சஹானா
கவிதைகள்

இதய ஆசிரியருக்கு தாயுமாணவியின் அர்ப்பணிப்பு (கவிதை) – ✍ சௌமியா தட்சணாமூர்த்தி

ஏதும் அறியாது
ஒன்றும் புரியாது 
செய்வது தெரியாது 
விழிநீர் வழிய
தங்களை தேடி
நான் 

காக்கும் கரங்களுக்கும் 
போற்றும் மொழிகளுக்கும் 
அன்பொழியும் விழிகளுக்கும்
கைம்மாறு என் செய்வேன் 
நான் 

எத்தனை அன்பு
எத்தனை அரவணைப்பு
எத்தனை அறிவுரை
எத்தனை ஆலோசனை

முட்களுக்கிடையில்
சிக்கித் தவித்த
ரோஜாவை
தனது மூச்சுக்காற்றினால்
உயிர் பெறச் செய்த
தாயாய் நீ 

உன் பிள்ளைகளைக் கூட
இவ்வாறு கவனிப்பாயா?
என்ற சந்தேகமும்
எழுந்ததுண்டு எனக்கு 

உன்னில் வாழ்ந்த
உன்னுடன் சுவாசித்த
நாட்கள் சில - ஆனால்
இன்றும் கூட
என்னில் ஏற்படும்
ஏக்கம் பல

தவறு செய்திடினும் 
திருத்தி அறிவுறுத்தி
அனைத்தும் கற்றுத்தந்த
கலைமகள் நீ 

ஒருநாள் நீ வரவில்லை எனினும் 
காலைப் பனித்துளி கூட 
காரணம் கேட்கத்தான் செய்கிறது
யாரைத்தேடி அலைந்து
சோர்கிறாய் என்று

அனைத்தையும் தந்து
ஆசிரியராக மட்டுமின்றி
எனக்கென்று யாருமில்லா சூழலில்
நம்பிக்கையான ஓர் நல்பந்தமாய்
நானிருக்கிறேன் என்றுரைத்த
அன்னையாய் நீ 

உன்னிடம் வேண்டுவது
ஒன்றே ஒன்று தான் 
நான் வாழும் வரையின்றி
வீழும் வரையும் கூட 
மாணவியாய் ஏற்பாயா?

குருவின் அறிவை
முழுவதுமாக பெறத்துடிக்கும்
சிஷ்யையின் வேண்டுகோளிது 

உமது கைகளால் செதுக்கப்பட்டு
உமது நினைவுகளை சுமக்கும்
தாயுமாணவியும் இவளே...!

நன்றிகடனை அடைக்கவியலா 
கரத்தால் எழுதப்பட்ட 
அன்பின் வெளிப்பாடும் இதுவே...!


#ad

      

        

#ad 

              

          	

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
%d bloggers like this: