in ,

கண்களில் மின்னிடும் மின்னல் (மின்னல் 13) – ஜெயலக்ஷ்மி

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

பகுதி 1    பகுதி 2    பகுதி 3    பகுதி 4    பகுதி 5    பகுதி 6    பகுதி 7    பகுதி 8 பகுதி 9   பகுதி 10   பகுதி 11   பகுதி 12

           

ய்ட்டீன் இயர்ஸ் கம்ப்ளீட் ஆகாத பொண்ணுங்கள ஏன் வேலைல வச்சிருக்கீங்க?” என்று கேட்டாள் நித்யா.

“அவங்கள வேலைக்கு வைக்கல. அவங்க என் சித்தி பசங்க.  நான் அவங்கள வளர்க்கிறேன்” என்றார் அவர்.

“அவங்க உத்திர பிரதேசம் நீங்க மும்பை எப்படி அவங்க உங்களுக்கு சித்தி?”

“அது … அவங்களுக்கு தெரிஞ்சவங்க எங்க அம்மா வீட்டுப் பக்கத்துல இருந்தாங்க”

அவளுடைய மேலாளர் குறுக்கே புகுந்து, “ஏன் சொந்தக்காரங்க வேற வேற ஊர்ல இருக்கக் கூடாதா? இவங்க அம்மா மும்பைல இருக்காங்க. இவங்க சென்னைல இருக்காங்க.”

“சரிங்க ஐயா, ஆனா அவங்க நேடிவ் உத்திரபிரதேஷ், இவங்க நேட்டிவ் மும்பை இல்லையா ஐயா?”

“ஏன் அவங்களுக்கு சொந்தக்காரங்க இவங்களுக்கு சொந்தக்காரங்களா இருக்கக் கூடாது?

“சரி, இருக்கட்டும் எப்படியோ…. அம்மாவுடைய தங்கச்சி பசங்க இல்ல. லீகலா அடாப்ட் பண்ணவும் இல்ல.  வளர்க்கிற நீங்க ஏன் ஸ்லுக்கு அனுப்பல?”

“அவங்களுக்கு ஆதார் கார்ட், பெர்த் சர்டிஃபிகேட் போன்ற எந்த புரூஃபும் இல்ல.  அதனால சேர்க்கல. ஆனா, நானே அவங்களுக்குஇங்லீஸ்லாம் சொல்லித் தர்றேன்” என்றார் பிரபலம். 

“ம்ம்… சொன்னாங்க, டெலிவரி ஐடெம்ஸ் வாங்கி வைக்கவும், ஸைன் போடவும் சொல்லிக் கொடுத்தீங்கன்னு. நீங்க ரொம்ப இன்ஃப்ளூயென்ஸியல் பெர்சன். நீங்க நினைச்சிருந்தா அவங்களுக்கு ஆதார் மற்ற ப்ரூஃபெல்லாம் ரெடி பண்ணி ஸ்கூல்ல சேர்த்திருக்கலாம். அட்லீஸ்ட் கவர்ன்மெண்ட் ஸ்கூல்ல. சித்தி பசங்கனு வேற சொல்றீங்க.  சமையல் வேலை, துணி துவைக்கிறது, டாய்லெட் க்ளீன் பன்றதுன்னு எல்லா வேலையும் அவங்கதான செஞ்சிருக்காங்க?” என்று கேட்டாள் நித்யா.

“ஆமா! நம்ம இருக்ற வீட்ட நம்ம தானா க்ளீனா வச்சிருக்கணும்? இதுல என்ன தப்பு இருக்கு? இதுக்கு முன்னாடி இருந்த பொண்ணுக்கு பதினெட்டு வயசானதும் நான் தான் கல்யாணம் பண்ணி வச்சேன்” என்றார் பிரபலம்.

“ஓ! அப்போ பதினெட்டு வயசு கம்ப்ளீட் ஆகாதவங்களையே வேலைக்கு வைக்றத வழக்கமாவே வச்சிருக்கீங்க!” என்றாள் நித்யா.

“அதில்ல. அதுவும் தெரிஞ்ச பொண்ணுதான். எங்க அம்மா வீட்ல வேல பார்க்கிறவங்க கொண்டு வந்து விட்டாங்க” என்றார் பிரபலம்.

“ஆமா…. இந்த பொண்ணுங்களும் சொன்னாங்க.  யாரோ ஒரு ஆன்ட்டி கொண்டு வந்து விட்டாங்கனு.  யார் அந்த ஆன்ட்டி?  இப்படி வரிசையா பொண்ணுங்கள கூட்டிட்டு வந்து விட்றது? “ என்று கேட்டாள் நித்யா,

“அது எங்க அம்மாவோட ஃபிரண்ட்.  அவங்க இப்போ இல்ல. பாண்டிச்சேரி போய்டாங்க”

“சரி, அவங்க மொபைல் நம்பர் கொடுங்க“

“அது தெரியாது. ரொம்ப நாள் ஆச்சில்ல மறந்திட்டேன்“ என்றார் பிரபலம்

“சரி முடிய ஏன் கட் பண்ணினீங்க? என்று கேட்டார் கோட்டாட்சியர்.

“அது நாங்க ரொம்ப ஆர்தடாக்ஸ் ஃபேமிலி. இவ இந்த ஜன்னல் வழியா வெளிய எட்டிப் பார்த்து, டீ கடைல வேல பாக்கற பையனப் பார்த்து விசில் அடிச்சா. அதனால தான் மிரட்றதுக்காக வெட்டி விட்டேன்” என்றார் பிரபலம்.

“என்ன? இந்த ஜன்னல் வழியாவா? அதுல பாதிய அடச்சி வச்சிருக்கீங்க. அந்த பாதிக்கு மேல அந்தப் பொண்ணுக்கு எட்டுமானே தெரியல. அதுக்கப்புறம் 100 மீட்டர் தள்ளி காம்பவுண்ட் வால் இருக்கு. அதுக்கப்புறம் ரோடு இருக்கு. அதையும் தாண்டி இருக்கிற டீ கடை, இங்கருந்து கண்ணுக்கே தெரியல. அங்க இருக்ற பையன விசில் அடிச்சி கூப்பிட்டாளா?“ என்று கேட்டாள் நித்யா.

“பத்தென்பது வயசுப் பொண்ணு. அப்படியே பாத்திருந்தாலும், அது அவங்களுக்கான சுதந்திரம்“ என்றார் கோட்டாட்சியர்.

“அவங்க அம்மா தான் அடிச்சி வளர்க்க சொல்லியிருக்காங்க. அவங்க டிரெயின்ல வந்துட்டு இருக்காங்க சனிக்கிழமை வந்துருவாங்க. அவங்க வந்தப்புறம் கேட்டுக்கோங்க” என்றார் பிரபலம்.

ஆய்வு அறிக்கையில் கையெழுத்திட மறுத்தார்.  சிறுமிகளின் தாயார் வந்தவுடன் விவரம் தெரிவிக்குமாறு கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டனர்.

வியாழக்கிழமை மாலையே சிறுமிகளின் பெற்றோர் வந்துவிட்டதாகத் தகவல் வந்ததை அடுத்து கோட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்த தீர்மானித்தனர். 

உள்ளே நுழைந்ததும், வழக்குரைஞர் ஒருவர் எதிர்பட்டார். ஓரமாக இருந்த மர இருக்கையில் “அம்மன்” பட வில்லன் ‘ஜண்டா…’ இராமி ரெட்டியின் நகல் மாதிரி ஒருவரும்,  ஒரு பெண்மணியும் அமர்ந்திருந்தனர்.

“இங்க அட்வகேட்டுக்கு வேலை இல்லையே“ என்றாள் நித்யா.

“அவங்களுக்கு லேங்வேஜ் ப்ராப்ளம் இருக்குல்ல, அதுக்காக வந்தேன்“ என்றார் அந்த வழக்கறிஞர்.

“எங்ககிட்ட டிரான்ஸ்லேட்டர் இருக்காங்க, நாங்க பாத்துக்கறோம். உங்கள விசாரணைக்கு அனுமதிக்க முடியாது“ என்றாள் நித்யா

“ஓ.கே.மேடம்! நான் வெளிய இருக்கேன்” என்றார் வழக்கறிஞர்.

“அவங்க ரெண்டு பேரும் யார்? அந்த பொண்ணுங்களோட பேரண்ட்ஸா?” என்று கேட்டாள்.

“அவங்க அம்மாவும், அந்த அம்மாவுடைய அண்ணனும்“ என்றார்.

இருவரையும் மேலே அழைத்துச் சென்றனர். இருவரையும் தனித்தனியே விசாரிக்க உத்தேசித்து, “அந்த ஜண்டா…வை கொஞ்ச நேரம் வெளியே உட்கார வைங்க“ என்றார் கோட்டாட்சியர்

“அவங்களுக்கு மொழி பிரச்சினை இருப்பதால் தான், நான் கூட வந்தேன் அதனால் என்னையும் அனுமதியுங்கள்” என ஆங்கிலத்தில் உரைத்தார், அந்த ஜண்டா.

“நாங்கள் கவனித்துக் கொள்கிறோம் தேவையென்றால் உங்களை அழைக்கிறோம்“ என்று பதிலுரைத்தார் கோட்டாட்சியர்.

கோட்டாட்சியர், நித்யா, காவல் ஆய்வாளர், மொழி பெயர்ப்பாளர், தாசில்தார், தொழிலாளர் ஆய்வாளர் ஆகியோர் ஒரு மூடப்பட்ட அறையில் அமர்ந்திருக்க  அந்த அம்மா உள்ளே வந்தார்.

அவரிடம் விசாரித்த போது தானும், தனது கணவரும் கூலி வேலை செய்வதாகவும், தங்களுக்கு நான்கு பெண்கள், இரண்டு ஆண்கள் என ஆறு பிள்ளைகள் எனவும், தங்களது கிராமத்தில் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாததால், தனது மூத்த மகளையும், தனது நான்காவது மகளையும் பிரபலத்தின் தாயார் வீட்டில் மும்பையில் விட்டு வைத்துள்ளதாகவும், தனது இரண்டாவது மற்றும் மூன்றாவது மகள்களை சென்னையில் பிரபலத்தின் வீட்டில் விட்டு வைத்ததாகவும் கூறினார். 

“வெளியே அமர்ந்திருக்கும் தங்களுடன் வந்த நபர் யார்?” எனக் கேட்டதற்கு, “அவர் எனது அண்ணன்” எனக் கூறினார்.

“எனக்கு உதவி செய்யத்தான் மேடம் என் மகள்களுக்கு பாதுகாப்பு கொடுத்ததாங்க, எனக்கு கால் உடைந்த போதும் (புடவையைத் தூக்கி காலைக் காட்டினார்… கால் சாதாரணமாகத் தான் இருந்தது), எனது கணவரின் மருத்துவ செலவிற்கும், தேவைப்படும் போதெல்லாம் மேடம்தான் பணம் தந்தாங்க“ என்றார் கேட்காமலே.

“அதிருக்கட்டும். நீங்கள் தான் அந்தப் பெண்களுடைய தாயார் என்பதற்கான ஆதாரங்கள்… குடும்ப அட்டை(ரேஷன் கார்டு), ஆதார் அட்டை, பிறப்பு சான்றிதழ்கள் ஏதேனும் இருக்கிறதா?” என கேட்டனர்.

“எதுவும் இல்லை, சிறு வயதிலேயே பெண்களை வெளியூருக்கு அனுப்பிவிட்டதால், எந்த ஆதாரமும் இல்லை” என அந்த அம்மா தெரிவித்தார்.

“13 வயதில் தானே ஒவ்வொரு குழந்தையையும் அனுப்பியிருக்கிறீர்கள்? அதுவரையிலுமா ரேஷன் கார்டு கூட பெறவில்லை?”

“எனக்குப் புரியவில்லை“ எனக் கூறிவிட்டார் அந்த அம்மா.

“உங்க கணவர் பேர் என்ன?“

“அப்பாஸ்“

“ஆனா, பசங்க அவங்க அப்பா பேர் ஜாஹித்னு சொன்னங்களே?“

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    வைசாக் விஜயம் (பகுதி 1) – சுஶ்ரீ

    சிவந்த மேகங்கள் (பகுதி 1) – இரஜகை நிலவன்