ஜனவரி 2023 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு
அழகழாக கோல மிட்டு
அகல் விளக்கு ஏற்றிடுவா
அதிரசம் வடையெல்லாம்
அவ இருந்தா சுட்டுடுவா !
மகராசி போயி
மாசம் ஆறாச்சு
மறுநாளே முடியாச்சு
அடுப்பங்கரை கதவும் !
தீபாவளி எனக்கேது?
திண்ணையில் நானிருக்க
நாளேது கிழமையேது
நல்லெண்ணெய் குளியலேது?
முடியாம போனாலும்
முகஞ் சுளிக்காம
முந்திரிக்கொத்து முறுக்கெல்லாம்
முதல்நாளே செஞ்சிடுவா
இப்படி முந்திகிட்டு போவான்னு
மூளைக்கு தெரியலையே!
பார்த்து பார்த்து அவ
சமைச்சு பக்கத்துல
உக்காந்து பரிமாறுவா
பாரட்ட நான் சொல்லலையே!
தலை தீபாவளிக்குத்
தங்கம் கேட்டு
தகராறு பண்ணியது
நினைவிலின்று
நெருடலாகி உறுத்துது!
இப்ப அவ யிருந்தா
தங்கமா அவள
பார்த்துக்கனும்னு
மனசு தவிக்குது!
அவ இல்லாததால்
அனாதை விடுதியில்
தலை தீபாவளி…