2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
எச்சரிக்கை:
இந்தப் புனைவு திருமண உறவின் துரோகத்தை உள்ளடக்கி எழுதப்பட்டது. அது தொடர்பான சிக்கல்களில் இருந்து மீண்டோரை இது துன்பப்படுத்தலாம், விருப்பமில்லாதவர்கள் தவிர்த்துவிடுவது நன்று. 18+
அவர் நியூயார்க்கில் ஆண்டு இறுதியில் தனது சகோதரியை மீண்டும் சந்தித்தார். இன்னொரு முறை சந்திக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தேன். நான் மன்னிப்பு கேட்க விரும்பினேன், நான் ஏன் பேசுவதைத் தவிர்த்தேன் என்று அவரிடம் சொல்ல விரும்பினேன். அவரும் ஒப்புக்கொண்டு, நாங்கள் சந்திக்க ஒரு அறைக்குப் பதிவு செய்தார்.
நான் செல்லும் வழியில், எங்களின் முந்தைய சந்திப்பு, அணைப்பு, முத்தங்கள் மற்றும் எங்கள் காதல் என எல்லாவற்றையும் நான் நினைவு கூர்ந்தேன். காலங்கள், நேரங்கள் மாறிவிட்டன என்பதையும், இந்த நேரத்தில் நாங்கள் அதுபோன்ற எதற்கும் சந்திக்கவில்லை என்பதையும் நான் உணர்ந்திருந்தேன்.
இப்படி எல்லாம் சொன்னாலும், நான் அவரை அறையில் பார்த்தபோது, அதுதான் அனைத்தும் என உணர்ந்தேன், அவர் என்னால் காதலிக்கப்பட்டவர். அணைப்பதற்காக மெதுவாக அவரை நோக்கி நகர்ந்தேன். ஆனால் இந்த முறை, அவரிடம் இருந்த இறுக்கம் அவருடைய அணைப்பிலும் பிரதிபலிந்தது.
என் விழிகள் கலங்கின; காதலும் கலந்ததாலோ என்னவோ என் கண்ணீரும் கரித்தது; நான் அவரை இழந்து விட்டேன் என்று எனக்குத் தெரியும். எந்த முடிவும் எடுக்க அவர் என்னை வற்புறுத்த விரும்பவில்லை. எனது கடந்தகால வாழ்க்கை என்னும் பொதிகளுடன் அவரது வாழ்க்கையில் நுழைய நான் விரும்பவில்லை.
எங்கள் இதயத்தின் ஆழத்தில் நாங்கள் ஆத்ம தோழர்கள் என்றும்; எப்போதும் ஒன்றாக இருக்க வேண்டும் என்றும் நாங்கள் அறிந்தோம், ஆனால். ரூமி கூறியது போல், ‘காதலர்கள் எங்காவது இறுதியில் சந்திப்பவர்கள் இல்லை. அவர்கள் எல்லா நேரங்களிலும் ஒருவருக்கொருவர் உணர்ந்து கொண்டிருக்கின்றனர்.’ அவரவர் பாதைகளைப் பிரித்துக்கொண்டு நாங்கள் நண்பர்களாக இருக்க ஒப்புக்கொண்டோம், அமைதியாக!
* * *
அதிலிருந்து மூன்று வருடங்கள் ஓடிவிட்டன, இந்த ஆண்டுகளில் நிறைய மாறிவிட்டது. நாங்கள் எங்கள் உறவைத் தொடரவில்லை என்றாலும், அது ஏற்கனவே அதன் வித்தையைச் செய்துள்ளது. உண்மையான அன்பு உங்களை வலிமை கொள்ளச் செய்கிறது என்று கூறுவார்கள் அல்லவா! அது என் கணவருடனான மரித்த உறவிலிருந்து வெளியேறும் மனஉறுதியை அளித்தது.
நான் எனக்கென அடையாளத்தை உருவாக்கினேன்; ஒரு கலைஞராக உருவெடுத்தேன்; பணம் ஈட்டத் தொடங்கினேன்; அதைக் கொண்டு என் குழந்தைகளின் எதிர்காலத்தை என்னால் உறுதி செய்யத் திட்டமிடுகிறேன். நிதி ரீதியாக விடுதலை பெறுவது எவ்வளவு முக்கியம்? இதை நான் முன்பு உணர்ந்திருக்கவே இல்லையே!
அன்று, என் வாழ்க்கை என்னை எங்கே கொண்டு போய் விடுமோ என்கிற கலக்கத்தோடு, தனிமையில் நீடித்திருக்க ஒப்புக்கொண்டு விட்டிருந்தேன். இன்று, வலிமையாகவும், மனஉறுதியோடும், என் வாழ்க்கையின் முழுப் பொறுப்பையும் எடுத்துக்கொண்டு, என் வாழ்க்கையை என் வழியில் பயணித்துக் கொண்டிருக்கிறேன்.
இதற்கிடையில் அவரது பெற்றோர்கள் இன்னும் அவருக்குச் சரியான பெண்ணைத் தேடுகிறார்கள். சில சமயங்களில், நான் அவரிடம் ‘ஆம்’ என்று சம்மதம் தெரிவித்திருந்தால், என் வாழ்க்கை எப்படி மாறியிருக்கும் என்று நான் கற்பனை செய்து பார்க்கிறேன். அவரை திருமணம் செய்வதிலிருந்து எது தடையாக இருக்கிறது என்று அறிய எனக்கு வியப்பாக இருக்கிறது.
நான் அவரை திருமணம் செய்யாமல் அவரது வாழ்வைக் காப்பாற்றினேனா அல்லது அதைக் கெடுத்தேனா? நான் ஒருபோதும் அறிய இயலாது. அவர் மீதான எனது அன்பை என்னால் ஒருபோதும் உறுதிசெய்ய இயலாமல் போகலாம், ஆனால் தேவைப்படும் போதெல்லாம் செவிகொடுக்க எங்களுக்குள் ஒரு நண்பரை ஒருவருக்கொருவர் கண்டுபிடித்துள்ளோம்.
(முற்றும்)
First published at https://www.womensweb.in/2023/02/what-if-i-had-said-yes-to-him-happysolentines-feb23wk3sr/.
ஆசிரியர் : ராஷி ராய்
ஒரு எழுத்தாளர், வலைப்பதிவர் மற்றும் யூடியூபர். rashiroy.com என்கிற தளத்தில் அவர் ஆக்கங்களை வெளியிட்டு வருகிறார். அவருக்குப் புனைகதை மற்றும் கவிதை மீது அலாதி விருப்பம் உண்டு. ஆங்கிலம், ஹிந்தி மற்றும் பெங்காலி மொழிகளில் எழுதி வருகிறார். அவருடைய கதைகள் பெரும்பாலும் அவருடைய சுற்றுப்புறங்களில் நிகழ்ந்த அல்லது அவரால் உற்று நோக்கப்பட்ட நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டவை. அவற்றில் சில உண்மைச் சம்பவங்கள் மற்றும் சமூகப் பிரச்சினைகளைப் பற்றிப் பேசுகின்றன. அவருடைய வார்த்தைகள் அல்லது செயல்கள் மூலம் நேர்மறை எண்ணத்தைப் பரப்புவதற்காக மக்கள் தன்னை நினைவில் கொள்ள வேண்டும் என்கிற விருப்பம் கொண்டவர்.
தமிழுக்கு மொழிமாற்றம்: பாண்டியன் இராமையா.
பாண்டியன் இராமையா kadaisibench.wordpress.com என்கிற தளத்தில் தமிழிலும் dwaraka.wordpress.com என்கிற தளத்தில் ஆங்கிலத்திலும் தொடர்ந்து எழுதி வருபவர்.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings