அம்பாளின் காதுகள்
லலிதா ஸகஸ்ர நாமத்தில் அம்பாளின் காதுகளின் அழகை வர்ணிக்கும் வரிகள்.
கதம்ப மஞ்சரி கிலுப்த கர்ணபூர மனோஹரா!
தாடங்க யுகளி பூத தபனோடுப மண்டலா!
அம்பாளுடைய ஆற்றல் எல்லாம் இருக்கக் கூடிய பெருமை படைத்தது அந்தக் காதுகளும் அதில் உள்ள தாடகங்களும் தான்
ஆதி சங்கரரும் தவதாடங்க மஹிமா என்று போற்றுகிறார். ஆதி சங்கரர் பிருதிவி சேக்ஷ்த்திரமான காஞ்சிபுரத்தில் அவளுடைய உக்ரத்தை ஸ்ரீ சக்கரமாக பிரதிஷ்டை செய்தார்.
அதே போல் திருவானைக்கா கோவிலில் உள்ள அகிலாண்டாஸ்வரிக்கு அவளுடைய காதுகளில் தாடங்கமாக ஸ்ரீ சக்கரத்தை அணிவித்தார். அர்ச்சனை ஆரதனை எல்லாம் தாடங்கத்துக்குத் தான்.
இரண்டு தாடகங்கள் இரண்டு காதுகளிலும். ஒன்று நக்ஷ்த்திர மண்டலதிற்கு அதிபதியாய் விளங்கும் சூரிய பகவான். மற்றொன்று சந்திரன்.
விழிக்கே அருளுண்டு என்று அபிராமி பட்டர் பாடியவுடன், தன்னுடை சந்திர தாடங்கத்தை கழட்டி வானில் வீசியதும், பௌர்ண்மி நிலவு போல் காட்சி அளித்தது.
அழகான காதுகள் அதில் தாடங்களாக உள்ள சந்திர சூரியர்கள்
அம்பாளின் மூக்கு
பத்மராக சிலா தர்ஸ பரிபாவி கபோலபூ!
நவ வித்ரும பிம்ப ச்ரீ ந்யக்காரி ரதனச்சதா!!
மூக்கு வர்ணனைக்குப் பிறகு கன்னம்.
அம்பாளின் கன்னம் எப்படி இருக்கிறது.பத்மராகக் கல் என்று ஒன்று உண்டு. அதனுடைய குணம் எதிரில் உள்ள பொருளை அப்படியே பிர்திபலிக்கும்.
இபொழுது இருக்கும் கண்ணாடியைப் போல். ஆனால் அம்பாளின் கன்னம் அந்த பத்மராகக் கல்லை ஒன்னுமே இல்லாமல் செய்யக் கூடிய காந்தி படைத்தது.
அந்த இரண்டு உதடுகளும் மேலும் கீழும் சிகப்பாக இருக்கும். எதைப் போல என்றால், ஒரு உதடு செங்காந்தாள்(பிம்ப) மலர் போல சிகப்பாக இருக்குமாம்.
மற்றொரு இதழோ புத்தம் புதிதாக உருவெடுத்த பவழத்தின் சிகப்பு நிறத்தை ஒத்து இருக்குமாம். பட்டுக்கோட்டை பாடினானே முகத்தில் முகம் பார்க்கலாம் அதரத்தில் பவளத்தின் நிறம் சேர்க்கலாம், அந்த மாதிரி.
#ad
அம்பாளின் பாதமும் நடையழகும்
ஸிஞ்ஜான மணிமஞ்ஜீர மண்டித ஸ்ரீ பதம்புஜா !
மராளி மந்த கமனா மஹாலாவண்ய சேவதி:!!
அம்பாளுடைய பாதமும் அவளுடைய நடை அழகயையும் வர்ணிக்கும் வரிகள். அவள் மிகவும் மெதுவாக அன்னப்பட்சியைப் போல் நடந்து செல்கிறாள்.
அப்படி நடந்து செல்லும் போது, பாதங்களில் இருக்கும் கொலுசுகளில் இருக்கும் மணிகள், கிணி கிணி என்று ஓசை எழுப்புகிறது. அந்தப் பாதங்களை வணங்குவோம்
நக தீதிதி ஸ்ஞ்சன்ன நமஜ்ஜன தமோகுணா !
பதத்வய ப்ரபாஜால பராக்ருத ஸரோருஹா !!
அம்பாளுடைய பாதத்தில் எல்லோரும் வந்து வணங்குகிறார்கள். யார் யார் வந்து வணங்கினார்கள்?
தேவேந்திரன், மும்மூர்த்திகள், தேவாதி தேவர்கள், முனிவர்கள் இவர்கள் எல்லாம் வந்து வணங்கினார்கள். அப்படி வண்ங்கியவர்களில் சிலருக்கு தமோ குணம் இருந்ததாம்.
அந்த குணங்கள் எல்லாம் அம்பாளின் கால்களில் உள்ள பத்து விரல் நகங்களிலிருந்து வந்த பிரகாசமான ஒளியின் தன்மையால் நீக்கப்பட்டு விட்டன.
இதைத்தான் அபிராமி பட்டரும் “மனிதரும் தேவரும், மாயா முனிவரும், வந்து சென்னி குனிதரும் கோமளமே கமலாலயனும் மதியுறுவேணி மகிழ்நனும் மாலும் வணங்கி என்றும் துதியுறு சேவடியாய்” என்கிறார்.
அப்படிப்பட்ட பாதங்களை தாமரை மலருக்கு ஒப்பிடுவார்கள்.எனினும் அது பொருந்தாது.
ஏனெனில் தாமரையின் குணம் பகலில் மலர்ந்து இரவிலோ அல்லது பனிமிகுதியாலோ கூம்பி விடும்.
ஆனால் உனக்கு பிறந்த வீடோ ஹிமவான் புத்ரி இமயமலை. புகுந்த இடமோ கைலாச மலை.
இரண்டும் சதா சர்வகாலமும் பனியிலேயே உறைந்து கிடக்கும் இடம். அப்படியிருந்தும் உன்பாதத் தாமரைகள் கூம்புவதே இல்லை, வாடுவதும் இல்லை
“நின் புது மலர்த்தாள் பகலும் தொழுவார்க்கே
நம் சென்னியின் மேல் பத்மபாதம் பதித்திடவே” என்கிறார் அபிராமி பட்டர்.
(தொடரும்)
GIPHY App Key not set. Please check settings