in

ஆக்ரமிப்பு ❤ (கவிதை) – வைஷ்ணவி

நடத்துனரிடம் சில்லரை கொடுத்துவிட்டு

உன் பெயரை கூறிய பின் தான் உணர்ந்தேன்,

நீ என்னை எவ்வளவு ஆக்ரமித்திருக்கிறாய் என்று!

 

நீயும் MS – Excel லும் ஒன்றுதான்.

உன்னை புரிந்து கொள்ளவும் இயலவில்லை.

நீயின்றி இயங்கவும் இயலவில்லை…….

 

உன்னை நினைத்து

உனக்கே தெரியாமல்

கவிதை எழுதும் ஏகலைவன் நான்!

என்னைக் கட்டுப்படுத்தும் பிரம்மாஸ்திரம் நீ!

 

அதே தெரு,

நாமிருவரும் பட்டம் விட்டு விளையாடிய அதே மொட்டை மாடி,

நீ நட்ட வேப்பமரம்,

நாம் உடைத்த எதிர் வீட்டு ஜன்னல்

என எதுவும் மாறவில்லை.

உன் நினைவுகளுடன் கூடிய நானும் தான்.

தொட்டு விடும் தூரத்தில் நீ இருந்தும்

எட்டி பார்க்க முடியவில்லையே?

 

என்னால்

உன் நினைவு என்னும் சிறையிலடைக்கப்பட்ட எனக்கு

விடுதலை எப்போது?

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    மத்யமாவதி (பகுதி 8 – சிவரஞ்சனி) – சாய்ரேணு சங்கர்

    இரகசிய உயில் (சிறுகதை) – மரு உடலியங்கியல் பாலா