in

அங்கையில் அருமருந்து (மரபுக்கவிதை) – பாவலர்  கருமலைத்தமிழாழன்

தன்காயம்  காப்பதற்கே  வெங்கா  யத்தைத்

          தாராள  மாய்உணவில்  சேர்க்க  வேண்டும்

தின்பதினை  உள்வாங்கும்  இரப்பைப்  புண்ணைத்

          திண்ணமுடன்  எலுமிச்சை  சாறோ  ஆற்றும் !

அன்னாசி  பழம்சிறுநீர்  கடுப்பை  நீக்கும்

          அதிகரத்தக்  கொதிப்படக்கும்  அகத்திக்  கீரை

வன்இருமல்  தனையோட்டும்  வெந்தயக்  கீரை

          வளர்கொழுப்பைக்  குறைக்கும்  பன்னீர்  திராட்சை !

 

கல்லீரல்  வலிமைபெறப்  பழம்கொய்  யாவைக்

          காலையிலே  நாள்தோறும்  உண்ண  வேண்டும்

நல்லதொரு  கம்பங்களி  உண்டு வந்தால்

          நம்முடலின்  சூடெல்லாம்  தணிந்து  போகும் !

வல்லதொரு  சுண்டக்காய்  உண்ட  உணவை

          வகையாகச்  செரிக்கவைத்து  நலத்தைப்  பேணும்

முள்ளங்கி  சாறதனைப்  பருகி  னாலே

          முள்குத்தல்  போல்குத்தும்  தலைநோய்  ஓடும் !

 

மூலநோயை  வாழைப்பூ  கூட்ட  கற்றும்

          மூண்டவாத  நோயகற்றும்  அரைக்கீ  ரைதாம்

ஏலக்காய்  வாய்நாற்றம்  மாய  மாக்கும்

          தேனிஞ்சி  குருதியினைத்  தூய்மை  யாக்கும் !

சீலமாக்கும்  பித்தத்தை  நெல்லிக்  காய்தாம்

          சீர்செய்யும்  உடல்எடையை  முட்டைக்  கோசு

ஓலமிடும்  பசியடக்கி  நோன்பி  ருந்தால்

          ஓங்கிநலம்  நோயின்றி  வாழ்வோம்  நன்றே !

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    கரை தொடாத அலைகள் 💗 (நாவல் – அலை 16) – தி.வள்ளி, திருநெல்வேலி 

    அனாதைக் கிழவி (சிறுகதை) – நாமக்கல் எம்.வேலு