in ,

இருபதாம் எலிகேசி ! (சிறுகதை-முற்பகுதி) – நாமக்கல் எம்.வேலு

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + இலவசமாய் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்… 

‘அமைச்சரே… அவ்வளவுதானே… அவை கலைக்கலாமா… என்னை அந்தப்புறம் அழைக்கிறது… அடியேன் போயாக வேண்டும்……ஹா நச்… நச்… ‘

‘மன்னா… தாங்கள் முகக் கவசம் அணிய  வேண்டும்…’

‘அமைச்சரே… கொரோனா காலத்தில் எல்லோரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று நான் சட்டம் போட்டிருந்தேன். பிறகு கொரோனா போய்விட்டதால் முகக்கவசம் கட்டாயம் இல்லை என்றும் நானேதான் சட்டம் போட்டேன். இப்போது முகக்கவசம் அணியவேண்டும் என்று ஏன் உளர்கிறீர்… சட்டம் போடும் எனக்கேவா.’

‘மன்னிக்க வேண்டும் மன்னா… தாங்கள் போட்ட தும்மலில் ரொம்ப நாட்களாய் நாம் அடித்த மருந்துகளுக்கெல்லாம் அசைந்து கொடுக்காத கொசுக்கலெல்லாம் பறந்தோடி விட்டன பாருங்கள்… உங்களது தும்மலுக்கு அவ்வளவு பவர் இருக்கிறது…  அதனால்தான் சொன்னேன்.’

‘நக்கல்… ? ”

‘மன்னிக்க வேண்டும் மன்னா… உங்களை புகழ்ந்து பாட ஒரு புலவர் வந்திருக்கிறார்… தாங்கள் சம்மதித்தால்… ‘

‘புலவர்களுக்கான நேரம் முடிந்துவிட்டதே… கொஞ்சம் இரும் மொபைலில் ஏதோ எஸ்.எம்.எஸ். வந்திருக்கிறது போல… ஹூம்…  இருபதாவது எஸ்.எம்.எஸ்… ”

‘மன்னா… புலவர் வருகிற வழியில் ஏகப்பட்ட விநாயகர் ஊர்வலமாம்… அதனால் வர தாமதமாகி விட்டதாம். அவர்களுக்கான நேரமும் முடிந்துவிட்டதால், மன்னர் அனுமத்தால்தான் உள்ளே விடுவோம் என்று காவலாளிகள் வேறு மடக்கிப் போட்டு விட்டார்களாம். கொஞ்சம் அனுமதியுங்களேன்… ’

‘ஏன்…. உனக்கும் ஒரு பங்கு கொடுப்பதாய் சொல்லியனுப்பினானா அந்தப் புலவன்….’

‘மன்னா… என் கை சுத்தமான கை… ‘

‘சரி சரி… உரக்கச் சொல்ல வேண்டாம்… கொஞ்சம் இரும் மொபைலில் மறுபடியும் ஏதோ எஸ்.எம்.எஸ். வந்திருக்கிறது போல… ஹூம்…  இருபத்தோறாவது எஸ்.எம்.எஸ்….  சரி… எங்கே விட்டேன்…’

‘உரக்க சொல்ல வேண்டாம்… ’

‘அமைச்சரே… நான் ஒழுங்காக பேசினாலே உம்் காதுகளில் விழாது… இதில் நான் உரக்க வேறு சொல்ல வேண்டாமா… ’

‘மன்னிக்கவேண்டும் மன்னா… உங்களை நான் உரக்கச் சொல்ல வேண்டாம் என்று சொல்லவில்லை. நீங்கள் கடைசியாக ‘உரக்கச் சொல்ல வேண்டாம்‘ என்று சொல்லி நிறுத்தினீர்கள்… என்றேன்’

‘சரி. சரி… அந்த லேட் புலவரை அனுப்பச் சொல்லும்… ’

‘அவர் உயிரோடுத்தான் இருக்கிறார் மன்னா… ’

‘உம் தொல்லை தாங்க முடியவில்லை… இறந்து விட்டான் என்று நான் எங்கே சொன்னேன். லேட்டாக வந்தவன் என்ற அர்த்தத்திலல்லவா சொன்னேன்… ’

‘மன்னிக்க வேண்டும் மன்னா… தாங்கள் அடிக்கடி முறித்து விடுகிறீர்கள்…’

‘மூன்று வில்களையும் முறித்து முப்பதாவது ராணியையும் மணம் முடித்தேனே அதை சொல்கிறீரோ… ’

‘ஹையோ… ஹையோ… எஸ்.எம்.எஸ். என்கிறீர்கள், லேட் என்கிறீர்கள். அரசரவையில் ஆங்கிலம் கூடாது என்று தாங்கள் போட்ட உத்தரவை தாங்களே முறிக்கிறீர்களே. அவையில் ஆங்கிலம் உபயோகித்தால் நாக்கு துண்டிக்கப்படும் என்று தாங்கள் உத்திரவு போட்டது ஞாபகம் இருக்கிறதல்லவா… ’

‘சரி சரி… சட்டம் போட்ட எனக்கேவா… கொஞ்சம் இரும்… மொபைலில் மறுபடியும் ஏதோ எஸ்.எம்.எஸ். வந்திருக்கிறது போல… ஹூம்… இருபத்திரெண்டாவது எஸ்.எம்.எஸ்…. ஓ ஆங்கிலம் கூடாதல்லவா … வந்திருப்பது இருபத்திரெண்டாவது குறுஞ்செய்தி ‘

‘மன்னிக்கணும் மன்னா… அடிக்கடி தாங்கள் கைப்பேசியை எடுக்கிறீர்கள், பாக்கிறீர்கள், முனுமுனுக்கிறீர்கள்… என்னதான் ஆனது… ’

‘அமைச்சேரே… எனது இருபத்தைந்தாம் ராணி,  ‘வருகிறீர்களா, தூங்கப் போகட்டுமா?‘ என்று குறுஞ்செய்தி அனுப்பிக் கொண்டே இருக்கிறார். இன்று அவளது டர்ன் (TURN)… சாரி (SORRY)… ஐயோ… ஆங்கிலம் நம்மை விட்டு அகலமாட்டேன்கிறது அமைச்சரே… அவளுடன்தான் இன்று உணவும் உறக்கமும் ’

‘மற்றதெல்லாம்…’

‘மடையரே… உமக்கு அனைத்தும் விரிவாக சொல்லவேண்டுமோ… வாயைப் பொத்தும்… அந்தப்புரம் அழைக்கிறது என்று நாசூக்காக சொன்னேன்… புரிந்து கொள்ளவேண்டாமா நீர். மரமண்டை மரமண்டை.. உம்மை அமைச்சராக்க பரிந்துரை செய்தவன் மட்டும் இப்போது என் கையில் கிடைத்தால் பிடித்து நசுக்கியே விடுவேன்…. ஹா நச்…நச்…  ‘

‘பார்த்து மன்னா…. தாங்கள் போடும் ஒவ்வொரு தும்மலுக்கும் அமைச்சர்கள் ஆடிப் போகிறார்கள், அது அப்படியே இருக்க… இன்னும் மூன்று எஸ்.எம்.எஸ்.வரும்வரை பொறுங்கள் மன்னா… ’

‘தாங்களும் ஆங்கிலம் உபயோகிப்பது தங்களது அடிபணியாத்தனத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது அமைச்சரே… ஆனாலும் தங்கள் சொன்னதுதான் எனக்குப் புரியவில்லை… ’

‘மன்னிக்க வேண்டும்… தாங்களுக்கு என்றைக்கு எது புரிந்திருக்கிறது… அழைப்பதோ இருபத்தைந்தாம் ராணி. இதுவரை வந்திருப்பதோ இருபத்திரண்டு எஸ்.எம்.எஸ்.கள் தான்… சாரி மன்னிக்க வேண்டும் குறுஞ்செய்திகள்தான். அதனால்தான் சொன்னேன் இன்னும் மூன்று குறுஞ்செய்திகள் வரும்வரை பொறுங்கள் என்று… இருபத்தைந்துக்கு இருபத்தைந்து… கணக்கு சரியாக இருக்குமல்லாவா… ’

‘ஹூம்… நீரும் உமது கணக்கும்… சரி… சரி… பேசியே என் பொறுமையை சோதிக்க வேண்டாம்… உடனே புலவரை அழையும்…’

’மன்னா புலவரை அப்புறம் அழைக்கிறேன், முதலில் எனக்கு மட்டும் கேட்கும் அளவுக்கு ரகசியமாக கூறுங்கள்… தாங்கள் எப்படி இருபதாம் எலிகேசி ஆனீர்கள்… ’

‘அமைச்சரே… எனது முப்பாட்டன் புலிகேசி வேட்டையில் சிறந்த வீரனாம். அந்தப் பரம்பரையில் வந்த நானும் சளைத்தவன் இல்லை என்று காட்ட வேண்டாமா. அதனால் நானும் வேட்டைக்குப் போனேன். வேட்டைக்கு போன இடத்தில் கொஞ்சம் கால் இடறி தரையில் விழுந்து விட்டேன். அப்போது பார்த்து ஒரு புலி ஓடுவது போல இருந்தது. குப்புறப் படுத்த நிலையிலேயே வில்லை எடுத்து அம்பை விட்டேன். கீச் என்று சத்தம் கேட்டது. அப்புறம் தான் தெரிந்தது நான் அம்புவிட்டு கொன்றது புலி இல்லை, எலி என்று’

‘ஹஹஹஹா… ஹெஹெஹெஹே… ‘

‘ச்சே.. இதற்குத்தான் நான் எதையும் வெளியே சொல்வதே இல்லை… கேட்பவர்கள் சிரிப்பார்கள் என்று… என்னை அதாலேயே அடிக்க வேண்டும்.’

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    வானமடி நீ எனக்கு ❤ (பகுதி 2) – ராஜேஸ்வரி

    கடல் கடந்த காதல் ❤ (சிறுகதை) – வள்ளி, திருநெல்வேலி