2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7 பகுதி 8
வைகறைப் பொழுதிற்கு முன்பே எழுந்துவிட்ட மதி மகேந்திரன், ஆதவன் உதிக்கும் கிழக்கு திசை நோக்கி யோகாசனம் செய்வதற்கு ஆயத்தமானான். முதலில் மேல் தளத்தை சுற்றி நடைபயிற்சி மேற்கொண்டான்.
மூன்றாவது முறை மதில் சுவரின் அருகில் வரும்பொழுது எதேச்சையாக தன் தாயின் அரண்மனை தோட்டத்தில் கண்கள் செல்ல அங்கே ஒரு பெண் நடந்து செல்வது தெரிந்தது.
மகேந்திரன் தன்னை மறைத்துக் கொண்டு கண்களை கூர்மையாக்கி மதில் சுவரின் மேலிருந்து நோக்கினான். அந்த உருவம் தாழம்பூத் தோட்டத்திற்குள் நுழைவது தெரிந்தது.
‘அபாயம்’ என்று மனது சொல்ல விடுவிடுவென மேல் தளத்தின் தெற்கு மூலையில் இருந்த தூணின் அருகில் ஓடினான். தூணில் செதுக்கப்பட்டிருந்த சிம்ம முகத்தின் வாயில் கை வைத்து திருகினான்.
சிம்ம உருவம் நகன்று மூன்று அடி உயர கதவு ஒன்று திறந்தது. அதனுள் வேகமாக இறங்கினான் மதி மகேந்திரன். வளைந்து வளைந்து சென்ற அந்த நீண்ட படிக்கட்டுகள் நேரே தோட்டத்தின் பின்புறம் இருந்த மதில்சுவரில் முடிந்தது.
அங்கிருந்த கதவை திறக்க, வழியை மறைத்திருந்த அடர்த்தியான முல்லைக்கொடிகளை அகற்றி, ஓசையிடாமல் செடிகளின் மறைவிலேயே நடந்தான். சிறிது தூரத்தில் தெரிந்த தாழம்பு தோட்டத்தின் வாயில் கதவருகே யாருமே இல்லை. தான் பார்த்த பெண் எங்கே என்று சுற்றும் முற்றும் தேடினான். அதற்குள் உள்ளே சென்றிருப்பாளோ? என்று அச்சப்பட்டு கதவுக்கு அருகே சென்றான். ஆனால் கதவு வெளியில் தாழிடப்பட்டு இருந்தது.
காவலாளி வரும் ஓசை கேட்டவுடன் வேகமாக இடது புறம் திரும்பி செடிகளுக்கிடையே உட்புகுந்தபோது காலில் ஏதோ இடறியது. குனிந்து அதை எடுத்தான் அதுஒரு முத்துமாலை. அதை இடுப்பில் சொருகிக்கொண்டு காவலாளிகளின் கண்ணில் படாமல் மீண்டும் அதே படிக்கட்டின் வழியே தன் மாளிகைக்கு திரும்பினான். மாளிகையின் மேல் தளத்தில் மாயவண்ணன் தனக்காக காத்திருப்பதையறிந்து அருகில் சென்றான்.
“மகேந்திரா என்ன ஆயிற்று எதற்காக ரகசிய படிகள் வழியே சென்றாய் ஏதேனும் ஆபத்தா?. என்று வினா எழுப்பினான் மாயவண்ணன்.
நடந்ததை கூறினான் மதி மகேந்திரன். “நீ அச்சப்பட்டது சரிதான். தாழம்பு தோட்டத்திற்குள் ஆண்களைத் தவிர, பெண்கள் செல்ல அனுமதி இல்லையே.அப்படி இருக்க எதற்காக அதனுள் செல்ல முயன்றாள் அந்த பெண்? அதுவும் இந்த கருக்கல் வேளையில்?” என்று யோசனையாக கேட்டான் மாயவண்ணன்.
“அதுதான் எனக்கும் தெரியவில்லை. அந்த பெண்ணிற்கு தாழம்பு தோட்டத்திற்குள் இருக்கும் நாகத்தினால் உயிருக்கு ஆபத்து நேரிடுமோ? என்று அச்சப்பட்டுத்தான் நான் விரைந்து சென்றேன். நல்ல வேளையாக அவள் உள்ளே செல்லவில்லை. அதற்குள் யாராவது வந்து அவளை அழைத்துச் சென்று இருக்க வேண்டும். அவள் யார் என்று எனக்கு இப்பொழுது ஒரு யூகம் கிடைத்துள்ளது” தன் இடுப்பில் மறைத்த முத்துமாலையை எடுத்து மாயவண்ணனிடம் காட்டினான் மதி மகேந்திரன்.
“இது யாருடையது ?யார் அவள்? என்று ஆச்சரியமாக கேட்டான் மாயவண்ணன்.
“பெயர் தெரியவில்லை. ஒரு பெண்ணை நேற்று சித்திர கூட்டத்தில் கண்டேன். அவள் அணிந்திருந்த முத்துமாலை தான் இது” என்றான்.
“அது எவ்வாறு உறுதியாக கூறுகிறாய்? சித்திரக்கூடத்தில் நிறைய பெண்கள் நேற்று இருந்தார்கள்”என்றான் மாயவண்ணன் குறும்பு பார்வையுடன் பார்த்துக் கொண்டே.
மதி மகேந்திரன் வெட்கப்பட்டு கொண்டே நேற்று நடந்த சம்பவத்தை கூறினான்.”ஓ… கதை அப்படி போகிறதா? அந்த பெண் உன் மேல் தவறி விழுந்து விட்டதால் அவள் உச்சந்தையில் இருந்து உள்ளங்கால் வரை என்ன அணிந்திருந்தாள் என்பதை நீ அளந்து பார்த்து விட்டாயா?” என்று சிரித்தான். மாயவண்ணன்.
சிரித்துகொண்டே “இல்லை, அவள் கழுத்தில் இருந்த முத்துமாலை என் கழுத்தில் இருந்த ஆபரணத்தோடு கோர்த்துக் கொண்டது. அதை மெல்ல எடுத்து விட்டேன். ஆதலால் இந்த முத்து மாலையை கண்டேன்”என்றான் மதி மகேந்திரன்.
சிவந்த கன்னங்கள் நடந்த நிகழ்ச்சியின் உணர்ச்சியை வெளிப்படுத்தியது. அதைக் கண்ட மாயவண்ணன் மேலும் குறும்புடன் முத்து மாலையை மட்டும் தான் கண்டாயா? இல்லை ….”என்று அவனை சீண்டினான்.
வெட்கமும் கோபமும் ஒரு சேர மதிமகேந்திரன்,” நீ நினைப்பது போல் ஒன்றும் இல்லை. அவள் பெயர் கூட எனக்கு தெரியாது” என்று சொல்லிவிட்டு கீழே இறங்கி தன் அறைக்கு சென்று ஆசனத்தில் அமர்ந்து முத்து மாலையை பார்த்தபடி தீவிர சிந்தனையில் ஆழ்ந்தான்.
“வதனா, எழுந்து விட்டாயா? ஏன் உன் முகம் வாடி இருக்கிறது? நீ ஆழ்ந்த உறக்கத்தில் இருந்ததால் உன்னை எழுப்ப மனம் வரவில்லை. நான் நீராடி விட்டேன். நீயும் செல். நீராடி விட்டு வா உணவருந்திய பின் நம் மாளிகைக்கு திரும்ப வேண்டும்” என்றாள் லலிதாங்கி.
“ம்… “என்று எங்கோ வெறித்துப் பார்த்தபடி பதில் கூறினாள் வதனா.
லலிதாங்கி அவள் தோளை உலுக்கி “வதனா..வதனா என்ன ஆயிற்று உனக்கு? நான் பேசுவது கேட்கிறதா ?ஏன் இவ்வாறு இருக்கிறாய்?” என்று பதட்டத்துடன் வினவினாள் லலிதாங்கி.
சகஜ நிலைக்கு திரும்பிய வதனா லலிதாவை பார்த்து “பயப்படாதே, எனக்கு ஒன்றும் ஆகவில்லை .என்னுடைய முத்துமாலையை காணவில்லை” என்றாள்.
“அட… ,ஆமாம் நான் இப்பொழுதுதான் கவனிக்கிறேன். அது உனக்கு மிகவும் பிடித்த முத்துமாலை அல்லவா? இங்கே தான் எங்கேயாவது விழுந்து இருக்கும் நான் தேடித் தருகிறேன்” என்றாள் லலிதாங்கி.
“இல்லை, எனக்கு ஞாபகம் இருக்கிறது. நான் வேகமாக நடக்கும் பொழுது செடி கழுத்தில் மாட்டிக் கொண்டு அதை இழுத்து கீழே விழுந்தது. ஆனால் என்னால் அதை எடுக்க முடியவில்லை என்னை யாரோ கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு வேகமாக நடந்தார்கள்.” என்றாள் யோசனையான பார்வையுடன்.
“நீ என்ன சொல்கிறாய்? எங்கே சென்றாய்? யார் உன்னை இழுத்துச் சென்றது?” வினாக்களை அடுக்கினாள் லலிதா பயந்த குரலில்.
“இரு..எல்லாம் சொல்கிறேன். இங்கு எல்லோரும் நடமாடிக் கொண்டிருக்கிறார்கள். வா, தனியாக எங்கேயாவது செல்லலாம். என்று லலிதாவை அழைத்துக் கொண்டு வதனா மேல் தளத்திற்கு சென்றாள்.
“லலிதா அன்று ஒரு நாள் விடுதியில் சொன்னேன் அல்லவா..? அதேபோல் நேற்று இரவும் நடந்தது. யாரோ ஒரு பெண் என்னை வந்து எழுப்பினாள். மலர்கள் இதழ் விரித்து மலர்வதை நீ பார்த்திருக்கிறாயா? என்று கேட்டாள். நான் இதுவரை அவ்வாறு கண்டதில்லை என்றுகூறினேன். வா, தோட்டத்தில் பூ மலர்வதை நான் உனக்கு காண்பிக்கிறேன். என்று அழைத்துச் சென்றாள்” என்றாள்.
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings