in ,

முகநூல் நட்பு (சிறுகதை) – சாமுண்டீஸ்வரி பன்னீர்செல்வம்

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

இந்த வீடு தானங்க சாரதா வீடு, என காஞ்சனா கேட்க , ஆமாம் நீ யாரு என சாரதாவின் கணவர் பிரபு கேட்டுக் கொண்டிருந்தார்.

இவர் ஆபீஸ் கிளம்பும் நேரத்தில் யார்  வந்து பேசிக் கொண்டிருக்கிறது என வெளியே வந்தாள்  சாரதா.

அம்மா சாரதா உன்னை தேடி தான் வந்திருக்கிறார்கள் என சொன்னார் தன் மனைவியிடம் பிரபு.

நான் யார் என்று விசாரித்துக் கொள்கிறேன்.  நீங்கள் கிளம்பி போங்கள், மணி ஆயிடுச்சு என்று  தன் கணவரை அலுவலகத்திற்கு கிளம்பச் சொன்னாள் சாரதா.

கணவர் சென்ற பிறகு சாரதா, வந்த பெண்ணிடம் நீ யாருமா?  உன்னை எனக்குத் தெரியாது என்று கேட்க, அதற்கு அந்தப் பெண் காஞ்சனா உங்களுக்கு என்னை தெரிய வாய்ப்பில்லை, ஆனால் உங்களை என்னுடைய நெருங்கிய தோழிக்கு தெரியும் என்று சொன்னாள்.

நெருங்கிய தோழியா, அப்படி யாரும் எனக்கு தெரியலையே என்றாள் சாரதா.

முகநூலில் உங்களுக்கு பழக்கமான திவ்யாவின் நெருங்கிய தோழிதான் நான். என்னுடைய பெயர் காஞ்சனா.  நான் என் தோழியிடம் மதுரைக்கு செல்கிறேன் என்று சொன்னேன். அவர்கள் தான் பூக்கள், பழங்கள் என வாங்கி உங்களுக்கு கொடுத்திருக்கிறார்கள். இதை வாங்கிக் கொள்ளுங்கள், நான் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு போய்விட்டு நாளைக்கு ஒரு அழகர் கோயிலில் ஒரு திருமணம் இருக்கிறது என சொல்லிக் கொண்டே பையில் இருந்த பழங்களை எடுத்துக் கொடுத்தாள் காஞ்சனா.

ஒரு நிமிடம் எதையும் யோசிக்காமல் தன்னுடைய முகநூல் நட்பு தான் கொடுத்திருக்கிறார் என்று வெளியே வைத்து பேசுவது சரியில்லை என காஞ்சனாவை வீட்டிற்குள் அழைத்து சென்றாள் சாரதா.

குடிப்பதற்கு மட்டும் தண்ணீர் கொடுங்கள் என்று கேட்க

ஒரு ஐந்து நிமிடம் இருங்கள். நான் உங்களுக்கு காபி போட்டுக் கொண்டு வருகிறேன் என்று சொல்லிக் கொண்டே சமையல் அறைக்குள் நுழைந்தாள் சாரதா.

அமர்ந்திருந்த காஞ்சனா சமையலறைக்குள் நுழைந்து சாரதாவிடம் உங்களுடைய பூஜை அறையை பற்றி அடிக்கடி என்னுடைய தோழி சொல்லிக் கொண்டே இருப்பார்கள். கோமாதா  வெள்ளியில் நீங்கள் வைத்திருந்ததையும் அதனுடைய முகம் அழகாகவும் அம்சமாகவும் இருந்ததை சொல்லிக் கொண்டே இருப்பார்கள்.

அப்படியா,  முகநூலில் பூஜை அறையைப் பற்றிய ஒரு போட்டி வந்தது அந்தப் போட்டிக்கு என்னுடைய பூஜை அறையை போட்டு போட்டியில் கலந்து கொண்டேன். அதில் எனக்கு முதல் பரிசு கிடைத்தது என மன மகிழ்ச்சியுடன் சொல்லிக் கொண்டிருந்தாள் சாரதா.

உங்களுடைய வெற்றியை குறித்து என்னுடைய தோழி என்னிடம் பகிர்ந்து கொண்டாள் என்றாள் காஞ்சனா.

ஓஹோ! அப்படியா எல்லாவற்றையும் சொல்லிவிட்டாளா என்று மகிழ்ச்சியுடன் பேசிக் கொண்டிருக்கும் போதே, காஞ்சனா தன்னுடைய கைப்பையில் வைத்திருந்த கத்தியை எடுத்து மிரட்டி கழுத்தில் கிடந்த  தாலி கொடியையும், கையில் அணிந்திருந்த வளையல்களையும் கழற்றி தரச் சொல்லி மிரட்ட அனைத்தையும் கழற்றி கொடுத்துக் கொண்டே பூஜை அறை கதவில் குமிழ் போல இருக்கும் பட்டனை தொட்டவுடன் அலாரம் அடிக்க அருகே குடியிருப்பவர்கள் அனைவரும் ஏதோ ஆபத்து என்பதை உணர்ந்து சாரதாவின் வீட்டை நோக்கி வந்தார்கள்.

சாரதா வீட்டின் கதவை தட்ட பயந்து போன காஞ்சனா நன்றாக மாற்றிக் கொண்டோமே என தப்பிப்பதற்கு வழியை  பார்த்தாள்.

சாரதா கதவை திறந்து  நடந்த நிகழ்வுகளைசொல்ல காஞ்சனாவின் கையில் வைத்திருந்த நகையை பார்த்ததும் தர்ம அடி கொடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்கள்.

முன் பின் தெரியாத ஒரு பெண்ணை நீங்கள் உள்ளே விடலாமா என்று மற்றவர்கள் கேட்டதற்கு

வந்தவள் என் வீட்டு பூஜை அறையை பற்றி தெளிவாக சொன்னதால்தான் உண்மை என நம்பினேன் என்றாள் சாரதா.

முகநூல் பக்கம் உங்களுடைய வீட்டின் அமைப்பைப் பற்றி பகிர்ந்து கொள்ளாதீர்கள். சரியாக அறிந்து கொண்டு இது போல் திட்டமிட்டு திருட வருகிறார்கள். இனிமேலாவது உஷாராக இருங்கள் என சொல்லிவிட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் வீடு திரும்பினார்கள்.

தன்னுடைய கணவனுக்கு கைபேசியில் அழைத்து நடந்த விவரம் அனைத்தும் சொல்ல

இனிமேலாவது யாரையும் நம்பாமல் உஷாராக வீட்டில் இரு என்று சொல்லி கைபேசியை வைத்து விட்டான் சாரதாவின் கணவர் பிரபு.

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    பார்க்கர் பேனாவும் பாரத்வாஜ கோத்திரமும் (பகுதி 6) – வைஷ்ணவி

    சோறு இங்கே, சொத்து அங்கே! (சிறுகதை) – சாமுண்டீஸ்வரி பன்னீர்செல்வம்