனுக்குப் படமாக விரிய, அவளை நோக்கித் திரும்பியவன்,

அவள் தோளில் கைவைத்து தன் கண்ணோடு அவள் விழிகளை கலக்க விட்டவன், ”இதற்கு மன்னிப்பு ஒரு வார்த்தை சொல்ல முடியாதுடி, காலம் முழுவதும் எனக்காக நீ என்பதை உணர வைக்கணும்”,

”இத்தனை வருடங்களாக காத்திருந்த என் தேவதைக்கு என்னுடை முதல் பரிசு”, சொல்லி நுதலில் முத்தமிட்டவன், எனக்கு வர வேண்டியவள் படித்திருக்கணும், என் வேலை நிறுவகிக்கனும் நினைச்சு ஏதோ ஏதோ பேசிவிட்டேன்”,.

”ஆனால் எனக்காக ஒருத்தி தன்னைச் செதுக்கிக் கொண்டு காத்திருக்கிறாள்  நெஞ்சில் ஆணியடித்து புரிய வைத்துவிட்டாய், சாரிடி இனி வாழ்நாள் முழுவதும் மறக்காமல் இருக்க நீ தினமும், வல்லாரை சட்னி அரைச்சு கொடுக்கிற”, கேலிக் குரலில் சொல்ல,

அவன் தோளில் சாந்தவளோ சட்னியா, இனி மறந்தால் உங்களை சட்னியாக்கிருவேன்,சொல்லிச்  சிரிக்க,

”உன் பேச்சை நாய் மாடு எல்லாம் பேச்சு கேட்கது, அது மாதிரி எனக்கு நீ ட்ரையிங் கொடுத்து விடுவாய் வாயாடி,” சொன்னவன் இறுக்கி அணைத்துக் கொண்டான்.

என்றோ மறந்தது இன்றும் தொடர்கிறது வாழ்க்கை பந்தம் .

வாழ்க வளமுடன்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    மரம் எங்கே..? (கவிதை) – குமரி உத்ரா, கன்னியாகுமரி

    மெய் போலத் தோன்றும் (சிறுகதை) – பீஷ்மா