2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
ஆறு மாதம் கழித்து அம்மா வீட்டிற்கு அப்பொழுது தான் வந்தாள் மலர்விழி. அவள் கணவருக்கு வடநாட்டில் பணி. எனவே நினைத்த நேரம் எல்லாம் அம்மா வீட்டிற்கு வர முடியாது. நுழையும் போதே தம்பி வினித் அம்மா சுதாவிடம் திட்டு வாங்கிக் கொண்டு இருந்தான்.
“உன்னைக் கஷ்டப்பட்டுப் பொறியியல் சேர்த்து விட்டா, நீ இப்படி முதல் செமஸ்டரிலேயே 2, 3 அரியர்ஸ் வாங்கிட்டு வந்து நிக்கறியேடா?”
“நானா பொறியியல் படிப்பில் சேர்த்து விடச் சொன்னேன்? நீங்களா உங்க ஆசைக்குச் சேர்த்தீங்க” என்றபடியே நகர்ந்தான்.
“பார்த்தியா மலர், எப்படிப் பேசறான்னு? இவனை நினைச்சு நினைச்சே இல்லாத வியாதி எல்லாம் வந்துடும் போல” என்று புலம்பியபடியே சமையலறைக்குச் சென்ற அம்மாவைப் பின்தொடர்ந்தவள், “சரி விடும்மா, விட்டுப் பிடிப்போம்” என்று சமாதானப்படுத்தினாள். மேடை மேல் இருந்த பால் பாக்கெட்டை எடுத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றப் போனாள்.
“நில்லு, நில்லு மலர், இது பால் பாத்திரம் இல்லை; அதோ அங்கே இருக்கு பாரு, அதை எடுத்துக்கோ” என்றவள், அடுத்துப் பூரி செய்தாள்.
அதை வைக்க ஒரு சம்படத்தை எடுத்துத் தந்த போது, “இது இல்லேடி மலர், அந்தப் பூ டிசைன் போட்ட சம்படத்தை எடு”
சலித்துக் கொண்டே எடுத்தவள், “எதுல வச்சா என்னம்மா? இப்படிப் பாடாய்ப் படுத்தறயே?”
“பாலை அகண்ட பாத்திரத்தில் தான் வைக்கணும்; இப்ப நீ எடுத்த சம்படத்தில் அடியில ஒரு சின்ன ஓட்டை இருக்கு, அதனால் இதுல திரவமா வைக்காம, திடப் பொருளா வைக்கணும்”
“ஏம்மா, பாத்திரத்துக்கே வாகு பார்த்து வைக்கிற நீங்க, ஏன் தம்பி மனசைப் புரிஞ்சுக்க மாட்டேங்கிறீங்க? வரையறது, பாடறது போன்ற கலைகளில் அவன் ஆர்வமா இருக்கான்; இது தெரிஞ்சும் அவனை வேற படிப்பு படிக்கச் சொல்லுவது நியாயமா? பால் திரிஞ்சு போறதையே பொறுக்காத நீங்க தம்பி வாழ்க்கை பாழாவதைப் பார்க்கணுமா?” என்றவுடன், சுதாவுக்கு மனதை அடைத்த ஒன்று விலகுவதைப் போல் இருந்தது.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
அருமை.
மிக்க நன்றி!