அன்பொன்றே அகிலத்தின் ஆதார ஸ்ருதியென முகநூலில் பகிர்ந்துவிட்டு சுற்றமும் நட்பும் சூழ வகையின்றி முன்வாசல் பூட்டுகிறார்கள் கையேந்தும் பிச்சைக்காரனை காததூரம் விரட்டி விட்டு வாடிய பயிருக்கும் வறண்ட நதிக்கும் பதைக்கிறது மனமென போலியாய் பொங்குகிறார்கள் அக்கம் பக்கத்தினர் யாரென அறியாது ஆயிரம் நண்பர்களென ஆனந்தம் கொள்கிறார்கள் பெற்றோர் உடன்பிறந்தோர் பக்கத்தில் இருந்தும் கூட அவரின் விருப்பங்களை அறிய முயலாது முகநூலில் முகம் தொலைத்து பகிர்வுக்கும் விருப்பத்திற்கும் விசயந் தேடி அலைகிறார்கள் வீணர்களாய் வாழ்கிறார்கள்...!!!
#ad
#ad
GIPHY App Key not set. Please check settings