வணக்கம்,
முதலில், பரிசுகளை ஸ்பான்சர் செய்த “Madhura Boutique” நிறுவனத்தாருக்கு எனது நன்றிகள்
அடுத்து, போட்டிக்கான உங்கள் படைப்புகளை, மிகவும் சிரத்தையுடன் அனுப்பி தந்த எல்லோருக்கும் நன்றி
படம் வரையும் போட்டிக்கு அனுப்பிய 4 வயது குழந்தை முதல், ரெசிபி போட்டிக்கு அனுப்பிய சதாபிஷேகம் கண்ட பாட்டி வரை அனைவரும் கலந்து கொண்ட இந்த வருட தீபாவளி போட்டி, நிச்சயம் மனதிற்கு நிறைவைத் தருகிறது
தீபாவளி 2020 போட்டி வெற்றிகரமாய் நடத்தப்பட்டு, இதோ முடிவுகளும் இங்கு. இங்கு என்றால் இங்கல்ல, நம் புது வீட்டில்
ஆமாங்க, சஹானா இணைய இதழுக்கு இன்னுமோர் புது முகவரி கிடைத்துள்ளது. அது “சஹானா” இணைய இதழின் Youtube சேனல்.
சில புது முயற்சிகளை முன்னெடுக்கும் எண்ணத்தில், நம் “சஹானா” இதழுக்கு ஒரு சேனல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அது என்னவென்பதை, பின்னொரு சமயம் விரிவாய் பகிர்கிறேன். இப்போது தீபாவளி போட்டி முடிவுகளை பார்த்து வாருங்கள்.
அதோடு, அடுத்த போட்டிக்கும் தயாராகிக் கொள்ளுங்கள், மிக விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும்
“சஹானா” இதழின் அறிவிப்புகள் பற்றி உடனுக்குடன் அறிய, நம் இதழின் Youtube சேனலை Subscribe செய்யுங்கள். நன்றி
வெற்றி பெற்றவர்களுக்கும், பங்கு பெற்றவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்
தீபாவளி போட்டி முடிவுகளை அறிவிக்கும், Youtube வீடியோ Link இதோ 👇
என்றும் நட்புடன்,
சஹானா கோவிந்த்
ஆசிரியர் – சஹானா இணைய இதழ்
editor@sahanamag.com




GIPHY App Key not set. Please check settings