சமையல்

ஈசி ரெசிபிஸ் (குடைமிளகாய் தக்காளி குழம்பு, தக்காளி துவையல், ஸ்வீட் அப்பம், இன்ஸ்டன்ட் சட்னி மிக்ஸ், இன்ஸ்டன்ட் ரவா உப்புமா மிக்ஸ்)- 👩‍🍳 ராஜஸ்ரீ முரளி

அக்டோபர் 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

குடைமிளகாய் தக்காளி குழம்பு

தேவையான பொருட்கள்

 • குடைமிளகாய் – 3
 • தக்காளி – 3
 • சாம்பார்பொடி – 3 ஸ்பூன் (காரம் அவரவர் விருப்பம்)
 • எண்ணெய் – 2 டீஸ்பூன்
 • கடுகு – சிறிதளவு
 • கருவேப்பிலை – தேவையானஅளவு
 • உப்பு, மஞ்சள்தூள் – சிறிதளவு.

செய்முறை

குடைமிளகாய், தக்காளி இரண்டையும் பொடிப்பொடியாக நறுக்கி கொண்டு வாணலியில் எண்ணெய் விட்டு  கடுகு தாளித்து நறுக்கிய குடமிளகாய் சேர்த்து சிறிது உப்பு சேர்த்து 2 நிமிடங்கள்  வதக்கவும் பிறகு நறுக்கிய தக்காளியை சேர்த்து அதனுடன் மஞ்சள் பொடி, சாம்பார் பொடி சேர்த்து சிறிதளவு தண்ணீர் தெளித்து  மூடி வைத்து குறைந்த அளவு தீயில் 5 நிமிடங்கள் கொதிக்க வைத்து கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும். சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி இவைகளுக்கு நல்ல காம்பினேஷன்.  

தக்காளி துவையல்

தேவையான பொருட்கள்

 • தக்காளி – 3
 • கடலைபருப்பு – 4 ஸ்பூன் 
 • காய்ந்த மிளகாய் – 10 (காரம் விருப்பம் போல்)
 • வெந்தயம் – 1/2 ஸ்பூன்
 • பெருங்காயம் தூள் – சிறிதளவு  
 • எண்ணெய் – 1 ஸ்பூன்
 • உப்பு – தேவையான அளவு. 

செய்முறை 

வாணலியில் 1/2ஸ்பூன் எண்ணெய் விட்டு க பருப்பு, மிளகாய், வெந்தயம், பெருங்காயத்தூள் சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்து கொண்டு 1/2ஸ்பூன் எண்ணெய் விட்டு தக்காளியை சேர்த்து 3 நிமிடங்கள் (சுருங்கும் அளவிற்கு) வதக்கி கொண்டு உப்பு சேர்த்து மிக்சியில் தண்ணீர் விடாமல் தக்காளியில் உள்ள தண்ணீர் போதும் (தேவைப்பட்டால்) சிறிதளவு தண்ணீர் சேர்த்து கரகரப்பாக அரைத்து கொள்ளவும் சுவையான தக்காளி துவையல் ரெடி. 

சாதம், தோசை, தயிர் சாதம் இவைகளுடன் நல்ல காம்பினேஷன். 

ஸ்வீட் அப்பம்

தேவையான பொருட்கள்

 • கோதுமை மாவு – 1 கப்
 • துருவிய வெல்லம் – 1 1/2 கப்
 • அரிசி மாவு – 2 ஸ்பூன்
 • ஏலக்காய் பொடி – சிறிதளவு 
 • எண்ணெய் – பொறிக்க தேவையான அளவு 

செய்முறை   

துருவிய வெல்லத்தை சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு கரைத்து  வடிகட்டி  அதனுடன், கோதுமை மாவு, அரிசி மாவு, ஏலக்காய் பொடி சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைத்து 10 நிமிடங்கள் மூடி வைக்கவும். பிறகு வாணலியில் எண்ணெய் விட்டு  சிறிய கரண்டியால் மாவை எடுத்து வட்டமாக ஊற்றி இரண்டு பக்கமும் பொன்னிறமாக பொறித்து எடுத்தால் சுவையான, சுலபமான ஸ்வீட் அப்பம் தயார். 

இன்ஸ்டன்ட் சட்னி மிக்ஸ்

தேவையான பொருட்கள்

 • கொப்பரை துருவல் – 100 கிராம்
 • பொட்டுக்கடலை – 200 கிராம்
 • காய்ந்த மிளகாய் – 8 (காரம் அவரவர் விருப்பம்) 
 • உப்பு – தேவையான அளவு 
 • இஞ்சி துருவல் – சிறிதளவு 

செய்முறை

அடிகணமான வாணலியில் உப்பு தவிர மற்ற எல்லாவற்றையும் குறைந்த தீயில் 4நிமிடங்கள் வறுத்து எடுத்து ஆறவைத்து உப்பு சேர்த்து மிக்சியில்பொடியாக அரைத்து ஆறவைத்து ஃப்ரிட்ஜில் வைத்துக் கொள்ளலாம்.தேவைப்படும் போது தேவையான அளவு பொடியில் தண்ணீர் விட்டு கலந்து கொண்டு (விருப்பம் இருந்தால் சிறிது) எலுமிச்சை சாறு கலந்து கொள்ளலாம் கடுகு கறிவேப்பிலை தாளித்து சேர்த்தால் அருமையான இன்ஸ்டன்ட் சட்னி ரெடி. 

இன்ஸ்டன்ட் ரவா உப்புமா மிக்ஸ்

தேவையான பொருட்கள்

 • ரவை, கடலைப்பருப்பு – 2 ஸ்பூன்
 • உளுத்தம்பருப்பு  – 2 ஸ்பூன்
 • முந்திரி பருப்பு – 8
 • பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய்
 • இஞ்சி துறுவல் – 1 ஸ்பூன்
 • மஞ்சள் பொடி – 1/2 ஸ்பூன்
 • உப்பு – தேவையான அளவு 
 • எண்ணெய் – 2 ஸ்பூன்
 • கொத்தமல்லி தழை, கறிவேப்பிலை – சிறிதளவு

செய்முறை

வாணலியில் எண்ணெய் விடாமல் முதலில் ரவையை நன்கு வாசனை வரும் அளவு பொன்னிறமாக வறுத்து எடுத்து கொண்டு அதே வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து க பருப்பு, உ பருப்பு மு பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்து அதனுடன் பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை, மஞ்சள் தூள், சிறிதளவு உப்பு சேர்த்து 1 நிமிடம் வறுத்து அதனுடன் ரவையை சேர்த்து (தீயை குறைந்த அளவு) 1 நிமிடம் நன்கு கலந்து இறக்கி ஆற வைத்து ஃப்ரிட்ஜில் வைத்துக் கொண்டால் 1 மாதம் பயன்படுத்தலாம்.​

உப்புமா தேவைப்படும் போது அடிகனமான வாணலியில் சிறிதளவு நெய் (அல்லது) எண்ணெய் விட்டு, பொடியாக நறுக்கிய வெங்காயம், கேரட், பீன்ஸ், பச்சை பட்டாணி இவைகளை சேர்த்து அதற்கு தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கி கொண்டு 1 கப் ரவை என்றால் 21/2கப் அளவு கொதிக்கும் தண்ணீர் விட்டு உப்புமா மிக்ஸை சேர்த்து நன்கு கட்டிகள் இல்லாமல் கிளறி  5 நிமிடங்கள் கழித்து இறக்கி வைக்கவும் சுவையான இன்ஸ்டன்ட் ரவா உப்புமா ரெடி. 

Similar Posts

2 thoughts on “ஈசி ரெசிபிஸ் (குடைமிளகாய் தக்காளி குழம்பு, தக்காளி துவையல், ஸ்வீட் அப்பம், இன்ஸ்டன்ட் சட்னி மிக்ஸ், இன்ஸ்டன்ட் ரவா உப்புமா மிக்ஸ்)- 👩‍🍳 ராஜஸ்ரீ முரளி
 1. “Easy way to prepare the instant and tasty ‘Rava Uppumaa’. Go ahead to prepare.” – “M.K.Subramanian.”

 2. மேடம்
  அனைத்தும் மிகவும் எளிதானதாக உள்ளது.மிகவும் ருசியான தாகவும் இருக்கும்.
  தாங்கள் தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துக்கள்.
  நன்றி சகோதரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!