வைகறைப்பொழுதில் உதித்த என் நிலவே…
வைகை நதியை போல் பறந்த முகம் கொண்ட என் இரத்தினமே..
காந்தத்தைப் போல் இருக்கும் கண்களை கொண்ட என் கண்மணியே..
உன்னை பார்த்தாலே மனதிற்குள் ஆனந்தம் அலை அலையாய் பொங்குகிறது…
நீ பிறந்த வேளை எனக்கு இன்பம் குவிந்தது, செல்வம் கொழித்தது…
நீ பிறந்ததால் என் வாழ்க்கையில் ஒளி வீசியது…
உன்னால் என் வாழ்க்கை வண்ண மயமானது…
மதுரைக்கு வைகை அழகு..
ஆனால் எனக்கோ என் மகளே, நீ தானடி அழகு …
என் அழகின் பெட்டகமே நீ தானடி…
வைகை இல்லாத மதுரையும் இல்லை..
சுவரில்லாமல் ஓவியமும் இல்லை..
எனக்கோ, நீ இல்லாத வாழ்க்கையும் இல்லையடி என் மகளே…
வைகை நதியைப் போல நீயும் பல்லாண்டு காலம் செழிப்போடு வாழ என் வாழ்த்துக்கள்!!!
என் தங்கமே இந்த தாயின் நல் வாழ்த்துக்கள்!!!!
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!



GIPHY App Key not set. Please check settings