in ,

காதல் ரோஜாவே! (சிறுகதை) – சாமுண்டீஸ்வரி பன்னீர்செல்வம்

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

நீ உன் தங்கை கல்யாணத்துக்கு நான்கு ஐந்து நாள் முன்னதாக போய்விடு, சிறிது பணத்தை உனக்கு நான் புரட்டி தருகிறேன் என்று தன்னுடைய காதல் மனைவி பிரியாவிடம் சொல்லிக் கொண்டிருந்தான் பிரபு.

நான் தனியாக போகவில்லை, நீங்களும் கூட வந்தா தான் நான் போவேன். திருமணத்திற்கு முதல் நாள் கூட போகலாம் ஒன்னும் அவசரமில்லை என்றாள் பிரியா.

உன்னுடைய அப்பாவும் சித்தியும் தானே பத்திரிக்கை வைத்து கூப்பிட்டார்கள், அவர்கள் தானே தேடி வந்தார்கள், அதனால் நீ போவதில் தப்பில்லை என்றான் பிரபு.

என்னுடைய சித்தி காரியமாகத்தான் என்னை அழைத்து இருப்பார்கள். நிச்சயம் பண்ணும் போது ஊரையே கூட்டி மண்டபத்தில் தானே செய்தார்கள் அவர்களுடைய மகளுக்கு. அப்ப மட்டும் நம்முடைய வீடு வழி தெரியவில்லையா! நிச்சயத்திற்கு  வந்த போது நாலு பேர் ஏதாவது கேட்டு இருப்பார்கள், அதனால் யாரும் எதுவும் சொல்லி விடக் கூடாது என்று திருமணத்திற்கு பத்திரிக்கை வைத்து விட்டார்கள் என்றாள் பிரியா.

என்னதான் இருந்தாலும் நான் முதல் தாரத்து பெண் தானே, அதனால் தான் அந்த வேறுபாடு. என் அம்மாவின் நகைகளை எனக்கு கொடுக்காமல் அவங்க பொண்ணுக்கு போட்டு விடுகிறார்கள்.

அம்மா எப்போதும் காதில் போட்டு இருக்கும் பழைய தோட்டை மட்டும் எனக்கு கொடுத்தார்கள் என்று தன் கணவனிடம் புலம்பினாள் பிரியா.

சரி பரவால்ல விடு, அவளும் உன் தங்கை தானே என்று  கணவன் கூற நான் என் தங்கையை குறை சொல்லவில்லை அவர்கள் நம்மிடம் நடந்து கொண்ட முறை தான் சரியில்லை.

நமக்கு திருமணம் செய்து வைத்ததோடு சரி, ஒரு வருடம் முடிந்து கூட ஒரு சீரும் நமக்கு செய்யவில்லை. என்னுடைய மாமனார் மாமியார் நல்லவர்களாக இருப்பதால் நிலைமை அறிந்து பிரச்சனை இல்லாமல் போய்விட்டது. இதே போல் வேறு ஒருவராக இருந்தால் என்னை எவ்வளவு கேவலமாக பேசி இருப்பார்கள், இதற்கெல்லாம் காரணம் பணம் மட்டும்தான்  என்றாள் பிரியா.

சரி பழசை விட்டுத் தள்ளுமா, ஆக வேண்டியதை பார்க்க வேண்டும். நம்மிடம் அளவுக்கு மீறிய வசதி இல்லை. ஆனால் மூன்று வேளையும் நன்றாக சாப்பிட்டு கடன் இல்லாமல் நிம்மதியாக இருக்கிறோம் தானே அதுதான் நமக்கு முக்கியம் என்றார் கணவர்.

உன்னுடைய தங்கச்சிக்கு சீர்  ஏதாவது செய்ய வேண்டும், பணம் ஒரு இடத்தில் கேட்டிருக்கிறேன் அவர்கள் இரண்டு  மூன்று நாட்களில் தருகிறேன் என்று சொல்லி இருக்கிறார்கள். அவர்கள் எவ்வளவு பணம் தருகிறார்கள் என்பதை பொருத்து சீர் செய்து கொள்ளலாம் என்றார் கணவர் பிரபு.

கடன் வாங்கி சீர் செய்ய வேண்டிய அவசியம் இல்லை, சேமிப்பில் என்னுடைய பணம் இருக்கிறது. அந்த பணத்தை வைத்து அவளுக்கு ஒரு புடவையும் சாப்பாடு செய்து போடுவதற்கு சிறிது பணமும் வைத்து கொடுத்து விடுவோம் என்றாள் பிரியா.

இல்லம்மா உனக்கு இருப்பது ஒரே தங்கை மட்டும் தானே, இனி அடுத்தபடியாக  கல்யாணம் எதுவும் கிடையாது. அதனால் அவளுக்கு சிறப்பாக அரை பவுனில் மோதிரம் எடுத்து கொடுத்து விடலாம் என்றான் பிரபு.

தேவையே இல்லைங்க, நான் சேமித்து வைத்திருக்கும் பணத்தில் கால் பவுனில் ஒரு மோதிரம் எடுத்துவிட்டு, மீதி பணத்திற்கு புடவை எடுத்து விடலாம்.  நீங்கள் வைத்திருக்கும் பணத்தில் போக்குவரத்து செலவை  சரி செய்து கொள்ளலாம் என்றாள் மனைவி பிரியா.

உன்னிடம் ஏது அவ்வளவு பணம் என்று கணவர் பிரபு கேட்க,  நீங்க செலவுக்கு கொடுக்கும் பணத்திலிருந்து  சிறிது எடுத்து வைத்துக் கொள்வேன். உங்களுடைய அம்மா நம் வீட்டுக்கு வந்துவிட்டு செல்லும்போது 500,  1000 எனக்கொடுத்து செலவுக்கு வைத்துக் கொள் என கொடுப்பார்கள். அப்படி சேர்த்து வைத்த பணம் தான்  12000 ரூபாய் வைத்திருக்கிறேன் என்றாள் பிரியா.

என் பொண்டாட்டி அறிவு யாருக்குமே வராது என்று கணவர்  கூற வெட்கத்தில் கணவனின் கையைப் பிடித்து ரொம்பவும் புகழாதீங்க எனக்கு கூச்சமாக இருக்கிறது என்றாள் பிரியா.

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    கவித்துவமாய் ஒரு கிரைம் (சிறுகதை) – முகில் தினகரன், கோவை

    சிம்மா… நரசிம்மா (சிறுகதை) – முகில் தினகரன், கோவை