2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
“குட் மார்னிங் ராஜகோபால்” என்ற குரல் கேட்டு திரும்பினார்.
கணேசன் தான் கூப்பிட்டது.
“குட் மார்னிங்” என்று பதிலுக்கு சொன்னார் ராஜகோபால்.
இதைக்கேட்ட கணேசன் “இனி நான் மட்டும்தான் சிவன் பார்கிற்க்கு வாக்கிங் வரவேண்டும், பேசுவதற்கு யாரும் இல்லை” என வருத்தமாக கூறினார்.
அதை பார்த்த ராஜகோபால் “கவலைப்படாதீங்க நான் தினமும் உங்களை whatsapp காலில் கூப்பிட்டு பேசுகிறேன்” என்று சமாதானப்படுத்தினார் .
வீட்டுக்கு வந்த ராஜகோபாலுக்கு கணேசனின் வருத்தமான முகமே மனதில் தோன்றிக் கொண்டே இருந்தது.
பையன் ரரகுராம் ராஜகோபாலிடம் “அப்பா தேவையானவை எல்லாவற்றையும் எடுத்து வைத்துக் கொண்டீர்களா? திரும்பத் திரும்ப வந்து போக முடியாது நீங்கள், மேலும் எங்களாலும் வர முடியாது” எனக் கூற அவர் மனம் கொஞ்சம் வேதனைப்பட்டது.
இருந்தாலும் பிள்ளையிடம் அதை காட்டாமல் தன் கண்ணில் வந்த கண்ணீரை மறைத்துக் கொண்டு அருகில்இருந்த பேப்பரை கையில் எடுத்து படிப்பது போல் பாவனை செய்தார்.
ரகுராம் ராஜகோபாலின் சாமான்களை கார்டிக்கியில் ஏற்றிவிட்டு “அப்பா கிளம்புங்கள்” என ரகுராம் கூற, தன் மருமகளுக்கும் பேரனுக்கும் கைஅசைத்து விடைபெற்றார்.
அப்பாவும் பிள்ளையும் ஒருவருக்கொருவர் பேசாமல் நினைவுகளை அசை போட்டவாறு சென்றனர் அவர்களின்கார் *பிரசாந்தி* என்ற கட்டிடத்தின் முன் நின்றது. *பிரசாந்தி *என்ற பெயருக்கேற்ப சோலைகளுக்கு நடுவே அந்த அமைதியான சூழலில் அது அமைந்திருந்தது.
ராஜகோபால் ஒரு நீண்ட பெருமூச்சு விட்டபடி காரில் இருந்து இறங்கினார். அவருடைய பெட்டிகளை எடுத்துக் கொண்டு ரகுராம் ஆபீஸ் அறைக்கு சென்றான். அப்பாவை அங்கு இருந்த ஒரு இருக்கையில் அமரச் செய்து உள்ளே சென்று ரகுராம் அவரை சேர்ப்பதற்கான நடைமுறைகளை செய்துவிட்டு பணம் கட்டி அவருடைய பெட்டி மற்றும் சாமான்களை அவருக்கென்று ஒதுக்கப்பட்ட அறைக்கு எடுத்துச் சென்றான்.
அப்போது அங்கு வந்த அந்த நிறுவனத்தின் தலைவர், “ஹலோ ராஜகோபால் என்ன இந்த பக்கம்? எப்படி இருக்கிறீர்கள்? பையன் எப்படி இருக்கிறான்? கல்யாணம் ஆகிவிட்டதா? குழந்தைகள் உள்ளதா?” என சரமாரியாக கேள்விகள் கேட்டபடி அவர் அருகே இருந்த மற்றொரு இருக்கையில் அமர்ந்தார்.
அவர் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் பதில் கூறிவிட்டு பழைய கதைகளை இருவரும் சிரித்து பேசினார்கள். சாமான்கள் கொண்டு வைத்து விட்டு வந்த ரகுராமன் இவர்கள் இருவர் மிக அன்னியோன்யமாக பேசுவதைக் கண்டு ஆச்சரியப்பட்டான் ..
அவருடைய ஆச்சரியத்தை பார்த்த அந்த நிறுவனத தலைவர் “என்ன பார்க்கி? உன் அப்பாவிற்கு உன்னை அறிமுகப்படுத்தியதே நான்தான்” என்று கூற ஒன்றும் புரியாமல் திணற அந்த இக்கட்டான சூழ்நிலையை நிறுவனர் கலைத்தார்,
ரகுராமை பார்த்து “உன் பெற்றோராக இருக்கும் ராஜகோபால் தம்பதிகளுக்கு ஏற்பட்ட விபத்தில் உன் அம்மா குழந்தை பாக்கியம் பெறும் தகுதியை இழந்தார்கள். எனவே உன் அப்பாவை மறுமணம் செய்து கொள்ள வற்புறுத்தினார்கள். ஆனால் உன் அப்பா உன் அம்மாவின் மேல் வைத்துள்ள அன்பினால் சம்மதிக்கவில்லை. உன் அம்மாவின் குழந்தை ஆசை அவர் உடல்நிலையை பாதிக்க படுத்த படுக்கையானாள். அப்போதுதான் உன் அம்மாவும் அப்பாவும் ஒரு குழந்தையை தத்து எடுக்க முடிவு செய்தார்கள் உன் அப்பா அதற்காக இந்த பிரசாந்திற்கு வந்தார். அந்த நேரத்தில் சிலர் அன்று பிறந்த குழந்தையை குப்பை தொட்டியில் கண்டெடுத்து இங்கு கொண்டு வந்து கொடுத்தார்கள். அதைப் பார்த்த உன் தந்தை அந்த குழந்தையை தான் தத்து எடுத்து வளர்ப்பதாக சொல்லி அனைத்து நடைமுறைகளையும் ஒத்துக் கொண்டு அன்று பிறந்த குழந்தையை வாங்கிக் கொண்டு சென்றார், அந்த குழந்தை தான் நீ” என கூறினார்.
“உன்னை எடுத்துச் சென்று உன் தாயிடம் கொடுக்க படுக்கையில் இருந்த உன் அம்மா தேறி எழுந்து விட்டார். உன்னை தத்தெடுத்த விஷயம் அக்கம் பக்கத்தில் பரவவே தாங்கள் இருந்த இடத்தை விட்டு வேறு இடத்திற்கு குடி போய் விட்டார்கள், ஏனென்றால் நீ அனாதை என்று உனக்கு தெரியக் கூடாது என்று” எனக் கூறி முடித்தார்.
அதைக் கேட்ட ரகுராம் முகத்தில் அறைந்து கொண்டு குப்பைத் தொட்டியில் கிடந்த என்னைபெரிய படிப்பு படிக்க வைத்து இன்று பெரிய பதவியில் இருக்கும் என்னை ஒரு நல்ல பெண்ணை மணமுடித்து இன்று ஒரு அழகான ஆண் குழந்தைக்கு அப்பா ஆக்கியுள்ளார். ஆனால் நான் என்ன செய்தேன்? என் அம்மா சென்ற வருடம் ஹார்ட் அட்டாக்கில் இறந்து விட்டார். அதனால் என்அப்பா மனைவி இருந்த துக்கத்தில் உடல் நிலையை சரியாக பார்க்காததால் அவருக்கு *சொரியாசிஸ்* என்ற தோல் நோய் வந்துவிட்டது, நானும் அதை கவனிக்க தவறி விட்டேன்.
அது உடல் முழுவதும் பரவி விட்டது. அதைப் பார்ப்பதற்கு அருவருப்பாக இருக்கவே அவர் என் நண்பர்கள் மத்தியில் வருவதை நான் விரும்பவில்லை. அதைப்பற்றி நானும் என் மனைவியும் பேசிக் கொண்டிருப்பதை கேட்டவர் தானாகவே முன்வந்து தன் மன மாற்றத்திற்காக ஏதாவது ஒரு ஹோமில் சேரவேண்டும் எனக் கூறினார்.
எனக்கும் “பழம் நழுவி பாலில் விழுந்த மாதிரி” ஆயிற்று. என்னை யாரும் குறை கூற மாட்டார்கள் என மனதிற்குள் கூறிக் கொண்டேன். அவரின் ஆலோசனையை என் நண்பனிடம் கூறி ஒரு நல்ல முதியோர் இல்லத்தை கூறும்படி கேட்டேன். அவரும் பிரசாந்தி அனைத்து வசதிகளும் இருக்கும் எனவே அதில் சேர்ப்பது மிகவும் சிறந்தது என்று கூறினார். அதன்படி இங்கு கொண்டு வந்து சேர்க்க முடிவெடுத்தேன்.
எப்படிப்பட்ட பாவி நான் குப்பை தொட்டியில் கிடந்த என்னை கோபுரத்தில் கொண்டு உட்கார்த்தி வைத்த இவரை சொரியாசிஸ் வந்தது அவமானம் என கருதி அவரை குணப்படுத்த நடவடிக்கை எடுக்காமல் அனாதை போல் இங்கு கொண்டு விட பார்த்தேனே நான் ஒரு மகா பாவி எனக் கூறி அழுதான்.
அப்பாவின் காலில் கதறி விழுந்து மன்னிப்பு கேட்டான். அவர் அவனை எடுத்து சமாதானப்படுத்த ரகுராமன் அவரைக் கட்டிக் கொண்டு “இப்படிப்பட்ட ஒரு தந்தை கிடைக்க நான் என்ன பாக்கியம் செய்தேனோ?” எனக் கூறி குலுங்கி குலுங்கி அழுதான்.
இதைப் பார்த்த நிறுவன தலைவர், “ஒவ்வொருவருடைய தாயும் தந்தையும் ஒவ்வொருவருக்கும் *பொக்கிஷம்* போன்றவர்கள். மற்ற செல்வங்களை எல்லாம் நாம் சம்பாதிக்க முடியும், ஆனால் தாய் தந்தையரை சம்பாதிக்க முடியாது. அதுவும் உன் தகப்பனார் ஒரு *அரிய பொக்கிஷம்* உன் தகப்பனார் இன்று வரை நீ ஒரு அனாதை என்பதை சொல்லாமல் வளர்த்திருக்கிறார், அவரை அழைத்துச் சென்று கடைசி காலத்தில் அமைதியாக ஆசையாக வைத்துக் கொள். அதுதான் பிராயசித்தம்” எனக் கூற உண்மையை கூறிய நிறுவன தலைவருக்கு நன்றி கூறிவிட்டு ராஜகோபாலை அணைத்து அழைத்துக் கொண்டு காரின் முன்னிருக்கையில் உட்கார வைத்து சந்தோஷமாக புதிய ரகுராமனாக கிளம்பினான்.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings