அடுப்புதனை மூட்டாமல்
அரிசியுலை கொதித்திடுமா
படுத்தக்கால் நடக்காமல்
பாதைதனைக் கடந்திடுமா !
விதைதன்னை விதைக்காமல்
விளைச்சல்தான் விளைந்திடுமா
கதைபேசி அமர்ந்திருந்தால்
காரியம்தான் நடந்திடுமா !
தூரிகையைத் தொட்டிமாமல்
துலங்கிடுமா ஓவியம்தான்
கோரிக்கை வைத்திடாமல்
கொடுத்திடுமா அரசாங்கம் !
உளிகொண்டு செதுக்காமல்
உருபெறுமா சிற்பம்தான்
குளிக்காமல் கடலுக்குள்
குழைமுத்து கிடைத்திடுமா !
பால்தயிரைக் கடையாமல்
பசும்வெண்ணெய் பிறந்திடுமா
நூல்களினைப் படிக்காமல்
நுண்ணறிவு பெருகிடுமா !
முயலாமல் என்றைக்கும்
முன்னேற்றம் வாராது
புயத்தாலே உழைக்காமல்
புகழ்வெற்றி பூக்காது !
This post was created with our nice and easy submission form. Create your post!


GIPHY App Key not set. Please check settings