in

இந்தியன் ஸ்டைல் பாஸ்தா Recipe by ஆர்.பிருந்தா இரமணி, மதுரை

இந்தியன் ஸ்டைல் பாஸ்தா

ஜூலை 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

தேவையானவை:

  • பாஸ்தா- 2 கைப்பிடி
  • பட்டை, கிராம்பு, ஏலக்காய் – தலா 2
  • பிரிஞ்சி இலை – 2
  • பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கி வைக்கவும்).
  • இஞ்சி துருவல் – 2 டீஸ்பூன்
  • பூண்டுப்பற்கள் – 10
  • தக்காளி – 3
  • கேரட் – 2 (துருவி வைக்கவும்)
  • குடமிளகாய் – 1 (நீளவாக்கில் மெலிதாக நறுக்கி வைக்கவும்).
  • கறிவேப்பிலை, புதினா, மல்லித்தழை- சிறிது
  • பச்சை மிளகாய் – 2 (வாய் கீறி வைக்கவும்)
  • மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
  • மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்
  • உப்பு – தேவையானது
  • செக்கு நல்லெண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

  • முதலில் ஒரு பாத்திரத்தில் ஒரு லிட்டர் தண்ணீர் விட்டு அடுப்பில் வைக்கவும். கொதி வந்ததும் 2 டேபிள் ஸ்பூன் உப்பு, பாஸ்தாவைப் போட்டுக் கிளறி விடவும். தீயைக் குறைத்து வைக்கவும். 5 நிமிடங்கள் அடுப்பில் வைத்திருந்து வெந்தவுடன் அடுப்பை அணைத்து விடவும்.
  • வடிகட்டி, அதன் மேல் குளிர்ந்த நீரை விட்டு, அதையும் வடிகட்டி விடவும். இந்த பாஸ்தா மேல் 2 ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டுக் கலந்து வைக்கவும்.
  • ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் விட்டு அடுப்பில் வைக்கவும். கொதி வந்தவுடன், தக்காளிப் பழத்தை நன்கு அலம்பி, பின்பக்கம் கத்தியால் கூட்டல் குறி (+) போலப் போட்டு, கொதிக்கும் தண்ணீரில் போடவும். பாத்திரத்தை ஒரு மூடியால் மூடி வைக்கவும். தீயைக் குறைத்து வைக்கவும். 5 நிமிடங்கள் வைத்திருந்து அடுப்பை அணைத்து விடவும். 
  • ஆறியதும் பழத்தின் தோலை உரித்து எடுத்து விட்டு, மிக்சி ஜாரில் போட்டு அரைத்து வைக்கவும்.
  • அடி கனமான வாணலி/ பாத்திரத்தை அடுப்பில் வைக்கவும். செக்கு நல்லெண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன் விட்டுச் சூடானவுடன், பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலையைப் போடவும். பொரிந்தவுடன் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தைப் போடவும். ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து வதக்கினால் சீக்கிரம் வதங்கி விடும்.
  • பிறகு இஞ்சி துருவல், பூண்டுப்பற்கள் போட்டு ஒரு நிமிடம் வதங்கியவுடன் பச்சை மிளகாய், கறிவேப்பிலை, புதினாவைப் போட்டு வதக்கவும். பிறகு துருவிய கேரட், குடமிளகாயைப் போட்டுக் கிளறவும். அடுத்து அரைத்து வைத்திருக்கும் தக்காளிப்பழக் கூழை விடவும்.
  • நன்றாகக் கொதித்தவுடன் மஞ்சள் தூள், மிளகாய்த் தூளைப் போட்டுக் கிளறவும். 2 நிமிடங்கள் கிளறிய பிறகு வேக விட்டு வைத்திருக்கும் பாஸ்தாவைப் போட்டு நன்றாகக் கிளறவும். 5 நிமிடங்கள் வைத்திருந்து அடுப்பை அணைத்து விடவும். மேலாக மல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

பி.கு:

  • கரம் மசாலா வாசனை பிடித்தவர்கள் ஒரு ஸ்பூன் சேர்த்துக் கொள்ளலாம்.
  • இஞ்சி, பூண்டை அரைத்துப் போட்டால் அதன் காட்டம் தூக்கலாக இருக்கும். அந்த வாசனை பிடித்தவர்கள் அரைத்தும் போடலாம்.
  • இதில் முட்டைக்கோஸ் சேர்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    நீதி தவறாத நெடுஞ்செழியன் (சிறுகதை) – ✍ ஹேமலதா

    3D Kolam (Rangoli) – ரங்கோலி கோலம் – கமலா நாகராஜன்