“அஷ்டமீ சந்த்ர விப்ராஜ அளிகஸ்தல சோபிதா”
லலிதா ஸகஸ்ரநாமத்தில் அம்பாளின் அழகான கேசாதி பாத வர்ணனை, அம்பாளின் நெற்றியை வர்ணிக்கும் பகுதி.
அளகம் என்பது நெற்றியின் இரு பக்கங்களின் இருக்கும் பகுதி. அங்கு தான் அம்பாளுடைய சுருண்ட கூந்தல் காற்றில் அழகாக முன்னுச்சியில் இரு புறமும் ஆடிக் கொண்டு இருக்கும்.
சரி அம்பாளுடைய நெற்றி எப்படி இருக்கிறது. அதுதான் “அஷ்டமீசந்த்ர விப்ராஜ தளிகஸ்தல சோபிதா” மாதிரி இருக்கிறது. என்ன சரியாகப் புரியவில்லையா?
கொஞ்சம் விளக்கமாகப் பார்க்கலாமா. அவளுடைய நெற்றி எட்டாநாள் சந்திரன் போல் இருக்கிறது.எல்லோரும் நெற்றியை பிறைச் சந்திரனுக்குத் தான் ஒப்பிடுவார்கள் ஆனால் இங்கு வேறு மாதிரி.
ஆதி சங்கரர் செளந்தர்ய லகிரியில் அம்மா உன் தலையில் ஒரு பாதி “அஷ்டமீசந்த்ர விப்ராஜ தளிகஸ்தல சோபிதா” சந்திரன்மாதிரி இருக்கிறது.
நெற்றியில் மறு பாதி சந்திரன் இருக்கிறது. இரண்டையும் அப்படியே சேர்த்து வைத்துப் பார்த்தால் முழுநிலவாகி விடும். அப்படி பௌர்ணமி பூர்ண சந்திரன் போல இருப்பது தான் உன் முகம் என்கிறார்.
இப்போது புரிகிறதா ஏன் அபிராமி பட்டர் அமாவாசையன்று பௌர்ணமி என்று கூறினார்
அவர் அம்பாளின் முகதரிசனம் செய்து கொண்டு இருந்த போது கேட்ட கேள்விக்கு வந்த பதில்.
பிறைச் சந்திரன் என்று சொன்னால் அது நெற்றியோடு பொருந்தாது. இரண்டு பக்கமும் தூக்கிக்கொண்டு இருக்கும் அழகாக இருக்காது.
ஆனால் பாதி பிறை எட்டம் நாள் சந்திரன் சமமாக இருக்கும். அதை அப்படியே அம்பாளின் நெற்றியாக பாவனை செய்து இருபுறமும் சுருண்ட கூந்தல் காற்றில் அலைபாயும் படி கற்பனை செய்து பார்த்தால் “அஷ்டமீ சந்த்ர விப்ராஜ அளிகஸ்தல சோபிதா” என்ற வரிக்கு அர்த்தம் புரியும்
“முகச்ந்த்ர களங்காப ம்ருகநாபி விசேஷிகா”
அடுத்தபடியாக அம்பாளின் முகத்தைப் பற்றிய வர்ணனை. அவள் முகம் எப்படி இருக்கிறதாம்.
முகம் பூர்ண சந்திரன் போல இருக்கும் உன் முகத்தில், எப்படி சந்திரனில் ஒரு சிறு களங்கம் தென்படுமோ அது போல உன் நெற்றியில் கஸ்தூரி மானிடமிருந்து பெற்ற கஸ்தூரியால் திலகமிட்டு அழகாக ஜ்வலிக்கும் உன் முகம்.
இது தான் “முகச்ந்த்ர களங்காப ம்ருகநாபி விசேஷிகா”
அங்கதன் மன்மதன் இருக்கிறானே அவனுக்கு உருவம் கிடையாது. மனதில் மட்டும்தான் இருக்கிறான்.
அவன் மேல் உள்ள கருணையினால், அவனுக்கு ஒரு விலாஸம் அட்ரஸ் வேண்டுமே, அதற்காக தன்னுடைய முகத்தையே அவனுக்கு வீடாக அளித்தாளாம்.
வீடு என்றால் வாயில் இருக்க வேண்டும், தோரணம் இருக்க வேண்டும் அல்லவா?
அம்பாளுடைய இரு புருவங்களும் தான் அந்த வீட்டின் வாயில் தோரணங்கள். அம்பாளின் முகம் மன்மதனைப் போல அழுகு படைத்தது
புருவங்கள் இரண்டும் வாயில் தோரணம் போன்று இருக்கிறதாம். இது தான் “வதனஸ்மர மாங்கல்ய க்ருஹ தோரண சில்லிகா”
“வக்த்ர லக்ஷிமி பரீவாஹ சலன் மீனப லோசனா”
அடுத்தது கண்களைப் பற்றிய வர்ணனை
அவளுடைய முகத்திலிருந்து வரும் அழகு இருக்கிறதே அது அப்படியே பிரவாகமாகிய நதி போல, அதுவும் ஒரு நதி அல்ல, இரண்டு நதிகள் பெருக்கெடுத்து ஓடிவந்து இரு கண்களாக மாறி விடுகிறதாம்.
ஒரு நதியின் பெயர் தயா.நாம் எவ்வளவு தப்பு செய்தாலும் தாயினும் சாலப் பரிந்து நம்மை மன்னிக்கும் தயாநதி போன்ற கண்கள்.
மூககவி காமட்சி அம்மன் பேரில் 100 ஸ்லோகங்கள் தயா சதகம் என்ற பெயரில் பாடியுள்ளார்.
மற்றோரு நதி கருணா.பக்தர்கள் மீது எப்பொழுதும் கருணை கொண்டவள். ஆக இரண்டு கண்களும் இரண்டு தடாகங்கள் என்றால் அதில் மீன்கள் இருக்க வேண்டாமா?
லலிதா தேவியினுடைய கருவிழியில் உள்ள கரு மணிகள்தான் மீன்கள்.
அது இரண்டும் இந்த பக்கமும் அந்த பக்கமும் ஓடிக்கொண்டே இருக்குமாம்.
இதைத்தான் ஆதி சங்கரர் அப்படியே எடுத்து “வதன சௌந்தர்ய லஹரி” என்கிறார் சௌந்தர்ய லஹரியில்
காளிதாஸரும் “லலிதா கடக்ஷவீக்ஷ் ஐஸ்வர்ய அவ்யாஹ்த” லலிதாவின் கடைக்கண்னின் ஒரு ரேகை பட்டாலும் கூட, செல்வம் கொழிக்குமாம்.
இது தான் “வக்த்ர லக்ஷிமி பரீவாஹ சலன் மீனப லோசனா”
“நவசம்பக புஷ்பாப நாஸாதண்ட விராஜிதா!
தராகாந்தி திரஸ்காரி நாஸாபரண பாஸுரா !!”
கண்ணை விவரித்து விட்டு மூக்கை விட முடியுமா? நாஸாதண்டம் என்பது, மூக்கினுடைய நடு தண்டு பாகமும் மூக்கும் சேர்ந்தது.
அது எப்படி இருக்கிறது என்றால், அப்பொழுது தான் பாதி மலர்ந்தும் பாதி மலராத செண்கப்பூப் போல இருக்கிறதாம்.அதுவும் இளம் சிவப்பு நிறம்தான்.
அப்படிப்பட்ட மூக்கில், அம்பாள் மூக்குத்தி அணிந்திருக்கிறாள். அதை வர்ணிக்க என்னால் முடியாது. இருந்தாலும் முயன்று பார்க்கிறேன்.
வானத்தில் இருக்கும் எல்லா நக்ஷ்த்திரங்களின் ஒளியையும் அப்படியே திரட்டி, ஒரு சிறு மூக்குத்தியாக அணிந்திருக்கிறாளாம்.
மூக்குத்தியின் மகிமை தெரிய வேண்டுமானால், கன்யா குமாரிக்குப் போய் அவளுடைய மூக்குத்தி எவ்வாறு ஜ்வளிக்கிறது என்று பார்த்தால் புரியும்.
கலங்கரை விளக்கம் போன்று ஒரு காலத்தில் கப்பல்களை ஆகர்ஷிக்குமாம் அவளுடைய மூக்குத்தி
முத்து மூக்குத்தியும் ரத்தினப் பதக்கமும் மோகன தங்கத்தினால் முடிந்திட்ட தாலியழகும் அடியானாற் சொல்ல திறமோ அழகான காஞ்சியில் புகழாக விளக்க விளங்கிடும் அம்மை காமாக்ஷி உமையே ஞாபகம்தான் வருகிறது.
“நவசம்பக புஷ்பாப நாஸாதண்ட விராஜிதா!
தராகாந்தி திரஸ்காரி நாஸாபரண பாஸுரா”
#ads
இந்த புத்தகத்தில் உள்ள நவராத்திரி சிறப்பு பதிவுகள் பின் வருமாறு
- நவராத்திரி வழிபாடு உருவான கதை
- கொலுப்படி அமைத்தல் மற்றும் அலங்காரங்கள்
- நவராத்திரி பூஜைக்கு செய்யவேண்டிய முன்னேற்பாடுகள்
- நவராத்திரி ஒன்பது நாட்கள் மற்றும் விஜயதசமி அன்று பூஜை செய்யும் முறைகள் (தனித்தனியே விளக்கமாக)
- நவராத்திரி ஒன்பது நாளுக்கான நிவேதன செய்முறைகள் (26 Recipes)
- நவராத்திரிக்கான பாமாலை
- நவராத்திரி நாட்களுக்கான தேவியின் நாமங்கள் (விளக்கத்துடன்)
- லலிதா சஹஸ்ர நாம விளக்கங்கள்
- அம்பாளின் கேசாதி பாத வர்ணனைக்கான விளக்கங்கள்
- அம்பிகைக்கு ஆயிரம் நாமங்கள்
கொலு பொம்மைகள் / ஸ்டாண்ட் வாங்க Amazon இணைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன
நவராத்திரி தொடர்பான அனைத்து பதிவுகளும் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
GIPHY App Key not set. Please check settings