எலிகள் வாழும் வளையொன்றில்
எலிகள் இரண்டு வாழ்ந்தன!
இரண்டி லொன்று குண்டெலி!
மற்ற வொன்று சுண்டெலி!
அன்று காலை பசியிலே
அதிகம் துடித்த சுண்டெலி
ஆகா ரத்தை நாடியே
வளையை விட்டு நகர்ந்தது!
வளையின் சின்ன வாசலில்
வந்து எட்டிப் பார்க்கையில்
புலியைப் போன்ற பூனையும்
எலியைப் பிடிக்க இருந்தது!
புத்தி யுள்ள சுண்டெலி
பார்த்த தந்தப் பூனையை
சுத்தித் திரும்பி வளைக்குள்ளே
சுறுக்கென ஓடி மறைந்தது!
உள்ளி ருக்கும் நண்பனாம்
உருவம் பருத்த குண்டெலி
அருகில் மெல்லச் சென்றது
அன்னம் உண்ண அழைத்தது!
குண்டெலியும் ஆசையில்
சுண்டெ லியயை முன்னதாய்
வழிந டத்தச் சொல்லிட
வயதைக் காட்டிச் சுண்டெலி
‘மூத்த எலியாம் நீங்களே
முன்னடந்து செல்லுங்கள்
அடிமை உங்கள் பின்னதாய்
அடிப ணிந்து வருகிறேன்…!’
என்று பசப்ப குண்டெலி
அறிவு மயங்கி முன்னதாய்
அடி எடுத்து வைத்ததால்…
அதனைப் பூனை பிடித்தது!
உருவில் சின்ன சுண்டெலி
அறிவில் பெரிய தானதால்
பெரிய குண்டு எலியினை
வென்று வெற்றி பெற்றது!!
This post was created with our nice and easy submission form. Create your post!

GIPHY App Key not set. Please check settings