2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
ஒன்பது கோளும் ஒன்றாய் காண பிள்ளையார்பட்டி வர வேண்டும் ரிங்டோன் ஒலித்துக் கொண்டே இருந்தது.
“அந்த போனைத்தான் எடேன்டி” என்று மீனா சத்தம் போட்டார்.
“போம்மா, எனக்கு டைப் கிளாசுக்கு டைமாச்சு” என்று கூறிக் கொண்டே போனை அட்டெண்ட் செய்தாள்.
“மாமா! வண்டி காவேரி பாலம் வந்துடுத்து. நீங்க வந்தறேளா? என போனில் குரல் கேட்டது. இதுவரை கேட்காத குரலாகவும் கம்பீரமாகவும் இருந்தது.
ஓ அந்த நவநீதனா இருக்கும் என நினைத்தபடி ” போன் பண்ணுனா, இன்னார் பேசறேன் இன்னார் வேணும்னு சொல்லனும். நீங்க பாட்டுக்கு பேசிண்டே போறேள்” என துடுக்காக பேசினாள்.
“சுந்தரம் மாமா இல்லையா?”
“அப்பா பூஜைல இருக்கார். இன்னும் 20 நிமிஷத்துல வண்டி ஜங்சன் வந்துடும். நீங்க இறங்கி வெயிட் பண்ணுங்கோ. மூணாவது பிளாட்பாரம்னு அப்பாட்ட சொல்லிடறேன். அதுக்குள்ள அவர் வந்துடுவார்” என மூச்சு விடாமல் பேசினாள்.
” எப்படிங்க? மூணாவது பிளாட்பாரம்னு சொல்றீங்க?”
” எங்க ஊர் ஜங்ஷன்ல இருக்கறதே நாலு பிளாட்பாரம் தான். காவேரி பாலம்னு நீங்களே சொல்லிட்டீங்க, சேலம் மார்க்கமா தான் வரணும். அப்படி வர வண்டி மூணுல தான் நிக்கணும். சரி சரி அப்பாட்ட சொல்லிடறேன்” என பதிலை எதிர்பாராது போனை கட் செய்தாள்.
மறுபுறம் நவநீதன் சரியான வாயாடியா இருப்பா போல என தனக்கு தானே பேசிக் கொண்டு, சிரித்தபடியே அலைபேசியை அமர்த்தினான்.
அம்மாவிடம் தகவல் சொல்லி விட்டு காயத்ரி சிட்டாக பறந்தாள். சரியான அசமஞ்சமா இருக்கும் போல என்றபடியே வாசலை நோக்கி நடந்தாள்.
வண்டி பிளாட்பாரத்தில் நுழைந்தது. அதிலிருந்து இறங்கியவர்களில் நவநீதனை தேடினார் சுந்தரம். ரொம்ப தேட வேண்டிய அவசியமில்லாது, அவனே அருகில் வந்து, “ரொம்ப நேரம் நிக்கறீங்களா மாமா?” என்றான்.
“அடடா வந்துட்டியாப்பா, வா! வா! ஏற்காடு எக்ஸ்பிரஸ் எப்பவும் கன் டைம். காலைல ஆறு மணிக்கெல்லாம் டாண்ணு வண்டி ஈரோடு வந்துடும்”.
“அது சரி நீ எப்போ டியூட்டில ஜாயின் பண்ணனும்?” என்றார் சுந்தரம்.
” நாளைக்குதான் மாமா. ரூம் மற்றும் சாமானம் அரேன்ஜ் செய்யனும். அவசரத்துக்கு பக்கத்துல கடை கண்ணி இருக்கானு பாக்கனும்.புது இடம் புது மனுஷங்க செட்டாகனுமே மாமா. அதான் ஒரு நாள் முன்ன வந்துட்டேன்.”
“அதுவும் சரிதான் பா.அரக்க பரக்க இல்லாம நிதானமா செய்யலாம்” என்றவாரே இருவரும் பைக் ஸ்டாண்டுக்குள் நுழைந்தனர்.
வரும் வழி முழுக்க சுந்தரேசன் பேசிக் கொண்டு வந்தார்.
சாலையின் நடுவிலிருந்த காளை மாடு சிலையை நவநீதன் ஆச்சரியமாக. பார்த்ததை கவனித்த சுந்தரேசன், “என்னப்பா பார்க்கிற? இந்தியாலயே பிரசித்தியான காளை இனம் காங்கேயம் காளை தான்.காங்கேயம் முதல்ல ஈரோடு மாவட்டத்துல தான் இருந்திச்சி. என்னமோ இப்ப சமீபத்துலதான் ஈரோட்டுல இருந்து பிரிச்சி திருப்பூரோட இணைச்சுட்டாங்க” என்றார்.
பத்து நிமிட நேர பயணத்தில் வீட்டை அடைந்தனர்.
இருவரையும் வரவேற்ற மீனாட்சி காபி கொடுத்தார்.
“குளிச்சிட்டு வாப்பா, டிபன் ரெடியா இருக்கு.மதியம் சாப்டுட்டு வெயில் தாழப் போகலாம்” என்றார் பாட்டி.
” இல்லை பாட்டி ரூமெல்லாம் அரேன்ஜ் செய்யணும். இங்க தானே இருக்கேன். அடிக்கடி வரேன். இப்ப டிபன் சாப்பிட்டுவிட்டு கிளம்பறேன்” என்றான்.
பாட்டி! அழைத்துக் கொண்டே காயத்ரி வந்தாள்.
“வாடி குழந்தே! கை கால் அலம்பிட்டு வா! காபி தரேன்” என்றார் பாட்டி.
“அம்மா எங்க பாட்டி காணோம்?”
“அந்த நவநீதனை உங்கப்பா காலைல ஜங்ஷன்ல இருந்து கூட்டிட்டு வந்தான்.நானே தனியா சமைச்சு சாப்பிட்டுக்கிறேனு சொன்னதால வேண்டிய சாமான் வாங்க மூணு பேரும் கடைவீதிக்கு போயிருக்கா. அப்படியே அவன் ரூமுக்கு போய்ட்டு தான் வருவா. நாம சாப்புட்டுட்டு தூங்கலாம் வா”.
“சரி பாட்டி எனக்கும் தூக்கம் வருது. காலைல 6 மணிக்கே டைப் கிளாஸ் போகணும். வா தூங்கலாம்”.
“குட்டி! காதை நன்னா மூடிக்கோ. தை பனி தரை தட்டும். மாசி பனி மரமே நடுங்கும்பா.என்னா குளிரு! என்றபடியே பாட்டி தூங்கப் போனார்.
நவநீதன் ஈரோடு வந்து வேலையில் சேர்ந்து இருபது நாட்கள் இருக்கும். தினமும் காலை மாலை என இரு நேரமும் சுந்தரத்திடம் தொலைபேசியில் பேசி விடுவான்.பெரும்பாலும் அந்த போனை காயத்ரி தான் எடுப்பாள்.வெடுக்காகவும் துடுக்காகவும் பேசி விட்டு அப்பாவிடம் போனைத் தருவாள்.
மீனாட்சி கூட சத்தம் போடுவார். “ஆம்பிளை பிள்ளை எவ்வளவு அடக்கமா மரியாதையா நடந்துக்கிறான். நீயும் தான் இருக்கியே தூபரதண்டி” என திட்டுவார்.
“இப்படியே எல்லார்ட்டயும் பட்டாசு மாதிரி பேசு. போற இடத்துல ரொம்ப மெச்சிப்பா”.
இது எதையும் காதில் வாங்காமல் அவள் பாட்டுக்கு டிவி பார்த்துக் கொண்டே இருந்தாள். இரவு சன் செய்தியை பார்த்தவுடன் திடிரென சிரித்தாள்.
” எதுக்குடி இப்படி சிரிக்கறே?”
“இல்லை சொன்னா நீ கோச்சிப்ப”
“பரவால்ல சொல்லு”
“செய்திகள் வாசிப்பது நவநீதன்னு சொல்லி பார்த்தேன். அதான் சிரிப்பு வந்துச்சி. நைட் எட்டு மணி ஆனா போன் வந்துருமே இன்னும் காணலியேனு நினைச்சேன்.”
” மதியமே பேசிட்டான் காயத்ரி. உடம்பு சரியில்லையாம். மாத்திரை போட்டுருக்கேன் மாமானு சொன்னான்.அதான் கூப்பிடல போல.”
“நாளைக்கு முடிஞ்சா போய் பார்த்துட்டு வரேன்” என்றார் சுந்தரேசன்.
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings