பூவுலக வாழ்வில்
வரவும் செலவும் வாடிக்கை!
இருப்பும் இழப்பும் இயற்கை!
நிறைவதும் குறைவதும் நிதர்சனம்!
பிறப்பும் இறப்பும் நிச்சயம்!
செல்லத்தான் வேண்டும்
செருக்கோடு கடந்து
வாழத்தான் வேண்டும்
வளமான வாழ்வைத்தேடி
நமக்காக வாழாவிடினும்
பிறருக்காய் வாழ்தல்வேண்டும்!
இருக்கும் கைக்கு நன்றி
அதை இயக்கத்தில் வைத்திருப்பதே!
பார்க்கும் கண்ணிற்கு நன்றி
அதை பயன்படுத்துவதே!
ஊனமில்லா காலுக்கு நன்றி
அதை நடக்கச் செய்வதே!
இயற்கைச் சீற்றமோ
இன்னல் தரும் நோயோ
வருவதும் போவதும் என
எது வந்தால் என்ன?!
உய்விக்கும் இவ்வுலகில்
உடம்போடு மனதும்வாழ
நித்தமும் முயல்வதே
நிதர்சனம் என்றும்!!!
சஹானா” மாத இதழ்களை வாசிக்க விரும்புவோருக்கு, இணைப்புகள் 👇
எழுத்தாளர் சஹானா கோவிந்தின் நாவல்கள் மற்றும் சிறுகதைத் தொகுப்புகளை வாசிக்க விரும்புவோருக்கு, இணைப்புகள் 👇
in கவிதைகள்
வருவதும் போவதும்…! (கவிதை) ✍ ஆர்.பூமாதேவி

Leave a Reply
GIPHY App Key not set. Please check settings
 
 



 
 
 
 
 



ஆம் . உண்மை தான் சகோ . அருமையான படைப்பு . வாழ்த்துகள் .