வீட்டை அழகுபடுத்த எளிதாக ஒரு சுவர் அலங்காரம்! வீட்டிலிருக்கும் பொருட்களை வைத்தே விரைவில் செய்யலாம்.
தேவையான பொருட்கள்
- பேக்கிங் அட்டை
- பேப்பர்
- மணிகள்
- கெட்டியான நூல்
- அக்ரிலிக் பெயிண்ட்
- ஸ்டோன்கள்
- பென்சில்
செய்முறை
1) பேக்கிங் அட்டைப் பெட்டிகள் எல்லோர் வீடுகளிலும் இருக்கும், அதை விரும்பிய வடிவங்களில் ஒரே மாதிரி வெட்டி எடுத்துக் கொள்ளவும்
2) அதில் வெட்டிய அட்டை அளவிலேயே பேப்பரை வெட்டி அதன் மீது ஒருபுறம் ஒட்டவும்
3)அதில் உங்களுக்கு பிடித்த டிசைனை வரைந்து வண்ணம் கொடுக்கவும்
4) அதன் மீது ஸ்டோன்களால் அலஙகரிக்கவும்
5) கெட்டியான நூல் ஒன்றில் தேவையான மணிகளை கோர்த்துக் கொள்ளுங்கள்
6) வண்ணம் தீட்டிய அட்டையின் பின்புறம் இந்த மணிகள் கோர்த்த நூலினை ஒட்டி விடவும்.
7) அதன் மேல் முன்பு வரைந்து வைத்த பேப்பரை ஒட்டி விடவும்
8) இப்படி ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாக மணிகளை கோர்த்து அட்டையை ஒட்டி தயார் செய்யலாம்


9) அழகான சுவர் அலங்காரம் தயார்

இந்த செய்முறையை காணொளியாக (Video), என்னுடைய Roshni’s creative corner சேனலில் பார்க்கலாம், இணைப்பு (Link) இதோ – https://youtu.be/GDnGLyHJFpc
 
 

 
 
 
 
 



Hearty Congratulations Roshni! Keep it up.
Thank u so much Maami.